ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2014

பல தவறுகள் செய்த அருணகிரிநாதருக்கு ஞானம் எப்படிக் கிடைத்தது?

1. பல தவறுகள் செய்த அருணகிரிநாதருக்கு ஞானம் எப்படிக் கிடைத்தது?
அன்று அருணகிரிநாதர் செல்வந்தர். அவருடைய தாய் தந்தையர் செல்வத்தை நிறையச் சம்பாதித்து வைத்திருந்தனர். அந்தச் செல்வச் செருக்கில் இவர் என்ன செய்தார்?

அந்தக் காசுகளை வைத்து அருணகிரிநாதர் தாசிகள் வீடுகளுக்குச் சென்று செலவழித்தார். செல்வங்களை எல்லாம் அதிலே செலவழித்து விரயம் செய்து, கடைசியில் அவருக்குக் குஷ்டரோகம் நோயே வந்துவிட்டது. இருந்த செல்வம் முழுவதும் மறைந்தது. ஆக, அவர் செய்த தவறுகள் ஏராளம்.

முருகன் கோவிலில் எல்லாம் அருணகிரிநாதர் பல பாடல்கள் பாடியுள்ளதை நாம் இப்பொழுது பார்க்கின்றோம். முருகனைப் பற்றி நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றார்.

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். எவ்வளவு பெரிய குற்றவாளி? இவருக்கு எப்படி ஆண்டவன் இந்த சக்தியைக் கொடுத்தார்? கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்கள். பார்க்கலாம்.
2. அருணகிரி நல்லவனாக வேண்டும் என்ற பாசம் சகோதரிக்கு
அருணகிரியின் கூடப்பிறந்த சகோதரி தன் தம்பியின் மேல் பாசமாக இருந்தது. ஆனால், அருணகிரியோ காசை வைத்து ஊதாரித்தனமாக நடந்தான். சகோதரிக்குத் திருமணமாகவில்லை.

தன் சகோதரன் அருணகிரி நல்லவனாக வேண்டும்.
அவன் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறவேண்டும்.
அவன் உலக ஞானம் பெறவேண்டும்,
பெரிய அறிவாளியாக அவன் வரவேண்டும் என்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டது சகோதரி

தாய் கருவிலே பெற்ற சக்தி திருஞானசம்பந்தருக்கு, ஆனால், அருணகிரிநாதருக்கு தன் சகோதரி வழியில் சக்தி கிடைக்கின்றது.

அருணகிரியின் சகோதரி திருஞானசம்பந்தரைப் பற்றிய நூல்களை அதிகமாகப் படிக்கின்றது. அவர் எப்படியெல்லாம் விஷத்தைப் போக்கி, விஷமான நிலைகளிலிருந்து மீட்டினார் என்பதைப்பற்றி அவருடைய நூல்களைப் படித்து, பாராயணம் பண்ணி வைக்கின்றது.
3. சகோதரனை எண்ணியே அருள் ஆற்றலை வளர்த்துக் கொண்டது அருணகிரியின் சகோதரி
அதன் வழியில் தன் சகோதரனுக்குள் இருக்கும் அந்த விஷமான உணர்வுகள் நீங்கி, “அவன் திருந்த வேண்டும்” என்று அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது.

திருஞானசம்பந்தர் எதையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளாரோ, வான இயலின் தத்துவத்தை அவர் வெளியிட்டு இருக்கின்றார். அந்த உணர்வெல்லாம் தன் சகோதரன் பெறவேண்டும். அவனுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று தன் சகோதரனை எண்ணி, அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது அருணகிரிநாதரின் சகோதரி.

ஆக, இந்த உணர்வுகள் சகோதரியின் உடலுக்குள் விளைகின்றது. விளைந்து வந்தபின்,
தன் சகோதரன் திருந்த வேண்டும், திருந்த வேண்டும்,
அவன் அருள்ஞானம் பெறவேண்டும் என்று எண்ணுகிறது.

பல பல சித்தர்களைப் பற்றியும், அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்திய அந்த உணர்வுகளையும் தான் படித்து, அந்த உணர்வின் தன்மை தன் சகோதரன் பெறவேண்டும் என்ற நிலைகளில் அங்கே செய்துகொண்டே வருகின்றது. தான் படித்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகளில், தன் சகோதரன் மேல் பாசமாக இருக்கின்றது.

சகோதரனை எண்ணியே இந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றது.

