ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2023

சிதம்பரத்தில்… திருமூலர் சொன்ன “திருமந்திரம்”

அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்… கண்ணன் வழிகாட்டிச் செல்கின்றான்… என்றால் நம் கண்கள் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றது என்று காட்டுகிறார்கள்.

இங்கே மாடு வருகின்றது… மனிதன் வருகின்றான்… அவன் தவறாகப் பேசுகிறான்… என்றும் ஒரு காரை ஓட்டிச் செல்லும் பொழுது
1.ஒருவன் குறுக்கே வருகின்றான் வந்தால் மோதிவிடும் என்று கண்கள் தான் உபதேசிக்கின்றது.
2.வண்டியை நீ இப்படி ஓட்டு என்று அந்த உணர்வுடைய நிலைகளை அங்கங்களை கைகளை இயக்கச் செய்வது கண்கள் தான்…!

அதாவது…
1.நம் கண் பார்க்கின்றது… அந்த உணர்வினை இழுக்கின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு “அங்கங்களை இயங்குகிறது…”

எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நாம் இயங்கினாலும் “இந்த உணர்வுகள் வடிகட்டப்படுகிறது…”

இதைப் போன்று அவன் (கண்கள்) கொடுக்கும் உபதேசத்தின் தன்மை தன்னைக் காக்கும் உணர்வாக எடுக்கப்படும் பொழுது… தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அதே சமயம்… ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்தத் தாக்கும் உணர்வுஅவனைத் தாக்கும் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றது.

அவனை அழிக்க வேண்டும் என்ற நிலையில் சிந்திக்காது செயல்படும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டுகிறார்கள். விநாயகர் தத்துவத்தில் நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவே உனக்கு வாகனமாக அமைந்து நீ அதுவாக ஆகின்றாய் என்று காட்டுகிறார்கள். இதை ருத்ர தாண்டவம் என்று திருமூலர் காட்டியுள்ளார்.

1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் எப்படித் துடிக்கின்றதோ
2.நாம் எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அந்த அங்கங்களைப் பாசமாக அணைக்கின்றதோ
3.நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படியோ
4.அதை எல்லாம் நடனங்களாகக் காட்டி… அபிநயங்கள்…!
5.அதாவது… தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
6.அந்த நரம்பியல்கள் எப்படி நாதத்தின் நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத்தான் (ஏனென்றால் அங்கங்களை இயக்குவது நரம்புகள் தான்) ஒலி ஒளி என்ற நிலையில்
7.நாதத்தைப் பற்றி… அந்த நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
8.ஒலி ஒளி அதற்குள் எத்தனையோ உட்பொருள்கள் அடங்கியுள்ளது.
9.ஒலியைப் பற்றி எத்தனையோ வியாக்கியானங்கள் செய்யலாம்…
10.ஆனால் நம் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று அந்த மெய் ஒலி(ளி)யைக் காட்டியது சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்.

விண்ணிலே தோன்றிய அந்த உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது ஓங்காரமாகிப் (ஓ…ம்ம்ம்ம்) பல நிலைகள் ஆகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்குகிறது.

ஒவ்வொரு தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்ட உடனே அந்த இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்…
1.சுவாசிக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிரணுக்களின் இயக்கமும்
2.அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
3.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருமாற்றமும்
4.அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்… ஒலியின் தன்மை கொண்டு “ஒளியாக நீ எவ்வாறு ஆவது…? என்று வெளிப்படுத்திய ஸ்தலம் தான் இது.

அந்த உட்பொருளை நாம் இன்னும் காண முடியாது தேடிக் கொண்டிருக்கின்றோம். புரியவில்லை என்று எண்ண வேண்டாம்…! நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு)

ரோட்டிலே செல்லும் பொழுது எத்தனையோ உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. காரணம் நமக்குள் 1008 குணங்கள் இருக்கின்றது பார்க்கப்படும் பொழுது இரக்க மனம் கொண்டு “ஐயோ இப்படி ஆகிவிட்டதே…!” என்று எத்தனையோ எண்ணுகின்றோம்.

