ஒரு பையன், அவனுக்கு பத்து வயது இருக்கும். ஒரு நால் இவன்
பண்ணாரி மாரியம்மனுக்கு சாமி கும்பிடப் போய் இருக்கிறான். அப்பொழுது என்ன நடக்கின்றது?
இவன் போன அதே நேரத்தில், ஒரு பெண் தனக்குக் குழந்தை இல்லாத
நிலையில் ஏக்கத்தில் அது ஏங்கிப் போகின்றது. எனக்குக் “குழந்தை இல்லை” என்று எல்லோரும் என்னை எப்படியெல்லாம் கேவலப்படுத்துகிறார்கள்
என்று சொல்லிவிட்டு அந்த எண்ணத்திலேயே கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றது.
இந்தப் பையனைப் பார்த்தவுடனே, இவன் நன்றாக அழகாக இருந்திருக்கின்றான்.
இவனைப் பார்த்துவிட்டுப் போனவுடனே, இந்த மாதிரி தனக்குக்
குழந்தை கிடைத்தது என்றால் எப்படி இருக்கும் என்று நினைத்து
விட்டுப்போய் அது என்ன செய்கின்றது?
அந்த பண்ணாரி அம்மன் இதில் வந்து அந்த அருளாடுகின்றது.
இந்த காவியங்கள் படிக்கின்றது. இந்த பாட்டுகளெல்லாம் படிக்கின்றது. ரொம்ப அழகாகப் படிக்கின்றது.
இத்தனையும் பாடி அந்த பண்ணாரி அம்மன் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே.
அப்படி என்று கோபித்துக் கொண்டு அந்த சாமி பெயரைச் சொல்லிக்கொண்டே இறந்துவிட்டது. அதாவது,
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது.
அந்த ஆவி இந்த பத்து வயதுப் பையன் உடலில் வந்துவிட்டது.
கோவிலுக்குப் போகும் பொழுது
பார்த்த இவன் உடலில் புகுந்து விட்டது. ஆனால், இவன் மேல எண்ணம் வந்ததும் இவன்
உடலில் வந்துவிட்டது.
அவன் என்ன செய்தான் தெரியுமா? இதே மாதிரி (அந்த ஆன்மா
இவன் உடலுக்குள் புகுந்ததால்)
அருள்வாக்கு சொல்லுகின்றான்.
மற்ற நிலைகளையெல்லாம் சொல்லுகின்றான்.
அவர்கள் அப்பாவோ, திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர். சாமியாவது? பூதமாவது? என்று
சொல்லக் கூடியவர், அவன் அருளாடிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே நிறையக்
கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது.
கூட்டம் அதிகமாக வந்ததும், “எங்கடா சாமி வந்திருக்கின்றது?”
என்று செருப்பாலே போட்டு தன் பையனை அடித்தார். செருப்பாலே அடித்தவுடனே, அவன் கண்கள்
எல்லாம் உள்ளுக்குள் போய்விட்டது. அப்படியே நாக்கு வெளியில் தள்ளி விட்டது.
ஐயோ, நாக்குத் தள்ளிவிட்டதே என்று அவர் அலறுகின்றார்.
அய்யோ சாமி! இந்த மாதிரி ஆகிவிட்டதே., நான் என்ன செய்வேன் என்று சொல்லிக்கொண்டே
இருக்கின்றார். தன் பையனைக் குணப்படுத்த மந்திரவாதியைத் தேடிக் கொண்டு போகின்றார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் நான், “ஒன்றும் இல்லை பேசாமல்
இருங்கள்” என்று சொல்லிவிட்டு யாரையும் அச்சுறுத்தாதபடி சமநிலைபடுத்தும் போது நாக்கு
பழையபடி உள்ளே இழுத்துக்கொண்டது.
