1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா
எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர்
செயல்படுத்துகிறது.
சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி..
ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட
உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.
ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற
முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா
நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு
உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக
வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை
மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத்
துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும்
அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.
இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும்
சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை
மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப்
பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல்
மோதுகிறது.
மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை
செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின்
நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர்
கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.
அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில்
போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது...” அந்த ஆவியின்
சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.
அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண
நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.
தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும்
பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.
அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப்
பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு
எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்…
வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை
எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.
இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை
அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும்
ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு
கொண்டு விடுகின்றது.
1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும்
பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம்
காணுகின்றது.
இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?