ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 7, 2014

பயத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைப் பற்றி தெளிந்து, தெரிந்துகொள்ளுங்கள் - ஞானகுரு

1. எண்ணத்திற்குத் தக்கவாறுதான் ரூபம் தெரியும்
சில நேரங்களில் உட்கார்ந்து பாட்டி கதை என்று சொல்வார்கள். சில நேரங்களில் இரவிலே உட்கார்ந்திருக்கும் பொழுது பெரியவர்கள் சொல்வார்கள்.

அதாவது இரவிலே வயலில் போய் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று, அன்று ஏற்றத்தில் இறைக்கச் செல்வார்கள். அப்பொழுது, அந்த ஏற்றத்தில் இறைக்கும் பொழுது, காலையிலே இந்த மாதிரி தண்ணீர் ஏற்றத்தில் இறைக்க வேண்டும் என்று நினைத்துப் படுத்திருந்தார்.

உடனே என்ன செய்கின்றது? ஒரு பேய் வந்து கூட்டிக் கொண்டுபோய் தண்ணீர் இறைக்க வேண்டும் என்று சொல்லி வயல் காட்டுக்குக் கூட்டிச் சென்றது.

அப்பொழுது வேக வேகமாக வாரிக்கொண்டு தண்ணீர் போகின்றதாகவும், இப்படியெல்லாம் பண்ணியவுடனே வந்துவிட்டது. திரும்பிப் பார்த்தால் கூட வந்த வேலைக்காரன் தான் என்று நினைத்தேன். ஆனால், கடைசியில் பார்த்தால் பேயாகப் போய்விட்டது.

அப்படி ஆனவுடனே, தண்ணீர் எல்லாம் நிறைந்தபின், அந்தப் பேயை நினைத்தவுடன் பயந்து அதிர்ச்சியாகிச் செத்தான். இப்படி பேய் கதைகளைச் சொல்லிவிடுவார்கள்.

இந்த மாதிரி எண்ணும் பொழுது தனியாகப் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

திடீரென்று ஒரு இலை ஆடுகின்றது என்றால்,
அதைப் பார்த்தவுடன்,
நம் எண்ணம் எதுவோ
அதற்குத்தக்கவாறு ரூபம் தெரியும்.
2. நம் எண்ணங்கள் எப்படியெல்லாம் நம்மைக் கொண்டு போகின்றது?
“ஐயோ, பேய் வந்துவிட்டது, பேய் வந்துவிட்டது என்று நாம் எண்ணியபடி எல்லாம் அங்கே தெரியும்.

அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது, தீடீரென்று ஏதாவது ஒன்று அந்தப் பக்கம் வந்தால் (காற்றிலே ஒரு இலை விழுந்தால் கூட) “ஆ!" என்று அதிர்ச்சியாகும்.

“ஆ என்ற உணர்ச்சிகள் வரும் பொழுது,
அந்த சிந்திக்கும் நிலைகளில் (மூளை பாகம்) தொடர்பு இழக்கும்.
அப்பொழுது, மூக்கு வாய் வழியாக எல்லாம் இரத்தமாக வரும்.
இரத்தம் இப்படி வந்து, இரத்த நாளங்களில் வெடித்துவிடுகின்றது.

ஆக, பேய் அடித்து இரத்தம் இரத்தமாகக் கக்குகிறான் என்று சொல்வார்கள்.

அதாவது, அதிர்ச்சியாகும் பொழுது அந்த உணர்ச்சிகள் TRANSACTION செய்யக்கூடிய உணர்வுகள் (மிக நுண்ணிய பாதைகளில் அதிர்ச்சியாவதால்) அதனால் இரத்த நாளங்கள் வெடித்துவிடுகிறது.

இதைப் போன்ற சந்தர்ப்பங்கள் நம் வாழ்வில் வரப்படும் பொழுது நம் எண்ணங்கள் எப்படியெல்லாம் நம்மைக் கொண்டு செல்கிறது? என்ற வகையில் இதைத் தெரிந்து கொள்வது நலம்.