அந்த உணர்வெல்லாம் தன் உடலிலே இங்கே வளர்த்துக் கொண்டது. ஆனாலும், அருணகிரியோ அவன் திருந்தினபாடில்லை.
4. அருணகிரியின் பிடிவாதம்
கடைசியில், அருணகிரிநாதருக்குப் பல நிலைகளாகி குஷ்டரோகமாகித் தத்தளிக்கின்றான். பணமெல்லாம் விரயமாகிவிட்டது. சகோதரன் கேட்கும் பொழுதெல்லாம் பணத்தையும் நகைகளையும் கொடுத்தது. பெரும் செல்வந்தராக இருந்த நிலை எல்லாம் மாறி, கடைசியில் எல்லாம் அழிந்துவிட்டது.

இன்று சாப்பாட்டிற்கே தொல்லையாகின்றது. அருணகிரியின் சகோதரி ஒரு இடத்தில் கூலிக்கு வேலை செய்து, பாத்திரம் தேய்த்து அந்த வருமாணத்தை வைத்து உணவை உட்கொள்கின்றது.

அப்பொழுது சகோதரன் வருகின்றான். நான் தாசியிடம் போனேன். அவள் என்னை அவமதித்துவிட்டாள். நான் எப்படியும் அவளை அடைந்தே ஆகவேண்டும். ஆகவே, “எனக்கு அவசியம் நீ காசு கொடுதே ஆகவேண்டும்” என்று தன் சகோதரியிடம் பிடிவாதமாக விடாப்பிடியாகக் கேட்கின்றான்.

சகோதரியோ, என்னிடம் காசு ஏதப்பா? எல்லாவற்றையும் இழந்துவிட்டாய். இனி என் உடல்தான் இருக்கின்றது. நீ அங்கே இச்சையை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

ஆகவே, என்னுடைய உடலையே நீ பயன்படுத்திக்கொள் என்று சொல்லி, தன் சகோதரனுடைய நிலைகளை எண்ணி அவனின் இந்தச் செயலைப் பார்த்து மூர்ச்சையாகி, அருணகிரியின் சகோதரி மடிந்து விடுகின்றது.

தன் சகோதரன் மேல் உள்ள எண்ணத்தால், உடலை விட்டுப் பிரியும் சகோதரியின் உயிரான்மா அருணகிரியின் உடலுக்குள் புகுந்துவிடுகின்றது. புகுந்தபின், அவன் என்ன செய்கின்றான்?
5. தன்னையறியாது வந்த தவறிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றார் அருணகிரி
தனக்கு உதவி செய்த சகோதரியே போய்விட்டது. இனி, எனது வாழ்க்கையில் என்ன இருக்கின்றது என்று எண்ணிய அருணகிரி திருவண்ணாமலை மேல் இருக்கக்கூடிய கிளி கோபுரத்தின் மீது ஏறி, தன் உடலை மாய்த்துக் கொள்ள ஏறுகின்றான்.

அப்படி மடிய வேண்டும் என்ற நிலைகளில் வானை நோக்கி ஏகுகின்றான்.

என் சகோதரி போய்விட்டாள்,
இனி என்னை ஆதரிப்பதற்கு யார் துணை இருக்கிறார்கள்?
ஆகவே, இனி என்னுடைய இந்த உடல் மடிய வேண்டும்.
அடுத்த ஜென்மமாவது நான் புனித நிலைகள் பெறவேண்டும்.

என்னை அறியாது வந்த தவறிலிருந்து நான் மீளவேண்டும்.

இந்த உணர்வை ஓங்கி வளர்த்துக் கொண்டு, அங்கே மடிவதற்குத் தயாராகின்றான். கோபுரத்திலிருந்து விழும் பொழுது இந்த எண்ணமெல்லாம் வந்த பிற்பாடு,
அருணகிரியின் சகோதரி உயிரான்மா
அவன் உடலுக்குள் இருப்பதால்
அவனைக் கீழே விழாதபடி தடுத்து நிறுத்துகின்றது.
6. சகோதரி கற்றுக் கொண்ட திருஞானசம்பந்தரின் உணர்வுகள் அருணகிரிக்குள் வந்து, ஞானி ஆகின்றார்
அப்படி தடுத்து நிறுத்தப்படும்போது, அவன் ஏங்கி நிற்கின்றான். அவன் உணர்வுகள் அங்கே ஞானம் வருகின்றது. ஆக மடியவில்லை. தன் சகோதரியின் உணர்வுகள், அதாவது அவள் கற்றுக்கொண்ட உணர்வின் ஞானம் எல்லாம் அங்கே வருகின்றது.

சகோதரி கற்றுக்கொண்டு வந்த உணர்வுகள் (திருஞான சம்பந்தரின் உணர்வுகள்) அந்த அருணகிரிநாதர் உடல்களிலே அது வருகின்றது. அப்பொழுது, அந்த உணர்வின் தன்மை கொண்டு இவன் மடிவதற்கு மாறாக, அவனுக்குள் உணர்வின் ஞானம் அங்கே தோற்றுவிக்கின்றது.