அங்கேயிருந்து வீட்டிலே போய் உட்கார்ந்துவிட்டது. உட்கார்ந்தவுடன்
என்ன ஆகியது? அவர் அப்பா எங்கெங்கயோ தேடி மந்திரவாதியை கூட்டிக்கொண்டு வருகின்றார்,
வந்தவுடன், ஒரு சாமி வந்தார். உங்கள் பையனுக்கு இந்த மாதிரி
நன்றாகிவிட்டது என்றவுடன், மந்திரவாதியைப் பார்த்து, நீ போ என்று சொல்லிவிட்டு, சாமி
எங்கு இருக்கின்றார்? என்று என்னைப் பற்றி விசாரிக்கின்றார்.
அந்தக் குழந்தையைச் சொல்லி, என்னுடைய பழனி விலாசத்தை வாங்கிக்
கொண்டு எனக்குக் கடிதம் போடுகின்றார். இந்த மாதிரி நான் கேள்விப்பட்டேன், ’’நீ நல்லவரென்று’’.
என் பையனை ஆபத்தான நேரத்தில் காப்பாற்றினீர்கள். என்கிற
வகையில் கேள்விப்பட்டேன். நீங்கள் உடனடியாக வந்து அந்தக் குழந்தையை வந்து நீங்கள் முழுவதும்
குணப்படுத்த வேண்டும் அவனை எழுப்ப வேண்டும்.
இந்த கடிதத்தை மதிப்பு வைத்து, நீங்கள் வர வேண்டும் என்று
அதிகாரத் தோரணையில் எழுதுகின்றார். எனக்கு எல்லா வகையிலும் தெரிந்தவர்கள் இருக்கின்றார்கள்.
உங்களைப்பற்றிய பெருமையை நான் உலகுக்கு எடுத்துச் சொல்வேன். ஆகவே, உடனே புறப்பட்டு
வாருங்கள் என்று எனக்குக் கடிதம் எழுதுகின்றார்
அந்த அதிகாரத் தோரணையிலே எழுதியிருந்ததால், நான் என்ன
செய்துவிட்டேன். ஒன்றும் சட்டை செய்யவில்லை பேசாமல் விட்டுவிட்டேன்.
விட்டவுடனே இரண்டாவது கடிதம் வருகின்றது. நான் எழுதிய
கடிதத்துக்கு ‘’நீ மதிப்பு கொடுப்பாய்’’ என்று சொல்லி எழுதினேன். ஆனால், நீ. இன்னும்
இங்கே வரவில்லையே என்று அடுத்த கடிதத்தையும் எழுதுகின்றார்.
அதற்குள் அவருடைய பையன் என்ன செய்துவிட்டான்? இந்தப் பையன்
எழுந்து பழனிக்கே, வந்து விட்டான் அவனுக்கு
விலாசம் தெரியாது. ஆனால், எப்படியோ கேட்டு ADDRESS வாங்கிக் கொண்டு வந்துவிட்டான்.
அங்கு வந்து பழனியில் இருந்தான்.
அங்கிருந்த பையன் திடீரென்று இங்கே பழனிக்கு வந்தான் என்றால்
உடனே எனக்கு செய்தி கொடுக்க வேண்டும் என்று அந்தப் பையனின் அப்பா சொன்னார்.
அதற்கும் நான் ஒன்றும் பதில் எழுதவில்லை.
உடனே அவர் என்ன செய்தார்? அவருக்குத் தெரிந்த அணை கட்டும்
ஒரு ஒரு ENGINEER இருக்கின்றார். அங்கிருந்து அவர் புறப்பட்டு வந்து, அவர் மூலமாக ஒரு
இரும்புக் கடையில் உட்கார்ந்து கொண்டு விசாரித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த மாதிரி பழனியில் இருந்து ஒரு சாமியார் வந்தாரா?
அவர் இந்த இடத்தில் இருக்கிறார் என்று கடையில் சொல்கிறார்கள்.
அவரைக் கொஞ்சம் கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, கடையில்
அவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, சிகரெட்டை ஊதிக் கொண்டு காலை ஆட்டிக்
கொண்டு உட்கார்ந்திருந்தார்.
