நம்மை அறியாது தவறுகள் ஏற்பட்டாலும் அதை மாற்றி அமைப்பதற்குத் தான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானப் பயிற்சியே. அதை வைத்து நல்லதாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்ந்து விட்டால்
2.எந்தத் தீமையும் உங்களுக்குள் வராதபடி அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.
கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாகக் கழுவுகின்றோமா இல்லையா...? துணியில் அழுக்குப்பட்டால் துவைக்கின்றோமா இல்லையா...? வீட்டில் தூசி வந்தாலும் அதைத் தூய்மைப்படுத்துகின்றோமா இல்லையா...?
நேற்றுத் தான் கூட்டினேன். இன்று மறுபடியும் தூசி வந்து விட்டது என்று சொல்லி மறுபடியும் கூட்டாமல் விட்டுவிடுவீர்களா...?
அது போல் தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் (ஆன்மாவில்) அழுக்குகளாகச் சேர்ந்து விடுகிறது. அதைத் தூய்மைப்படுத்தத் தான் ஒவ்வொரு நிமிடமும் “சக்தி வாய்ந்த ஆயுதத்தை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி எடுத்துச் சுத்தப்படுத்திப் பாருங்கள்.
1.உயிருடன் ஒன்றிய அணுக்கள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொள்ளுங்கள்
2.பிறவி இல்லாத நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
3. உங்களை எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து விட்டோம்
4.அனுதினமும் தியானத்தின் மூலம் அந்தச் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
முந்தி எல்லாம் வேகமாகச் சொல்லிக் கொண்டே போவேன். அர்த்தமாகவில்லை என்று விட்டு விடுவார்கள். இப்பொழுது பொறுமையாக நிறுத்தி நிதானமாகப் பதிவு செய்கின்றேன்.
ஏனென்றால் சில விஷயங்களை நேரடியாகச் (PUBLIC) சொன்னால் தவறான வழிகளுக்கு அதைக் கொண்டு சென்று விடுகிறார்கள்
1.ஆனால் உங்களுக்கு அந்த உண்மைகள் கிடைக்கவும் செய்ய வேண்டும்
2.தவறான எண்ணங்களில் வருவோருக்கு அதைக் கிடைக்காதபடியும் செய்ய வேண்டும்.
ஒரு திருடன் என்ன செய்வான்...?
நான் இன்னாரைப் பார்த்து வந்தேன். அவர் மிகவும் நல்லவர். எனக்கு உதவி செய்தார். உங்களை பற்றிப் போற்றிப் பேசினார் என்று எதையாவது இரண்டை நம்மிடம் சொல்லிவிட்டு அதன் மறைவிலே தனக்கு வேண்டிய பொருளை நம்மிடமிருந்து அவன் வாங்கிச் சென்று விடுவான்
1.அதாவது நம்மை ஏமாற்றி விட்டுச் செல்வான்
2.ஏமாற்றுவதற்காக அப்படிப் பேசுவோர் உள்ளார்கள்
3.ஒவ்வொரு காரியங்களிலும் ஏமாற்றிய பழகியிருக்கின்றார்கள்.
ஆகையினால் தான் உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம். தனித்தன்மை வாய்ந்ததாகவே இப்பொழுது உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.
இது ஒவ்வொரு நிமிடமும் உங்கள் சிந்தனைகளை உயர்வாக்கும்... தெளிவாக்கும். தீமைகளை அகற்றும் வல்லமை பெறுவீர்கள்... பேரருளை உங்களால் பெருக்க முடியும். அனைத்து உணர்வுகளும் ஒளியாக மாறும்.
கடைசி நிலையில் நாம் இருக்கின்றோம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அதை மாற்றி மாற்றி மாற்றி ஒளியாகக் கொண்டு வர வேண்டும்
தீமையிலிருந்து தப்பும் உணர்வுகளை எடுத்து எடுத்துத்தான் மிருகங்கள் மனிதனாக வருகின்றது. மனிதரான பின் கோடிக்கரை...! தீமைகளை வென்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
அதை எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொண்டே வந்தால் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது.
1.சிறு பிழைகள் வந்தாலும் அது நமக்குள் வளர்ந்திடாது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.