ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2021

நம் உடலில் உள்ள கணையங்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.கல்லீரல் மண்ணீரல் வீக்கம் இருந்தால் தணிகின்றது
2.அசுத்தங்கள் இருந்தால் அகற்றப்படுகின்றது.

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை ஊட்டும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தவும் உணவாக வரும் நிலையில் அதிலுள்ள அசுத்தங்களை அகற்றி நல்ல உணர்வாக மாற்றும் திறனும் பெறுகின்றது.

கல்லீரல் மண்ணீரலைச் சீராக இயங்கச் செய்யும் அந்த ஆற்றல் நமக்கு இப்பொழுது கிடைக்கும்.

இரத்தத்தைச் சமப்படுத்தும் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் சீரானால்
2.உப்புச் சத்தைக் குறைக்க சர்க்கரைச் சத்தைக் குறைக்க இரத்த கொதிப்பை குறைக்க உதவும்.

எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் போது அத்தகைய குறைபாடுகளைத் தூண்டும் அணுக்களை எல்லாம் வடிகட்டி நமக்குள் சமப்படுத்தும் நிலைகள் பெறும்.

தீமைகளைச் சமப்படுத்தி ஒன்றாக்கி நல்ல உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை நம் கணையங்கள் இப்பொழுது பெறுகின்றது.

சமையல் செய்யும்போது பல சரக்குகளைப் போடுகிறோம். எல்லாம் ஒன்றாகிச் சமமாக இருந்தால் சுவை கூடுகின்றது. குறைந்தால் சுவை குறைகிறது.

ஒரு காப்பியைப் போடுகின்றோம் என்றால் சமமான சூடாக இருந்தால் காப்பித்தூள் இனிப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து சுவையாக இருக்கும்.

சூட்டின் தன்மை குறைந்தால் போடக்கூடிய காப்பித்தூளையும் பாலையும் இனிப்பின் தன்மையும் ஒன்றாக்காதபடி சுவையைக் குறைத்து விடுகின்றது.

அதைப் போன்று தான் நம் உடலில் உள்ள கணையங்கள் சமமாக்கும் அந்தத் தெளிவான நிலைகள் பெற்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் “அருள் கணையங்களாக” மாற்றிக் கொள்ள முடியும்.

அந்தக் கணையங்கள் சீராக இயங்குவதை இப்பொழுத் நீங்கள் உணர முடியும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் பொழுது
1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் ஒரு புத்துணர்ச்சி பெறும்.
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற குறைபாடுகளை நாம் அகற்ற முடியும்.