மனிதரை உருவாக்கிய அந்த 1008 நல்ல குணங்களை வைத்துத் தான் அடுத்தவர்களிடம் நாம் என்ன ஏது என்று கேட்டறிகின்றோம். அப்போது
1.நல்ல குணத்துடன் அது சேர்ந்து வடித்து அந்த நல்ல குணமும் ரிப்பேர் ஆகிவிடுகின்றது.
2.அந்த நல்ல குணத்தை எண்ணும் போது அந்த வேதனை பயம் ஆத்திரம் கோபம் எல்லாமே வருகின்றது.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை.

பிறருடைய குறைகளையோ அவர்கள் படும் துன்பங்களையோ தவறான செய்திகளையோ பார்க்கின்றோம். பத்திரிகை டிவிகளைப் பார்க்கின்றோம் உலகம் இப்படி இருக்கிறது…? நாளைக்கு என்ன ஆகுமோ…! என்று வர்ணனை செய்திருப்பார்கள்.

இங்கே திருடி விட்டார்கள் அங்கே கொன்று விட்டார்கள் அடித்து நொறுக்கொ விட்டார்கள் என்று எத்தனையோ சம்பவங்களை நாம் பார்க்க… படிக்க… கேட்க நேருகிறது. அந்த நேரத்தில் நல்ல குணங்கள் அனைத்தும் பதறுகின்றது… பதட்டமாகின்றது. நல்ல குணங்கள் எல்லாமே ரிப்பேர் ஆகி விடுகின்றது.

உதாரணமாக… ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு மின்னல் தாக்குகின்றது. ஏரியில் வழி எடுக்கப்படும் பொழுது எர்த் ஆனவுடன் கரகரப்பாகி… கொர…கொர… என்று சத்தம் போடுகின்றது.

ஒலியை இழுத்துக் கொடுப்பது அங்கே ஓட்டையைப் போட்டு விடுகிறது அப்போது எதையுமே தெளிவாகக் கேட்க முடிவதில்லை.

1.ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்து எடுத்து வடிகட்டி கொடுக்கக்கூடிய…
2.நுண்ணிய அலைகளில் பாய்ந்து வரக்கூடிய
3.அந்த அலைவரிசைகளைப் பிரித்து எடுத்துக் கொடுப்பதில் உள்ள இணைப்புகள் சூடாகி
4.அந்த இணைப்பு (பற்ற வைப்பு - SOLDERING) கழன்று விடும்... அதற்குப் பின் இது எடுத்துக் கொடுக்காது.

இதைப் போன்றுதான்
1.மனிதனுடைய உடலில் நுகர்ந்த உணர்வுகள்… மூளைக்குள் இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.குறையான உணர்வுகள் பட்டவுடனே பொறிகளை இழுக்கும் அந்த நிலைகள் நின்றுவிடும்.
3.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நம் உடலுக்குள் நல்லதை இயக்கக்கூடிய குணங்கள் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

உங்களால் அதைச் சரி செய்ய முடியவில்லை…! அப்போது
1.ரிப்பேரான குரலில் தான் பேச முடியும்
2.ரிப்பேர் ஆன நிலைகளைத் தான் சுவாசிக்க முடியும்
3.ரிப்பேரான நிலைகளைத் தான் எடுக்க முடியும்…!

அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தான் ஞானிகள் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். அதாவது வாழ்க்கையின் இடைவெளியில் ரிப்பேரானால் அதில் மீட்டுவதற்கு அங்கே வழி காட்டுகின்றார்கள்.

உன் உடலில் இன்னென்னது இப்படி மறைந்திருக்கின்றது. ஆகையினால் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணு… மகரிஷிகளின் அருள் சக்தியை அதிலே போடு அபிஷேக ஆராதனைகளைப் போடு சுவையான இனிமையான மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணு. இதை உணர்த்திய அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணு…!
1.பொருளைக் காட்டி… அதைக் கண்ணில் உற்றுப் பார்க்கும்படி செய்து…
2.உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி சொல்கின்றார்கள்… காவியத்தையும் படைத்துள்ளார்கள்.