ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2022

மனிதனுக்கு நோய் வருவது... சந்தர்ப்பத்தால் தான்...!

உடலுக்குள் ஒரு வேதனையாகி விட்டால் எம்மா... எப்பா... என்று சொல்வோம். ஆனால் நல்ல நிலைகள் இருக்கும் பொழுது “சம்பாரிக்க வேண்டும்...” என்று எண்ணுவோம். அது தடைப்பட்டால் வேதனை என்ற உணர்வுகள் வந்து விடுகின்றது.

வேதனை என்ற உணர்வு உடலில் விளையப்படும் பொழுது வேதனையை உருவாக்கும் அணுக்களாக உருவாகி விடுகின்றது. அது உருவான பின் அம்மா... அப்பா... என்று வேதனைப்படுகின்றோம்.

சம்பாரிக்க வேண்டும் என்ற நிலையில் தொழில் நிமித்தம் சென்றாலும் ஆசையின் நிலைகள் கொண்டு தன் பையன் சீராக அவன் செயல்பட வேண்டும் என்று எண்ணுவோம். அல்லது குழந்தை இல்லை என்றாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது...
1.தொழில் செய்யும் இடத்திலே தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் ஏதாவது அவன் செய்தான் என்றால்
2.வெறுப்பாகி... ஏன்டா...... இப்படிச் செய்கின்றாய்...? என்ற வேகமாகப் பேசுவோம்.
3.வெறுப்பைத் தான் அவனிடம் உருவாக்க முடியும்.

முதலாளி வேதனைப்படுகின்றார் நாம் உதவி செய்ய வேண்டும் என்று அவனும் எண்ணுகின்றான்.

ஆனால் முதலாளி சோர்வடைந்து... செயல்கள் குறைந்த நிலையில் நன்மை செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றார். அதே சமயத்தில் வேதனையுடன் இருக்கப்படும் பொழுது... தான் எண்ணியதை வேலை செய்பவன் செயலாக்கவில்லை என்று வெறுப்பான நிலையில் சொல்லப்படும் பொழுது தன்னை அறியாமல் “அவனுக்குள்ளும்...” வெறுப்பு அதிகரிக்கிறது.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும்... இனிப்பைப் போட்டாலும்... அதற்குப் பின் விஷத்தைப் போட்டுவிட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாமல் போய் விடுகிறது. குடிப்போரை மயங்க வைக்கத்தான் செய்யும்.

அதைப் போன்று நல்ல குணங்கள் இங்கே இருப்பினும் வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது நல்லது மடிந்து விடுகின்றது.
1.மீண்டும் தன் நினைவாற்றல் கொண்டு கடுமையாகச் சொல்லப்படும் பொழுது அவன் வேதனை உணர்வுகளை நுகரத் தொடங்குகின்றான்.
2.முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பகைமைகளை ஊட்டி விடுகின்றது.

இதிலிருந்து நாம் எப்பொழுது மீள்வது...? செயின் தொடர் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தொடர்ந்து வருகின்றது.
1.வேதனை வேதனை என்று எடுத்தால் “கேன்சர்”
2.வேதனை வெறுப்பு என்று வரப்படும் பொழுது நல்ல குணங்களைக் கொல்லும் “டி.பி.”
3.வேதனை வெறுப்பு என்ற நிலைகள் நல்ல சுவாசத்திற்குள் இணைந்தால் “ஆஸ்த்மா”
4.அந்த அணுக்களின் தன்மை பெருக்கி அதனின் மலத்தைக் கூட்டும் போது நாம் சுவாசிக்கும் நிலையில் அடைப்பு... “மூச்சுத் திணறல்”
5.வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் கலந்து “உப்புச் சத்து” அதிகரிக்கின்றது.
6.அந்த உப்புச் சத்துகள் இரத்தத்தில் உறையப்படும் பொழுது இரத்தத்தின் வேகத் துடிப்பு கூடி “இரத்தக் கொதிப்பாகின்றது”
7.இரத்தங்கள் சீராகச் செல்லாதபடி அழுத்தத்தின் தன்மை கூடி... நகர்ந்து செல்லும் போது மற்ற உறுப்புகள் வேகமாகத் தனக்குள் ஈர்க்கும் சக்தி வரப்படும் போது அது முடியாத தன்மை வரும் பொழுது திணறல் “மயக்கம்...”
8.இப்படி மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை இழக்கப்படும் பொழுது நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) – எதிர்மறையான விளைவுகள் வந்து விடுகிறது.

பாலில் வெண்ணெய் என்ற சத்து இருந்தாலும் பால் பிருத்து விட்டால் அதனின் செயல் இழக்கப்படுகின்றது... வெண்ணெயை எடுக்க முடியுமா...? முடியாது.

இதைப் போன்று தான் நமக்குள் இருக்கும் இரத்தங்களில் நல்ல குணத்தின் தன்மையைப் பிரித்து விடுகின்றது... நல்ல குணங்கள் மடிந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி நம் உடலை நாம் எப்படிப் பண்படுத்த வேண்டும்...?
1.நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்தல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டவன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். நல்லதாக நாம் தான் மாற்ற வேண்டும். எப்படி...?

இயற்கை... சந்தர்ப்பம்...
1.நாம் நுகர்வதை எல்லாம் நமது உயிர் பிரம்மமாக உருவாக்குகின்றது.
2.தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அதனின் உணர்வை நமக்குள் உயிர் உருவாக்கிவிடும்.
3.சிந்திக்கும் திறனும் நம்மை அறியாது வரும் நோய்களை அகற்றும் அருள் சக்தியும் நாம் பெறுகின்றோம்.
4.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த நஞ்சினை அடக்கும் நிலையாக அவன் எவ்வாறு பெற்றானோ...
5.அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து ஒளி பெறும் அணுக்களாக விளைந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் எப்படிப் பெற்றானோ...
6.அதே போன்று நமது வாழ்க்கையில் அதைப் பெறுதல் வேண்டும்.