நான் இங்கிருந்து அங்கே போனேன்.
“ஏனய்யா.., நீயெல்லாம் சாமியாரா?” லெட்டர் போட்டால் மரியாதை
கொடுப்பதில்லையா? பையனை இங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்களா? போலீசில் சொல்லி உன் எலுமபை நொறுக்கிவிடுவேன் என்று
என்னை மிரட்டுகின்றார்.
இது இப்படியே கேட்கிறார். அப்பொழுது அந்தக் கடைக்காரர்
பார்க்கின்றார்
ஐயா., இந்தச் சாமி அப்படிப்பட்டவர் இல்லை. அவர் காந்தியவாதி.
நீங்கள் அவரை இந்த மாதிரி மிரட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். அவர் சித்து நிலை பெற்றவர்.
அவரை அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று கடைக்காரர் சொல்கின்றார்.
அட.! உங்களுக்குத் தெரியாது. இந்த மாதிரி ஏமாற்றுபவர்கள்
நிறையப் பேர் இருக்கிறார்கள். இவனைக் கொண்டுபோய் இரண்டு தட்டு தட்டினால் எல்லாம் சரியாகிவிடும்.
உண்மையானவன் என்றால் நான் லெட்டர் போட்டவுடன் வந்திருப்பான் அல்லவா? என்று சொல்கிறார்.
அப்பொழுது நான் என்ன செய்தேன்? அப்படியே பயந்த மாதிரியே
இருந்தேன். பயந்த மாதிரியே
நடித்துக் கொண்டிருந்தேன்.
அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாகக் காலை ஆட்டிக் கொண்டு,
சிகரெட்டையும் ஊதிக் கொண்டு, “என்ன, ஸ்டேசனுக்கு வருகின்றாயா..,? அங்கே வைத்து நொறுக்கட்டுமா..,?”
என்று கேட்கின்றார்.
அப்புறம் நான் கொஞ்சம் யோசனை பண்ணினேன். கொஞ்ச நேரம் கழித்து,
“இறங்குடா கீழே.., இல்லையென்றால் உன்னை இப்பொழுது போலீஸ் ஸ்டேசனுக்குக் கொண்டு போய்
தட்டி நொறுக்கிவிடுவேன்” என்றேன்.
உன் சம்சாரத்தின் கையை ஒடித்துவிட்டாய்.
உன் பையனையும் இந்த நிலைக்கு ஆக்கிவிட்டாய்.
இப்பொழுது இங்கே வந்து என்னை மிரட்டுகிறாய்.
ஆக, உன் சம்சாரத்தைக் காணோம். நீ தான் உன் மனைவியைக் கொன்று
விட்டாய் என்று, உன் பையனே சொல்லப் போகின்றான். உன்னை உள்ளே தள்ளப் போகின்றார்கள்.
யார் எலும்பை இப்பொழுது யார் நொறுக்கப் போகிறார்கள் என்று
பார் என்று சொன்னேன்.
அப்படியே மிரண்டு விட்டான். மிரண்டவுடனே அங்கே இருப்பவர்களெல்லாம்
சிபாரிசு செய்தார்கள்.
அந்தப் பையன் இங்குதான் இருக்கின்றான். இவனைக் கூட்டிக்
கொண்டு போ. ஆனால், இவனுக்கு ஏதாவது விபத்து ஆனதென்றால், நீ கையெழுத்துப் போட வேண்டும்.
அதாவது, இவன் உயிருக்கு ஆபத்து வந்தால் “நான் தான் பொறுப்பு”
என்று எழுதி சாட்சிக் கையெழுத்து போடு. அவன் ஏதாவது காணாமல் போனாலும், அல்லது அவன்
தாயார் மாதிரி ஏதாவது ஆனாலோ நீ உள்ளே ஜெயிலுக்குள் போய்விடுவாய்.
