ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2021

நம் உடலுடன் ஒட்டி இருக்கக்கூடிய தீய வினைகளைக் கரைக்கும் வழி

 

நம் பூமியினுடைய காற்றழுத்த மண்டலத்தில் மோதியபின் நெருப்பாகப் புகையாக மாறுகிறது. அது எந்தப் பக்கம் அதிகமாகப் படர்கிறதோ அந்த இடத்தில் வித்தியாசமான நிலைகள் வரும். அதைத் தான் “வால் நட்சத்திரம்” (COMET) என்று சொல்வது.

இதே மாதிரி நாம் பேசக்கூடிய பேச்சு வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லாமே இங்கே இருக்கிறது. நம் உடலிலும் இருக்கிறது... சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தக் காற்றிலும் இருக்கின்றது.

உதாரணமாக டி.வி. ரேடியாவில் ஒலி/ஒளிபரப்பு செய்தவுடன் எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுக்கின்றது... ஒலியையும் ஒளியையும் காட்டுகின்றது.

அது போல் மனிதன் உயிருடன் வாழும் நிலையில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வும் இங்கே சுழன்று கொண்டிருக்கின்றது.
1.இரவிலே நாம் புலனடங்கித் தூங்கினாலும் கூட
2.நாம் பகலில் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அந்த உணர்வுகள் ஆன்மாவில் வந்து சேருகின்றது.

எந்த வேதனையையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ படுகின்றோமோ அந்த உணர்வெல்லாம் உயிரிலே பட்டுக் கனவுகளாக வருகின்றது.

அந்த உணர்ச்சிகள் திடீரென்று நம்மைத் தூக்கத்திலிருந்து எழும்படி செய்து “என்னை அடிக்க வருகின்றான்...” என்று கத்த வைக்கின்றது. இதையெல்லாம் நாம் பார்க்கின்றோம் அல்லவா.

நமக்குள் இருப்பது பரமாத்மாவிலிருந்து தான் இதையெல்லாம் இழுக்கின்றது. எதன் வலுவோ அதன் வழி கூடி நம்மை இயக்குகின்றது.

ஆகவே
1.காற்றிலே இது போன்ற நிலைகளை எல்லாம் இல்லாமல் செய்ய வேண்டுமா இல்லையா.
2.அதுதான் விநாயகர் சதுர்த்தி...! தீமை செய்யும் உணர்வுகளை நாம் வராதபடி நிறுத்த வேண்டும்.

நம்முடைய சாஸ்திரங்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாராவது சிந்தித்திறோமா...? இல்லை.

நாம் பேசியது இன்னொருவர் உடலிலே ஊழ்வினை என்ற வித்ததாக இருக்கிறது. நாம் பேசியது... நாம் சண்டை போட்டது... அடுத்தவர் சொன்னது... அடுத்தவர் சங்கடப்பட்டது... நோய்வாய்ப்பட்டது எல்லாமே சூரியன் எடுத்து அலைகளாக வைத்திருக்கின்றது.

நம் உடலிலிருக்கும் உணர்ச்சிகள் உந்தியவுடன் அந்த அணுக்களுக்குப் பசிக்கும்போது உயிருக்கு வருகின்றது.. கண் வழி கவர்கின்றோம்... நுகர்கின்றோம்.
1.அதே எண்ணம் வருகின்றது..
2.தீய வினைகளை நம் உடலாக மாற்றுகின்றது... நல்ல உணர்வின் அணுக்கள் ஒடுங்குகின்றது.
3.இதை எல்லாம் கரைக்க வேண்டுமா இல்லையா...?

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் பொம்மையைச் செய்து தீயவினைகளைக் கரைக்க வேண்டும் என்று காட்டப்பட்டது. ஆனால் இன்று நாம் வெறும் களிமண்ணில் பொம்மையைச் செய்து நீரிலே கரைக்கின்றோம்.

ஆனால் நம்மை அறியாது உடலிலே சேர்ந்த... நம் உடலுடன் ஒட்டி இருக்கக் கூடிய அந்தத் தீய வினைகளைக் கரைக்க வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது.

1.சாப்பாடு இல்லாமல் செய்து விட்டாலே எதுவுமே கரைந்துவிடும்.
2.அது போல் தான் நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை என்றால் தன்னாலே கரைகின்றது.

அதற்குச் சாப்பாடு எங்கிருந்து எடுக்கின்றது...?

நம் பூமி ஒரு பரம். இந்தப் பரமாத்மாவில் தான் எல்லாமே இருக்கின்றது. அதிலிருந்து எடுத்துத் தான் உடலில் இருப்பது வளர்கிறது.

எந்தச் செடியில் வித்து விளைந்ததோ அதை மீண்டும் பூமியில் ஊன்றினோம் என்றால் பரமாத்மாவில் இருக்கும் தாய்ச் செடி வெளியிட்ட அதனின் சத்தைக் கவர்ந்து விளைகிறது.

இது எல்லாம் செடி கொடிகளுக்குச் தெரியாது.. மிருகங்களுக்கும் தெரியாது. எதனின் உணர்வை நுகர்ந்ததோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் அவை இருக்கும்.

ஆனால் மனிதன் இதை எல்லாம் அறியும் ஆற்றல் பெற்றவன். மாற்றி அமைக்கும் சக்தியும் பெற்றவன்.

ஆகையினால் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை எல்லாம் ஞானிகள் உணர்வு கொண்டு வேக வைக்க வேண்டும். ஒரு பருப்பை வேக வைத்த பின் மீண்டும் அதை மண்ணிலே விதைத்தால் அது முளைக்காது.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா... என்று எண்ணி
3.உள்முகமாக உடலுக்குள் செலுத்தித் தீய வினைகளை வேக வைத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்