ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2014

வாலியை "மறைந்திருந்து தாக்கினான் இராமன்" ஏன்? - விளக்கம்

எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு இராமாயணத்தில் வாலியைக்காட்டுகின்றனர்.

வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார்  நேரிடையாகப்போர் செய்தாலும், அவர்களிடமிருந்து, பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான் என்று, காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.

உதாரணமாக, ஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது,
அவர்களை நேரிடையாகப் பார்த்து,
அவர்கள் சொல்வதைக் கேட்டு அறிந்தால்,
அந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுக்குள் இணைந்து,
வேதனையான உணர்வுகள்
நமக்குள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும். 
நம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
பாதி நல்ல குணம் வலு இழக்கப்படுகின்றது.

வாலி என்ற நஞ்சான செயல்களை, நாம் பார்க்கப்படும் பொழுது, அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும். ஆகவே, இதைத் தடுப்பதற்கு என்ன செய்யவேண்டும்?

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகள் சுக்ரீவன்

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று, இன்று ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை, நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து, நுகர்ந்து அந்த உணர்வின் தன்மைகளை, நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்,
எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும்
என்ற உணர்வை நமது உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பிறகு, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வேதனைப்பட்டவர்கள் பெறவேண்டும், அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும், அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்  என்று,
நாம் மறைமுகமாக, 
நம் எண்ணத்தின் வலுவின் தன்மை கொண்டு
துருவ நட்சத்திரத்தின் அலைகளைப் பரப்பவேண்டும்.

இதைத்தான் சீதாராமன்,
வாலியை நேரிடையாகப் பார்க்காதபடி,
அதைக் காட்டிலும்  சக்தி வாய்ந்த கணையை,
(துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை)
றைந்திருந்து ஏவினான்,
வாலியின் செயலைத் தடுத்தான்,
என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.