இன்றைய உலகத்தின் சூழ்நிலையில் நாம் எங்கே இருக்கிறோம் என்றால் “மரண வாயிலில் இருக்கின்றோம்...”
நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வருவதைக் கவர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியன் தன்னுடைய பாதரசத்தால் மோதி எலக்ட்ரிக் ஆக மாற்றுகின்றது.
அதனுடைய உணர்வில் வேறு ஏதாவது எடுத்தால் விஷத் தன்மையான எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது. மாற்றினாலும் கூட விஷத்தின் தன்மை கொண்ட நட்சத்திரங்களின் உணர்வுகளைப் பிரித்து... அடித்து... மோதியவுடனே புது விதமான உணர்வாக விஷத் தன்மையாக மாறுகிறது... “நியூட்ரான்...”
1.நியூட்ரான் என்ற விஷத் தன்மையாக மாறியபின் அது அதிவேகமாக இயக்கும் சக்தியாக மாறுகிறது
2.எதனையுமே துரித கதியில் அது இயக்குகிறது.
எந்தப் பொருளுக்குள்ளும் அது இணைந்த பின் எதிர்நிலையாகி... புரோட்டான் என்று அதனுடைய சக்திக்கே மாறுகின்றது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
விஞ்ஞானிகள் கதிரியக்கங்களை வைத்து நியூட்ரானைப் பிரிக்கின்றார்கள். பிரித்து அந்த விஷத்தின் தன்மையை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அது பரவும் போது
1.நம் உடல்கள் எல்லாம் அப்படியே இருக்கும்
2.கட்டிடங்களும் அப்படியே இருக்கும்
3.ஆனால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்தும் அழிந்துவிடும்
விஷத்தை சாப்பிட்டால் எப்படி இருப்போம்...? அந்த மாதிரியான குண்டுகளைச் செய்து வைத்திருக்கின்றார்கள். எல்லா நாடுகளிலுமே இது உண்டு. நம் நாட்டிலும் உண்டு. அமெரிக்காவிலும் சீனாவிலும் ஒவ்வொரு நாட்டிலும் வைத்திருக்கின்றார்கள்.
அவன் வைத்திருக்கின்றான்... நாம் ஏன் செய்யக் கூடாது...! என்று இந்த ரகசியம் எல்லோருக்கும் வெளி வந்துவிட்டது உலக மக்களை அழித்துக் கொள்வதற்கு தான் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.
1.ஒரு பக்கம் மனிதனை உருவாக்குகின்றான்
2.ஒரு பக்கம் மனிதனையே அழித்துக் கொண்டிருக்கின்றான்.
இந்த நிலைதான் இன்று பெருகி வருகின்றது.
நட்சத்திரங்களிலிருந்து வருவது மின்னல்களாக மோதுகிறது. கடலில் படுகின்றது. மின்னல் தாக்கும்போது மணலாக மாறுகின்றது.
விஞ்ஞானி அந்த அணுவைப் பிரித்து யுரேனியமாக மாற்றுகின்றான். அதிலேயே பல நட்சத்திரங்களின் தனிமங்களைச் சேர்க்கின்றான். அணுகுண்டாக வெடிக்கச் செய்கின்றான்.
மின்னல் எப்படி வெகு தூரத்திற்குப் போகிறதோ அதனின் இயக்கச் சக்தியைக் துரித கதியில் வெப்பத்தின் தன்மை கூட்டி துரித நிலையில் இயக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வருகின்றார்கள். அதை வைத்து இயந்திரங்களை இயக்குகின்றான்.
1.அதில் வரும் விஷக் கழிவுகளைச் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது.
2.கழிவாக்கிய இந்த விஷத்தின் தன்மையைச் சூரியன் எடுத்து இந்தக் காற்று மண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.
மனிதன் விஷத்தன்மை கொண்ட சத்துகளைக் கடலிலிருந்து பிரித்து எடுக்கின்றான். அதனின் தரத்தை உயர்த்துகின்றான். ஆனால் கழிவுகள் வருகிறது.
1.சூரியன் எடுத்து இங்கே கழிவாகப் பரவச் செய்கின்றது.
2.இப்படித்தான் அசுத்தமான அலைகள் இங்கே பெருகிக் கொண்டிருக்கின்றது.
இதைச் சுத்தப்படுத்தும் நிலை வேண்டுமல்லவா.
மனிதனுக்குள் இத்தகைய தீமையின் உணர்வுகள் வளராது தடுக்க வேண்டுமென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அந்தக் கழிவு நமக்குள் சேராது சுத்தப்படுத்தினால் ஒழிய நம்மை நாம் காக்க முடியாது. “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்தால் தான் தப்ப முடியும்...”
ஆனால் மனிதன் ஈன்று தன்னுடைய சுகத்திற்காக விஷத் தன்மை வாய்ந்த உணர்வுகளைச் சேர்க்கின்றான். புதுப்புது உணர்வுகள் ஆகி புதுப்புது விஷத் தன்மைகள் இங்கே பரவுகின்றது.
நிமோனியா காய்ச்சல் என்று அக்காலத்தில் கொசுக்கள் மூலம் எல்லாம் வந்தது. அப்படி வந்தால் உடனே மரணம் தான். மூளை சிதைவாகும்... மூளைக் காய்ச்சல் வரும்.
அத்தகைய கொசுக்கள் கடிப்பதால் மனிதன் சிந்தனை இழக்கின்றான்... துரித நிலைகள் கொண்டு மடிகின்றான்...! என்று கண்டுபிடிக்கின்றான்.
காரணம் இவன் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை காற்றிலே பரவுகின்றது. ஆனால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்தக் கழிவும் இதுவும் சேர்க்கப்படும் பொழுது
1.இந்த உணர்வு கலந்து விஷப் பூச்சிகளாக மாறுகிறது. விஷ அணுக்களாக மாறுகின்றது
2.இன்று அதிக அளவில் மாட்டின் மாமிசங்களைச் சாப்பிடுகின்றார்கள்.
3.மாட்டிற்குள் இந்தப் பூச்சிகள் குடைந்து மூளைக்குள் சென்று மாட்டையே வீழ்த்தி விடுகின்றது.
இந்த மாதிரித் தான் மனிதனுக்குள் விளைந்த நிலைகள் இன்று ஏராளமாக உண்டு. இதை எப்பொழுது மாற்றுவது...? ஆக மொத்தம் நம்மைக் காக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்...?
ஒரு ரோஜாச் செடி மற்ற செடி கொடிகளின் மணங்கள் தனக்குள் வராதபடி தன் மணத்தின் வலுவால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது.
இதைப் போன்றுதான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி பாதுகாக்க வேண்டும்.
அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்துப் பழகி நமக்குள் பெருக்கி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காற்றிலே தான் அந்த நல்ல சக்தியும் இருக்கின்றது.