உன்னை இப்பொழுது கொண்டு போய் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து
வாங்கிவிட்டுத்தான் அனுப்புவார்கள். உனக்கு அந்த மந்திரியைத் தெரிந்திருந்தாலும் சரி,
சேனாதிபதியைத் தெரிந்திருந்தாலும் சரி. முதலில் இதைச் செய்துவிட்டுத்தான் போகவேண்டும்
என்று சொன்னேன்.
அப்புறம் முழித்துக் கொண்டிருந்தார். போலீஸ் ஸ்டேசனில்
வந்து கையெழுத்து மட்டும் இல்லை, உன் ரேகையையும் வைத்துவிட்டுப் போ. என்றேன். அப்புறம்
அங்கு சொல்லிவிட்டுத்தான் அனுப்பி வைத்தார்கள்.
பையனைக் கூட அனுப்பி
வைத்தவுடன் என்ன ஆகிவிட்டது? பழையபடி அவனைக் காணோம். நான்கு நாள் ஆகிவிட்டது
போனவன் எங்கேயோ போய்விட்டான்.
நான்கு நாட்களாகப பையனைக் காணவில்லை. காணோம் என்று தெரிந்தவுடன்
அவருக்கு என்ன ஆகியது? அங்கிருந்து தபால் எழுதுகின்றார்.
இந்த மாதிரி நான் கூப்பிட்டு வந்தவுடன் என் பையன் காணாமல்
போய்விட்டான். நான் என்ன செய்வது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் தான் அவன் எங்கிருந்தாலும்
கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று எனக்குக் கடிதம் எழுதுகின்றார்.
நானும் பதில் தபால் எழுதினேன். இப்பொழுது நீ கொண்டு வந்து
உன் பையனை ஒப்படைக்கவில்லை என்றால் நான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய், நீ உன் பையனைக்
கொன்றுவிட்டு எதோ தந்திரம் பண்ணிக் கொண்டிருக்கிறாய். என்று போலீஸ் ஸ்டேசனிலிருந்து
உனக்கு இப்பொழுது ARREST வரப் போகின்றது. நீ மந்திரி மற்ற தெரிந்தவர்களையும் கூட்டிக்
கொண்டுவா என்றேன்,
அங்கே என்னாகிவிட்டது என்றால், அவருக்குப் பதறிப்போய்
ஆட்டமாகி விட்டது. அவருக்கு இரண்டு பெண் குழந்தை இருக்கின்றது. இவர்களை நான் வெட்டிப்
போட்டுவிட்டு ஜெயிலுக்குப் போகின்றேன்.
பையன் என்னா ஆனானோ? தற்கொலை பண்ணிக் கொண்டானோ? ஒன்றும்
தெரியவில்லை. நான் கேவலப்படுவதற்குப் பதில் உங்களையும் வெட்டிக் கொன்று விட்டு இரண்டாவது
தரம் பார்க்கிறேன். இப்படிச் சொல்லிவிட்டு தன்னுடைய இரண்டு பெண்களை வெட்டப் போயிருக்கிறார்.
அப்படி வெட்டப் போகும் பொழுது, அந்தப் பெண்ணின் கண்களில்
ஒரு பக்கம் நானும், இன்னொரு பக்கமும் முருகனும் காட்சி தெரிகின்றது.
சாமி எங்கடா?
சாமியார் எங்கடா? சொல்லிக் கொண்டிருந்த அந்த ஆளுக்கு தன் பெண்ணின் கண்ணில் அந்தக் காட்சி
தெரிகின்றது.
அந்தக் கண்களிலிருந்து ஒளிகள் வருகின்றது. நீ உடனே அங்கே
தேடிப் போ. அங்கே உன் பையனைக் கண்டுபிடிக்க முடியும், அங்கே போனால் உனக்கு
விடை கிடைக்கும் என்று சொல்கிறது.
