ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2014

மாட்டு ஜோதிடம்

1. கரு வித்தையை வைத்துத்தான் மாட்டை இயக்குகின்றான்
ஒரு சமயம் உப்பிலி, தார்வார் என்ற இடத்தில் மாட்டை வைத்து வித்தையைக் காண்பிக்கின்றான். மாட்டை வைத்து திரையைப் போட்டு வைத்திருக்கின்றான். அதிலே கரு வித்தையைச் சேர்த்து வைத்திருக்கின்றான்

உடுக்கையை அடித்துக் கொண்டு, உறுமி மேளத்தை உம்.., உம்.., என்று அடித்துக் கொண்டு வருகின்றான். ஒரு பொது இடத்தில் வந்தவுடன் என்ன செய்கின்றான்?

ஐயா பையிலே காசு எவ்வளவு இருக்கிறது? ஐயாவிடம் எவ்வளவு இருக்கிறது என்பான்? இதுவா., இவ்வளவு பணம் இருக்கின்றதா? இவன் அங்கே இருக்கிறது எல்லாவற்றையும் எடுத்துச் சொல்வான்.

ஐந்து ரூபாயா? பத்து ரூபாய் வைத்திருக்கிறாரா? என்று மாட்டிடம் கேட்பான்.

“இல்லை”.

நூறு ரூபாய் வைத்திருக்கிறாரா?

“ஆமாம்”, என்று மாடு தலையை ஆட்டும்.

அதிலே எத்தனை நூறு ரூபாய் நோட்டு?

பிறகு இது உண்மையா? அப்படி என்று கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு, “ஐயா, எடுத்துப் பாருங்கள் என்பான்.

சொன்ன மாதிரியே எல்லாம் இருக்கும்.

இப்படி வரிசையில் வந்து, நீங்கள் எதையாவது நினைத்துக் கொள்ளுங்கள் என்பான்.

ஒருவரைக் காண்பித்து, இவர் என்ன நினைத்தார் அப்படி இன்று நிறுத்திக் கொள்வான். இவர், இன்னென்ன மாதிரியெல்லாம் தொழிலுக்குப் போக வேண்டும் என்று நினைக்கிறாரா என்று மாட்டிடம் கேட்பான்.

“ஆமாம் என்று தலை” ஆட்டுகின்றது.

உறுதிதானா?

“ஆமாம்”

ஐயா. இந்த மாதிரி எல்லாம் நினைத்தீர்களா என்று அவரிடம் கேட்பான்.

ஆமாம் என்பார் அவர்.

இப்படி எல்லாவற்றையும் வரிசையிலே சொல்லிக் கொண்டு வருகின்றான். அப்படிச் சொல்லிக் கொண்டு வந்தவுடனே, உனக்கு சாப்பாட்டுக்கு ஐயா எவ்வளவு தருவார்?

அரை கிலோ தருவாரா அல்லது ஒரு கிலோ தருவாரா? அப்படி என்று கேட்டுக் கொண்டே ஒரு ஐந்து கிலோ தருவாரா? உறுதியாகத் தருவாரா? என்று மாட்டிடம் கேட்பான்.

அது “தருவார்” என்று தலையை ஆட்டும்.

ஐயா, நீங்கள் தருவீர்களா ஐயா? என்று அவரிடம் கேட்பான்.

ஆக அப்படிக் கேட்டவுடன், அவரும் ஆமாம் என்பார்.

ஆனால், கொடுத்ததெல்லாம் திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவான்.

ஒரு கிலோவிற்கு எவ்வளவு பணமோ அதை நீங்கள் கொண்டு வந்து கொடுங்கள். திருப்பி வாங்கிக் கொள்ளுங்கள். இந்த அரிசியை மாட்டுக்கு சாப்பாட்டுக்கு வாங்கிக் கொடுத்துவிடுங்கள். இப்படிச் சொல்லியே எல்லாவற்றையும் வாங்கிக் கொள்வான்.

இதையெல்லாம் கொடுத்திருக்கின்றார்கள். இதை வைத்துக் கொள்ளலாமா? ஆமாம் என்று சொல்வார்களா? என்று மாட்டிடம் கேட்பான்.

ஆமாம் என்று சொல்லும்.

