ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2014

திருஞானசம்பந்தர்

1. தாய் ஏங்கி சுவாசித்த உணர்வு ஞானக் குழந்தையாகப் பிறந்தது
அந்தக் காலத்தில் திருஞானசம்பந்தர் எப்படி சக்தி பெற்றார் என்று பார்ப்போம். அவருடைய தாய், குழந்தை இல்லையென்று ஏக்கம் ஆகும்பொழுது
இந்தத் தாய் அந்த கோவிலிலே சென்று
புத்திர பாக்கியம் வேண்டும் என்று ஏங்கி
பல காலம் அதே உணர்வுடன் இருக்கின்றது.

அங்கு கோவிலிலே கதாகாலட்சேபங்கள் செய்யப்படும் பொழுது, அதையெல்லாம் உற்றுப்பார்க்கின்றது. நம்பிக்கை கொண்டு இதை நாம் வணங்கி வந்தால், தவமிருந்தால் நமக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று சீர்காழி ஆலயத்தில் இப்படி அந்த தாய் வணங்கிக் கொண்டு வருகின்றார்.

அதே சமயம் அதனுடைய எண்ணங்கள் வலுப்பெற்று கருவிலே குழந்தை உருவாகின்றது. கரு உருவானபின், அந்தத் தாய் என்ன செய்கின்றது? கதாகாலட்சேபங்கள் நடப்பதை உற்றுப்பார்க்கின்றது.

அங்கே சிவனைப் பற்றி சொல்கின்றார்கள். அவர்கள் சொல்லும் உணர்வை நுகர்கின்றது.
சிவன் எதையெல்லாம் செய்கின்றானோ
அந்த சக்திகளையெல்லாம்
தன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தை பெறவேண்டும்,
பெறவேண்டும் என்று எண்ணுகின்றது.

அங்கு அற்புத நிகழ்ச்சிகள் எதுவெல்லாம் நடக்கின்றதோ, அதையெல்லாம் என் கருவில் இருக்கக்கூடிய குழந்தை பெறவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து, தன் நினைவினைக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குச் செலுத்துகின்றது.
2. நஞ்சை நீக்கிடும் ஆற்றல் தன் குழந்தை பெறவேண்டும் என்று தாய் எண்ணுகின்றது
அதே சமயத்தில், சிவன் அந்த விஷத்தை எப்படி நீக்குகிறான் என்று அந்தக் கதாகாலட்சேபங்களில் சொல்வதையும், அந்த ஈஸ்வரன் எண்ணவெல்லாம் செய்கிறான் என்று அந்தக் கதைகளில் கூறுவதையெல்லாம் அப்படியே என் குழந்தை பெறவேண்டும் என்று அந்தத் தாய் எண்ணுகின்றது.

ஆகவே, என் குழந்தையின் பார்வையில் நஞ்சுகள் நீங்கவேண்டும்.
இறந்தவர்களை மீட்டவேண்டும்.
இந்த உணர்வெல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெறவேண்டும்.
அந்த ஈசனின் அருள் பெறவேண்டும் என்று தாய் எண்ணுகின்றது.

ஆகவே, அத்தகைய நிலைகளிலே வளர்ந்தபின், சிவன் ஆலயத்தில் அந்தச் சிவனைப் பார்த்து அந்தத் தாய் வேண்டுகின்றது. விநாயகரைப் பார்த்து அது வேண்டுகின்றது. அங்கு சிவன் ஆலயத்தில் முருகனைப் பார்த்து இதையெல்லாம் வேண்டுகின்றது.

அந்த எண்ணமெல்லாம் எண்ணி, என் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அது பெறவேண்டும் என்ற உணர்வினை, தாய் எண்ணி ஏங்கி அந்த உணர்வுக்குள் அது பெறுகின்றது.

ஆகவே, தாய் எதையெல்லாம் கண்ணால் பார்த்ததோ அந்த உணர்வின் தன்மை கொண்டு, சொல்லின் வடிவம் இந்த உணர்ச்சிகள் இந்த உடலுக்குள் சென்று, கருவில் வளரும் குழந்தைக்குள் விளைகின்றது.