உடனே அந்த வெட்டுகிற அரிவாளைப் போட்டுவிட்டு நேராக இங்கே
என்னைத் தேடி வந்தார். நான் முருகனையே பார்த்துவிட்டேன். இந்தச் சாமியாரை உன் கண்ணிலேயே
பார்த்துவிட்டேன். உன்னிடம் சக்தி இருக்கின்றது.
சக்தி இல்லை என்றவர் விறு விறு என்று வந்தார். வந்தவுடன்
நேராக வந்து என்ன செய்தார் தெரியுமா? காலில் வந்து அப்படியே விழுந்தார்.
எல்லாம் பொய் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என் பிள்ளை
ஒரு கண்ணில் முருகனைப் பார்த்தேன். என் பிள்ளை இன்னொரு கண்ணில் உங்களைப் பார்த்தேன்.
நீங்கள் பெரிய சக்தி வாய்ந்தவர்.
அப்படிங்களா..,! எனக்குச் சக்தியும் தெரியாது, ஒன்றும்
தெரியாது. குருநாதர் எப்படியோ ஆட்டிப் படைக்கின்றார் என்று சொன்னேன்.
இல்லைங்கே, என்னை நீங்கள் காப்பாற்றுகிறேன் என்று சொன்னால்தான்
எழுந்திருப்பேன். நிஜமாகவே என் பையனைக் காணோம். அவர்களை வெட்டிக் கொன்று போடலாம் என்று
நினைத்தேன். ஆனால், இந்த அரிவாளும் சரியாக வேலை செய்யவில்லை.
அப்பொழுது நான் சொன்னேன். நேராக தேங்காய் பழத்தை எடுத்துக்
கொண்டு, பழனி மலையை இருபது தடவை கிரி சுற்று. மேலே சென்று தேங்காய் உடைத்து என் பையன்
வரவேண்டும், என் சம்சாரம் வரவேண்டும். இனி இந்தத் தவறெல்லாம் நீங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு
வா.
அங்கே அர்ச்சனை சீட்டு இரண்டு வாங்கு. ஒன்றை இங்கே செய்துவிட்டு
ஒன்றை இங்கே கொண்டுவா என்றேன்.
அதே மாதிரி செய்துவிட்டு வந்தார். பிறகு அந்தப் பையனும்
வந்தான். அவர்கள் அம்மாவும் வந்து விட்டார்கள்.
வந்த பிற்பாடு
இயற்கையிலேயே
சக்தி இருக்கிறதென்று இன்றைக்குத் தான் நான் உணருகின்றேன்.
இந்த மாதிரி தவறெல்லாம் இனிமேல் நான் செய்ய மாட்டேன் என்று
கடைசியில் ஒப்புக்கொண்டு அதில் இருந்து ஒரு பெரிய பக்தர் ஆகிவிட்டார்.
பக்தர் ஆன பிற்பாடு சில நேரங்களில் இங்கே வந்து போய்க்கொண்டிருப்பார்.
என் குழந்தை அருள்வாக்கு சொல்லுகின்றது என்று சொன்னார்.
அதெல்லாம் ஆகாது. அந்த உடலில் உள்ள ஆன்மா அருள் ஒளி பெறவேண்டும்.
ஆக இந்த நிலை மாற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள் என்று நான் சொன்னேன்.
ஏனென்றால், எதன் வழியில் அங்கே இறந்ததோ அந்த ஆன்மா உன்
பையன் உடலிலிருந்து பல ஜோசியங்கள் சொன்னாலும்,
இன்னொருவர் உடலின் தன்மை நோயின் தன்மை இழுத்து,
இந்த உடலில் நோய்
வந்துவிடும்.
ஆகையினாலே, இது உண்மையிலே தெய்வம்
இல்லை. உடலிலிருந்த ஆவியின் தன்மை இந்த மாதிரி வந்தது.
இந்த நிலையில் அது செயல்படுகின்றது என்று சொன்னேன்.
அப்புறம் அதிலிருந்து விட்டுவிட்டார். இது நடந்த நிகழ்ச்சி.