இதை அப்படியே என்ன செய்கின்றான், அப்படியே கொடுத்ததையெல்லாம் வைத்துக் கொள்கின்றான். அப்புறம் கடைசியில் சொல்வான்.
2. இவனும் மக்களுக்கு செய்வினையைத் தான் செய்கின்றான்
ஏதாவது தோஷங்கள், கஷ்டங்கள் இருந்தது என்றால் அதை நிவர்த்திப்பதற்கு இந்த இடத்திற்கு வரவேண்டும் என்பான்.

நீ எந்த இடத்தில் குடியிருக்கிறாய் என்று கேட்டுக் கொண்டு,
ஆக நீ இந்த இடத்திற்கு வா என்கிறான்.

பெரிய கூடாரம் போல் போட்டு கலசங்களாக வைத்திருப்பான். இங்கே எல்லாப் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அங்கே அவன் இருக்கிற இடத்திற்கு வரச் சொல்கிறான்.

அங்கே வரச் சொல்லி என்ன செய்கிறான்? யார் யாருக்கு இங்கே ஆகாதவர்களுக்கு, என்னென்ன செய்வினை செய்யவேண்டும் என்று கேட்டு, அதற்கு இவ்வளவு பணம் (FEES) என்று வாங்கிக் கொண்டு அதைச் செய்வார்கள்.

உப்பிலி தார்வார் ஊர் பக்கத்தில் இதே இனத்தைச் சேர்ந்தவர்கள் வேறு ஊர் பக்கம் சென்று இந்த வேலைகளைச் செய்வார்கள் இதே மாதிரி மாடுகளை வைத்துக் கொண்டு நம் தமிழ் நாட்டுப் பக்கமும் வருவார்கள்.
3. குருநாதருடைய வேலை
நான் இதையெல்லாம் அவன் என்னென்ன செய்கின்றான்? இவர்கள் அவனுக்குக் கொடுப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அங்கே முடிந்ததும் என்ன செய்தான்?

இன்னொரு இடத்தில் இதே வேலையைத் தொடங்குகின்றான். அதே மாதிரி ஒவ்வொன்றாக மாட்டிடம் சொல்லுகின்றான். ஆனால், என்ன ஆகிவிட்டது?

அந்த மாடு ஒன்றும் தலை ஆட்ட மாட்டேன் என்கிறது. அந்த மாடு ஒன்றும் செய்ய மாட்டேன் என்கிறது.
அவன் என்னென்னமோ செய்து பார்க்கின்றான்.
ஒன்றும் ஆகவில்லை.

“எவனோ.., என்னமோ செய்கிறான்? எவன் அது? உள்ளதைச் சொல். ஏய்., உன்னை என்ன பண்ணுகிறேன்.., பார் என்கிறான்.

நீயாக வந்து சொல்கிறாயா? இல்லை கையைக் காலை முடக்கட்டுமா? என்று சொல்கிறான்.

“நீ என்ன வேண்டுமென்றாலும் செய்டா..,” என்று நான் (ஞானகுரு) பேசாமல் அங்கே இருந்து கொண்டிருக்கின்றேன்.

இந்த மாடு ஒன்றும் பேச மாட்டேன் என்கிறது. அடுத்து அவன் என்ன சொல்கிறான். ஐயா, எவனோ பெரிய ஆள் போல் இருக்கின்றது, இதெல்லாம் இங்கே கெடுதல் பண்ணிக் கொண்டிருக்கின்றான்.

மாட்டைப் பார்த்து, “நீ சொல்லப்பா. அந்தப் பெரிய ஆள் எங்கே இருக்கின்றான்?” என்று கேட்கிறான்.

அந்த மாடு “கம்” என்று இருக்கின்றது.

நான் என்ன செய்தேன்? தனித்துப் போனால் வேலையைக் கண்டுபிடித்துவிடுவான் என்று கூட்டத்தோடு கூட்டமாக மெதுவாகக் கலைந்து போனேன்.

அவனால் ஒன்றும் முடியவில்லை. இந்த ஊரில் எவனோ பெரிய மந்திரவாதி ஒருவன் இருக்கின்றான், அவன் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு இருக்கின்றான், என்று சொல்கிறான்.

ஆகவே, இந்த ஊரில் உள்ளவர்கள் எல்லாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள், ஏதாவது கெடுதல் செய்துவிடுவான். நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.

இந்த மாதிரி நம் குருநாதர் சில நிலைகளில் எப்படி எல்லாம் மனிதர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஏமாற்றுகிறார்கள்? மற்றவர்களுக்கு எப்படித் தொல்லை கொடுக்கிறார்கள்? என்று நேரடி அனுபவமாகக் கொடுத்தார்.