ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2021

குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிலிருந்து மீட்கும் மார்க்கங்களைச் பேசிப் பழக வேண்டும்

 

தீமையை அகற்றும் வல்லமையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

1.ஒவ்வொருவரும் நம் குருநாதரைப் போன்று ஆகவேண்டும்... குருநாதராக மாற வேண்டும்.
2.சாமி (ஞானகுரு) தான் பக்கத்திலிருந்து கொடுப்பார்... என்று எண்ணாதீர்கள்.

குருநாதர் கொடுத்த ஞான வித்தை உங்களிடம் விதைக்கின்றேன். நீங்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். “சாமி செய்வார்...” என்று எண்ணி அதை வளர்தது விடாதீர்கள்.

எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார்... எல்லாமே சாமி செய்வார்... நாங்கள் வளர்ந்து விடுவோம்...! என்று எண்ணினால் அது எப்படி வளர முடியும்...?

எல்லாமே சாமி பார்த்துக் கொள்வார் என்று உங்களுக்குப் பதிலாக நான் சாப்பிட்டால்... நீங்கள் பட்டினியாக இருந்தால் யார் பார்ப்பது...?

1.நம்பிக்கை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
2.தன்னை நம்புவதில்லை... சாமியைத் (ஞானகுரு) தான் நம்புகிறார்கள்.

ஆனால் “சாமி சொன்ன அருளை நமக்குள் வளர்த்துக் கொண்டோம்...” என்றால்
1.அது எவ்வளவு பெரிய வேலை செய்யும்...? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொல்லும் அருள் ஞானிகளைப் பற்றிய உபதேசங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
3.அப்போது தான் உங்களுக்குள் இது பெருகி விளையும்.

உதாரணமாக ஒருவரைப் பார்த்து “அவர் மோசமான ஆள்... ரொம்பவும் மோசமான ஆள்...!” என்று பேசிக் கொண்டே இருங்கள். உங்களுக்குள் அது அதிகமாக விளையும்... பார்க்கலாம் நீங்கள்.

வீட்டிற்குள் நுழைந்தால் சண்டை நிச்சயம் வரும்... உங்கள் வியாபாரம் மந்தமாகும்... இப்படிச் செய்கிறார் என்று யாருடனாவது வம்புக்கு இழுத்துக் கொண்டு போகும்.

ஆக எதைப் பேசுகின்றோம்...? குறைகளைத் தான் பேசுகின்றோம்.

1.அதை எல்லாம் நீக்குவதற்குண்டான மார்க்கங்களை நீங்கள் பேசிப் பாருங்கள்.
2.யாம் சொல்லும் இந்தப் பேருண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

குறை என்று தெரிகின்றது. அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் எடுத்து அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்... அவர்களை அறியாது சேர்ந்த இருளை நீக்க வேண்டும்..! என்று இதனைக் கலந்து நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறை நமக்குள் வளரவே வளராது...! அவர்களுக்குள்ளும் வளராது தடுத்துவிடும்.

அருள் வழியில் இப்படி நடக்க வேண்டும் என்று இதனை எடுத்துச் சொல்லுங்கள். தீமைகள் பாதிக்காது என்றும் எடுத்துச் சொல்லுங்கள். இதை எல்லாம் தெளிவாகவே ஞானிகள் நமக்குக் கொடுக்கின்றார்கள்.

ஆனால் குறைகளைச் சொல்லிச் சொல்லி அதையே ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் போது அது என்னையும் தாக்குகின்றது. என்னை நான் பாதுகாத்துக் கொள்ளவே பெரிய கோட்டை கட்ட வேண்டி இருக்கின்றது. அமைதியாக உட்கார வேண்டி இருக்கின்றது.

உங்களுக்குச் சக்தியும் கொடுத்து அதே சமயத்தில் நீங்கள் அறியாது ஏதாவது செய்தாலும் அந்தத் தீமை வராது காக்கக்கூடிய சக்தியாகவும் நான் இருக்கின்றேன்.

“குருநாதர் ஒளியாகி விட்டார்...” என்று அவரை விட்டுவிட்டு நான் தனியாக இருந்தால் என்ன ஆகும்...?
1.அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னால்...
2.அவர் சொன்னபடி அந்த எண்ணத்தை எடுத்தால் என்னைக் காப்பாற்றும்.

கடையிலிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு வந்தாலும் அதை சமைத்து சாப்பிட்டால் தானே சரியாக இருக்கும். சமைக்காமல் சாப்பிட முடியுமா...?

ஆகவே அந்த அருள் ஒளியை எடுத்து நமக்குள் சமைக்க வேண்டும். உயர்ந்த சக்திகளை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

குருநாதர் எனக்குக் கொடுத்த அதே வழியில் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.