ஏனென்றால், சகோதரியின் உணர்வுகள் அவனுக்குள் இருந்து இந்த உணர்ச்சிகளை இங்கு ஊட்டுகின்றது. அங்கு மடியாத நிலைகள் கொண்டு அங்கு அப்போது தான் பாடுகின்றான்.

‘’நாத விந்துகள் ஆதி நமோ நம
வேத மந்திர சொரூபாய நமோ நம
வெகு கோடி”
என்று அவன் பாட ஆரம்பிக்கின்றான்.

ஆக, எதன் வழி கொண்டு அவன் பாடுகின்றான்? சகோதரன் மேல் உள்ள பாசத்தினாலே, சகோதரி அது கற்றுக்கொண்டு வந்த உணர்வின் நிலைகள் அங்கே அவனுக்குள் இயக்குகின்றது.

அந்த ஞானத்தின் தன்மை கொண்டு
அவன் உடலிலே பெறப்படும் போது
திருஞானசம்பந்தர் பெற்ற அந்த உணர்வெல்லாம் இவனுக்குள் வருகின்றது.

அவர் பார்வையில் நஞ்சு கலந்த நிலையில் நீக்கும் இந்த உணர்வை சகோதரி படித்துக் கொண்ட நிலையில், தன் சகோதரன் இப்படியெல்லாம் ஆக வேண்டும் என்ற உணர்வை எடுத்துக்கொண்ட இந்த உணர்வுதான் அந்த ஆன்மா உள்ளே சென்றபின், அவனுடைய குஷ்ட ரோகங்கள் எல்லாம் மாறுகின்றது.

ஆக இந்த உணர்வின் தன்மை கொண்டு தெளிவாக்குகின்றான். ஆறாவது அறிவின் தன்மை பெற்று திருஞானசம்பந்தர் கூறிய உணர்வெல்லாம் அந்த அறிவின் நிலைகள் வருகின்றது. அப்பொழுது தான் ‘’ரா ரா ரா.., டி டி டி.., ரு ரு ரு..,’’ என்ற வகையிலே அவன் பாடுகின்றான்.

அந்தக் காலத்தில் வில்லிபுத்தூரார் அவர் சுற்றுப்பயணம் வரும் போது அவருடன் வாதம் என்ற நிலையில் நடக்கின்றது.

அப்பொழுது, கவிப்புலமைப் பரிசீலிக்க காதிலே துரட்டியைப்போட்டு வைத்துக் கொள்வது, தப்பாகி விட்டால் அவரின் காதை அது அறுத்து விடுவது என்ற இந்த தத்துவமெல்லாம் அந்த அரசர் காலங்களிலே இருந்து வந்தது.

அப்போது அருணகிரிநாதர் என்ன செய்கின்றார்?, ‘’ராராரா டிடிடி ருருரு’’ என்கின்றார்.

ஆக சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் எந்த உணர்வின் தன்மை கொண்டு எடுக்கின்றதோ அந்த உணர்வு உறையப்படும் போது அதன் உணர்வின் நாதங்கள் எப்படி ஆகின்றது?

உணர்வின் தன்மை வரப்படும் போது, இந்த உணர்வின் தன்மை உடலாகும் நிலைகளில் மனிதனானபின் உணர்வுகள் எவ்வாறு ஆகின்றது? என்ற உண்மைகள் இந்த பாடலுக்குள் வருகின்றது.

அப்பொழுது, அந்த வில்லிபாரதத்தை எழுதியவர் வில்லிப்புத்தூரார் இதைக்கண்ட பின் தோற்றுவிடுகின்றார். அதில் சரணமடைகின்றார். ஆனால், அருணகிரிநாதர் படித்திருந்தாரா? இல்லை.

இந்த தத்துவத்தின் நிலைகளை அவருடைய சகோதரி படித்திருந்தது. திருஞான சம்பந்தர் வழியில் கற்றுக்கொண்டது. பல ஞானிகள் கொடுத்த நூல்களைப் படித்துக்கொண்டது. தன் சகோதரன் இந்த நிலைகள் வரவேண்டும் என்றும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டது

ஆனால், அதே சமயத்தில் சகோதரன் மேல் உள்ள ஏக்கத்தால் அவன் செய்த முறை கொண்டு மீளவில்லையே என்று அவனை எண்ணியே அந்த ஆன்மா செல்லுகின்றது. அவன் உடலுக்குள் இது பாய்ந்து தத்துவ ஞானி ஆகின்றது.