குழந்தை (திருஞானசம்பந்தர்) பிறந்தபின், பிறருடைய உடலில் விஷம் தீண்டியிருந்தால்
இவர் பார்வை பட்டபின்
அவர்களுடைய உடலில் உள்ள விஷம் இறங்கிவிடுகின்றது.
விஷத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் அதுவும் நீங்குகின்றது.

இத்தகைய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தெரியாது. தாய் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள் கருவிலே அது விளைகின்றது. அவர் பிறந்த பிற்பாடு, அவரைப் பார்த்தவுடன் மற்றவர்களுடய பிணிகள் போவதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.

ஆக, அங்கிருக்கக்கூடிய அம்பிகையின் அருள் பெற்றவர் என்ற நிலைகளில் அங்கே அவரைப் போற்றித் துதிக்க ஆரம்பிக்கின்றார்கள். பராசக்தியின் அருள் பெற்றவர், பராசக்தி ஞானப்பாலைக் கொடுத்தாள் என்றெல்லாம் கதைகளில் சொல்வார்கள்.

ஆனால், தாய் அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து அந்தக் கருவிலே விளைந்தது.

அவர் வளர வளர இவர் பார்வையில் எத்தகைய விஷத்தால் தாக்குண்டவர்களின் நோயும் நீங்குகின்றது. திருஞானசம்பந்தர் என்ற நிலைகளில் அவரின் வளர்ச்சிகள் பெறுகின்றார்.
3. திருஞானசம்பந்தர் வெளிப்படுத்திய பேருண்மைகள் இன்று வெளிவரவில்லை
அவருடைய இளமைப் பருவத்தில் இந்த உணர்வின் சக்திகள் பெற்றபின் ஒரு சமயம் ஒரு இளம் பெண்ணை விஷம் கொண்ட பாம்பு தீண்டிவிடுகின்றது. இவர் வெளி ஊருக்குச் சென்றிருந்ததால் அந்தப் பெண்ணின் சுட்ட சாம்பலை எடுத்து வைத்திருக்கின்றார்கள்.

திருஞானசம்பந்தர் வந்தவுடன், என் குழந்தையை விஷம் தீண்டி இறந்துவிட்டது. ஆகையினால் என் குழந்தையை எழுப்பிவிடுங்கள் என்று அதனுடைய தாய் தந்தையர் கேட்கின்றனர்.

அப்பொழுது, திருஞானசம்பந்தர் சொல்கின்றார். உடலை விட்டு அந்த உயிரான்மா போய்விடுகின்றது.
ஆனால், அது நிலைத்திருக்கின்றது.
ஆகவே அது இறப்பதில்லை என்று கூறுகின்றார்.
உன் குழந்தை எப்படி இருக்கிறது பார் என்று காட்டுகின்றார்.

அப்பொழுது, அந்த அழகான நிலைகளில் தன் குழந்தை இருக்கின்றது என்று பார்க்கின்றார்கள். ஆக, அவர்கள் என்ன செய்கின்றார்கள்?

என் குழந்தையை எனக்குக் கொடுங்கள் என்று கேட்கின்றனர். அதை நீங்களே திருமணமும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கின்றனர் அந்தப் பெண்ணின் தாய் தந்தையர்.

திருஞானசம்பந்தரோ, அது எப்படி நான் திருமணம் செய்து கொள்வேன்? என்ற நிலையில் வாக்குவாதங்கள் நடக்கின்றது. ஆக, இறந்ததை மீட்ட முடியாது.

அந்த உணர்வின் அலைகள் (ஆன்மா) இந்த ரூபமாகத்தான் இருக்கும் என்று அங்கே எடுத்துச் சொல்கின்றார். எந்த விஷத்தின் தன்மை பாய்ந்ததோ, அந்த உணர்வின் ஆன்மாவாகத்தான் இருக்கும்.

விஷத்தின் எண்ணம் கொண்டதால், அடுத்த பிறவி
விஷத்தன்மை கொண்ட பாம்பாகத்தான் அது பிறக்க முடியும்.
தவிர, கன்னியாக இங்கே வரமுடியாது
என்று தெளிவாக்குகின்றார் திருஞானசம்பந்தர்.

இப்படி இவர் வெளிப்படுத்திய இந்த உண்மைகள் எதுவும் சாஸ்திரங்களில் வெளிவரவே இல்லை.