ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2021

பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கும் வழி - ஈஸ்வரபட்டர்

 

மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.

இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.

இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.

நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.

ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!

ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.

முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.

இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.

பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?

நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.

ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.

சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.

ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!