1. பனை மரத்தில் கருப்பணசாமி இருக்கிறது என்று புரளியைக் கிளப்பச்
சொன்னார் குருநாதர்
ஒரு சமயம் என்ன செய்யச் சொன்னார் நமது குருநாதர்? “நீ
போய் சும்மா ஒரு புரளியைக் கிளப்பு” என்று சொன்னார்
குருநாதர்.
ஒரு பனை மரம் இருந்தது. ஒருவனுக்குக் காசைக் கொடுத்து,
இரவு அங்கே போனேன், கருப்பணசாமி அங்கே வந்தது. கருப்பணசாமி ஒருவனை அடித்து அங்கேயே
தூக்கிப் போட்டுவிட்டது. நான் இதைப் பார்த்து பயந்து வந்துவிட்டேன் என்று மற்றவர்களிடம்
சொல்கிறான்.
இவன் இப்படிச் சொன்னவுடன் ஒருவன் அதற்காக வேண்டி, சில
நிலைகளைச் செய்து கோழியை அறுத்து அந்த இரத்தத்தை அந்த இடத்தில் (பனை மரம்) போட்டுவிட்டு
வந்தான்.
பார்த்தால் இரத்த இரத்தமாகக் கக்கிட்டான், தூக்கிக் கொண்டு
போய்விட்டது என்றான்.
இதை அடுத்து இன்னும் இரண்டு பேரிடம் சொன்னவுடன் அங்கே
போய்ப் பார்க்கிறார்கள்.
ஆக, பனை மரத்துக்கு
அருகில் சென்றவுடன் அங்கே கருப்பணசாமி இருக்கிறது என்று பயப்படுகிறார்கள்.
இந்த பயத்திலேயே மாலை 6 மணி ஆகிவிட்டாலே யாரும் அந்தப்
பக்கம் போவதில்லை.
ஆனால், அந்த சமயத்தில் அந்த எண்ணங்கள் இயக்கி
திடீரென்று, “அங்கே பேய் வந்து ஆடுகின்றது,
பேய் வருகின்றது” என்று அதிர்ச்சியாகி
அந்த உணர்வுகளை நுகர்வோருக்கெல்லாம்
அந்த நிலை வருகின்றது.
நுகரும்பொழுது அன்றைக்கு அந்தப் பக்கம் சென்றேன், பேய்
வந்தது. நடுங்கிப் போய்விட்டேன் என்று பய உணர்வை வெளிப்படுத்துகின்றார்கள்.
2. அதிர்ச்சியால் உருவான அணுவிற்கு, அதிர்ச்சியான உணர்வை உணவாகக்
கொடுக்கின்றது உயிர்
குருநாதர் இதையெல்லாம்
பரீட்சாந்திரமாகச் செய்யச் சொல்லி
மனிதனுடைய உணர்வுகள் அவன் எப்படி எடுத்துக் கொள்கிறான்?
எப்படி நடக்கின்றது?
அவனுக்குள் எப்படி அந்த உணர்வுகள் விளைகிறது?
என்று எமக்கு தெளிவாக உணர்த்துகின்றார்.
நம்முடைய எண்ணங்கள்
நாம் நுகரும் உணர்வு எதுவோ
அதைத்தான் நம் உயிர் இயக்கி
“அந்த உணர்வின்
அணுவாக” அது மாற்றுகின்றது
அப்படி உயிரால் உருவாக்கப்பட்ட “அந்த அணுவிற்கு”
அந்த அதிர்ச்சியான உணர்வே
உணவாகத் தேவைப்படுகின்றது.
ஏனென்றால், மக்கள் மத்தியில் ஒருவர் எண்ண உணர்வுகளை அது
மீண்டும் பதிவு செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகின்றது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றார்
நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.