“நல்ல காலம் வருகின்றது,
நல்ல காலம் வருகின்றது” என்று
சொல்லி
குடுகுடுப்பையை அடித்துக்
கொண்டு நடு இரவு வருவார்கள்
அப்படி வரும் பொழுது, உங்களுக்குச் செய்வினை செய்திருக்கிறார்கள்,
தோஷம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருவான்.
ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார்? ஒரு கம்பளித் துணியை
என் உடலில் சுற்றிக் கொள்ளச் செய்தார். மரத்தின் மேல் ஏறி நின்று கொள் என்றார்.
“குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது, அப்படியே மரத்திலிருந்து
குதிடா” என்றார்.
குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது அதே மாதிரி சொல்லிக்
கொண்டு நான் குதித்தேன்.
அவன் என்ன செய்தான்?
“கத்துகின்றான்..,
சீ பிசாசு, சீ பிசாசு போ.., போ..,” என்று ஓடுகின்றான். கையிலிருந்த பொருளை எல்லாம் போட்டுவிட்டு
அப்படியே கிடு கிடு என்று நடுக்கமாகி,
கீழே மயக்கம் போட்டு விழுந்துவிட்டான்.
அப்புறம் மறுநாள் அதே இடத்திற்குச் செல்லச் சொன்னார் குருநாதர்.
ஒன்றும் தெரியாத மாதிரி குடுகுடுப்பைக்காரனிடம் “என்னப்பா..,” என்று கேட்டேன்.
“இந்த ஊரில் பெரிய
பிசாசு இருக்கின்றது” என்று பிசாசு
ஓட்டுபவன் சொல்கின்றான். அதனால், இந்த ஊருக்குள் வருவது மிகவும் ஆபத்தானது. இந்த ஊருக்குள்
நான் இனிமேல் வரவே மாட்டேன் என்றான்.
ஆக, குடுகுடுப்பைக்காரனிடம் என்ன இருக்கிறது? அவனுக்கு
முன்னால் குதிக்கும் பொழுது எதெல்லாம் அவனுக்குள் இயக்குகின்றது? என்ற இந்த உண்மைகளை
அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை இந்த வேஷம் போடச் சொன்னார்.
குருநாதர் பிறகு என்ன செய்தார்? இந்த விபூதியைக் கொடுத்து
இந்த மாதிரிச் செய்து குடுகுடுப்பைக்காரனைக் காப்பாற்றிவிடு, இதே பயம் வந்தது என்றால்
செத்துப் போவான், இந்தப் பாவத்தை நீ ஏற்றுக் கொள்ளாதே, கொண்டு போய் கொடுத்து வா என்று
எம்மிடம் சொன்னார்.
அதே மாதிரி அவனிடம் சொன்னவுடன், சாமி என்னைக் காப்பாற்றினீர்கள்.
இப்பொழுதுதான் எனக்குத் தெளிவாகின்றது என்றான்.
இதெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் எப்படியெல்லாம் செய்கின்றார்கள்? மனித உடலிலிருந்து மந்திரத்தால் கவர்ந்து
என்னென்ன வேலையெல்லாம்
செய்கின்றார்கள் என்று உணர்த்துகின்றார்.