“இம்மனிதச் சரீர அமைப்பு” உருவாகும் வளர்ச்சியே... இப்பூமியின் சத்து நிலையின் உயர் குணமாய் இப்பூமி வளர்த்த வலுவின் முற்றல் தான்...!
1.பலவாக மோதுண்டு... பல பல கோடி மாற்றங்களுக்குப் பிறகு
2.உயர்ந்த சத்தாய் உருவகம் பெற்ற நரம்போட்ட உப்பின் சுவை உணர்வில்
4.உரு வளர்ச்சி தரவல்ல உருவம் இது.
மனிதச் சுவை ஆறு...! பல சுவையை உண்டு உரமாக உடலெடுக்கும் சத்து வளர்ச்சியை... வளர்ச்சியின் ஓட்டத் தொடரில்...
1.நாவின் சுவைக்கொப்ப உணவுண்டு வாழுகின்ற வழித் தொடரில் உள்ள நாம்
2.இந்த வாழ்க்கைக்குப் பிறகு நடக்கும் நிலை என்ன...? என்று நாம் உணரவில்லை.
மனிதச் சுவை இப்பூமியின் ஆறு வண்ணத்தைப் போன்று அறு சுவையை உண்டு உணரும், எண்ண நிலை பெறத்தக்க வளர்ப்பில் நீர், கனி வளங்கள், திரவங்கள், தாவரங்கள், புழு பூச்சிகள் இவற்றிலிருந்தெல்லாம் வார்ப்பு கொண்டு வார்ப்பு கொண்டு ஒவ்வொரு முலாமையும் இப்பூமியிலுள்ள அனைத்து அமிலத் தொடர்புடனும் இச்சரீரக் கோளம் உராய்வு பெற்று...
1.எண்ணம் சுவை குணம் என்ற வார்ப்பில் வடிவம் கொண்டுள்ள
2.மனித வளர்ச்சியை வளர்க்கும் நிலைக்கு வடிகாலாய் அமைந்துள்ள எண்ணத்தின் உணர்வு வழித் தொடர்பை
3.உயர்வு வழியினால் இவ்வுடல் கோளத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளும் வலுவை வளர்க்கும் நிலை யாது...?
ஒவ்வொரு செயலிலும் அச்செயலுக்குப் பிறகு “வளரும் நிலை” ஒன்று உண்டு. மாறி மாறி உருவாகும்... உருண்டோடும்... இப்பூமியின் வளர்ச்சிக்கே வலுத் தந்து கொண்டுள்ளவைகள் தான் “வட துருவ தென் துருவங்கள்...”
அதிலே மையம் கொண்டுள்ளது தான் “இப்பூமியின் பொக்கிஷமான கடல் நீர்...!” அந்தக் கடலில் ஏற்படும் உப்பின் சுவையினால் தான் இப்பூமி வளர்க்கும் வளர் செயலின் உயிரணுவின் ஜீவித வளர்ச்சி நிலை உள்ளது.
கடலில் உப்புத் தன்மை இல்லாவிட்டால் ஜீவ சக்திக்கு ஜீவித வாழ்க்கையில்லை. “கடல் நீர் உப்புக் கரிக்கின்றது” என்ற சாதாரண எண்ணத்தில்தான் நம் எண்ணம் செல்கின்றது.
ஆனால் இப்பூமியில் வளர்ச்சி கொள்ளும் வளர்ச்சி வார்ப்பகங்கள் எல்லாவற்றுக்குமே மூலப் பொருளை அளிப்பது நம் கடல்தான்.
1.வட துருவமும் தென் துருவமும் எதிர்கொள்ளும்
2.எதிர் எதிர் செயலினால் உருவாகும் உருவகங்கள்தான்
3.ஜீவ பிம்ப சரீரமும் மற்றெல்லா உயிர் வளர்ப்பின் வளர்ச்சியும்.
4.பாற்கடலில் பள்ளி கொண்டான் “மூலவன்...!” என்று
5.சூட்சமத்தில் மறைக்கப்பட்ட புராண காவியத்தின் உண்மையும் இதுவே...!
கடலின் உண்மை நிலையை உணர்த்தும் செயலின் பொருள் யாது...? என்ற வினா எழும்பலாம்.
உண்மை நடை முறையை உணர்த்தி... ஆத்ம உயிரை வலுவாக்க வேண்டிய வழியை முறைப்படுத்தி...
1.விளக்கிடும் இந்த உண்மை நிலையிலிருந்து
2.ஒவ்வொருவரும் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள
3.இச்சரீர இயக்கத்தின் வலுவை வளர்த்துக் கொள்ள வழி காட்டுகின்றேன் (ஈஸ்வரபட்டர்)