ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2014

நான் எந்தத் தவறும் செய்யவில்லை ஆனால் எனக்கு ஏன் கெட்டது நடக்கிறது என்று குழம்புகிறோம்...! தவறுக்குக் காரணம் யார்...?


இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் சரக்கு வாங்குபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் தியானித்து உணர்வலைகளைப் பரப்பினோம் என்றால், நம்மிடம் பொருள் வாங்கியவர்கள்,
“இவர்கள் கடையில் வாங்கினேன்,
சரக்கு நன்றாக இருந்தது” என்பார்கள்.

அதே சமயத்தில், நீங்கள் சங்கடமான நிலையில் இருந்து பொருளைக் கொடுத்துப் பாருங்கள். சரக்கு வாங்கியவர்கள்
“ஐயோ போய்விட்டதே,
நஷ்டமாகிவிட்டதே” என்பார்கள்.

அடுப்பிலே வேலை பார்த்தால், கவனக்குறைவாகி பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடும், நாம் வேதனைப்படுவோம். இந்த சங்கட உணர்வுகள் அங்கே தாக்கப்படும். ஏனென்றால், இந்த உணர்வினுடைய ஆதிக்கம் அங்கே செயல்படுகிறது.

ஒரு மனிதன் சங்கடமான நிலைகளில் இருக்கப்படும் பொழுது, பொருள் தரனதாக இருந்தாலும் நிச்சயம் சுவை மாறுபட்டுவிடும்.

ஏனென்றால், இந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே பேசப்படும் பொழுது, இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படுகிறது, இந்த உணர்வின் நிலைக்கொப்பத்தான் இயக்கம்.

நான் அதைச் செய்தேன்,
இதைச் செய்தேன் என்றால்
“யாரும்” ஒன்றும் செய்யவில்லை.
ஆக, உலகத்தினுடைய உணர்வினுடைய நிலைகளில் இந்த உணர்வுகள்தான் இயக்கம்.