1. உங்கள் வீட்டில் செய்வினை செய்திருக்கிறார்கள் என்று சொல்லிக்
கொண்டு உள்ளே வருவார்கள்
இப்பொழுது
சாதாரணமாக ரோட்டில் போகின்றவன், “டொய்ங், டொய்ங்” என்று வாத்தியத்தை வாசித்துக் கொண்டு வருவான். என்ன என்று நாம் அவனைக் கூர்ந்து
கவனித்தால் என்ன செய்வான் தெரியுமா?
“ஐயா வீட்டில் இந்த
மாதிரி கஷ்டம் இருக்கிறது”.
உங்கள் வீட்டில் பொருள் வைத்திருந்தீர்கள்,
அது காணாமல் போய்விட்டது.
உங்கள் வீட்டில் செய்வினை செய்திருக்கின்றார்கள்
என்றெல்லாம் சொல்வான்.
நாம் என்ன
செய்வோம்? “இங்கே வாப்பா” என்று அவனைக் கூப்பிடுவோம்.
அவன் என்ன செய்வான்? நம் உடலில் உள்ள உணர்வைக்
கவர்ந்து, எல்லாவற்றையும் எடுத்துச் சொல்வான்.
உங்கள்
வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள், சொந்தக்காரர்கள் இந்த மாதிரி எல்லாம்
கெடுதல் செய்து வைத்திருக்கின்றார்கள் என்றெல்லாம் சொல்வான்.
நான் எல்லா
உண்மைகளையும் சொல்கின்றேன். நிச்சயமாக நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது.
எப்படியென்றால் நான் சொல்வேன் என்பான். பிறகு என்ன செய்வான் தெரியுமா?
ஒரு பொம்மையை
வைத்திருப்பான். அதில் ஒரு ஆணியை வைத்து அடிப்பான். அடித்துக் கொண்டே சத்தியமாகச் சொல் .
உண்மையை வெளியில் சொன்னால் நீ என்ன செய்வாய்? என்று பொம்மையைப் பார்த்துக் கேட்பான். “ஜக்கம்மா!.., மண்டையைப் பிளந்துவிடு” என்பான்.
இப்படியெல்லாம்
சொல்லி, யாரிடமும் சொல்ல மாட்டீர்கள், நான் சொல்லட்டுமா என்பான்.
நாம் பயத்துடன்
சரி என்போம்.
உங்கள்
பக்கத்துவீட்டுக்காரர் அல்லது சொந்தக்காரர் இந்த மாதிரி செய்வினை செய்து வைத்திருக்கின்றார்கள். அதனால்
உங்கள் குடும்பத்தில் தொல்லை வருகின்றது. நீங்கள் செய்யும் வியாபாரமெல்லாம்
மந்தமாகின்றது என்று சொல்வான்.
“அப்படியே
புட்டுப் புட்டு வைத்துவிட்டானே” என்று நாம் நினைப்போம்.
அடுத்து
இன்னொன்றும் சொல்வான். உங்கள் வீட்டுக்குள் இந்த இடத்தில் அடுக்குப் பானைக்குள் இவ்வளவு பணம் வைத்திருக்கின்றீர்கள் என்பான். அந்த ரூபாய் நோட்டில் இன்ன நம்பர் கூட போட்டிருக்கின்றது என்பான்.
“அடப் பாவி”, இதையெல்லாம்
சொல்கிறானே என்று எல்லாம் உண்மை என்று நம்புவோம்.
அப்பொழுது
முழுமையாக நாம் நம்பியவுடன் என்ன செய்வான்?
2. நம்முடைய பழைய துணிகளைக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்
கொஞ்சம் பழைய துணி
கொண்டு வாருங்கள்
என்பான். ஏனென்றால், நம் உடலில்
போட்டிருக்கும் துணியும், பாத மண்ணும் எடுத்துக் கொண்டால், நமது ஈர்ப்பு உணர்வுகள்
இந்த மண்ணிற்குள் இருக்கின்றது.
உடலிலே உள்ள மணம் அந்தத்
துணியில் இருக்கின்றது. தலை முடியில் உச்சியின் தன்மை சிந்திக்கும் தன்மை, ஆக இந்த
மூன்றையும் எடுத்துக் கொண்டு தான் இந்த குடுகுடுப்பைக்காரர்கள் சொல்வர்கள்.
அப்புறம் ஒரு படி
அரிசி வேண்டும் என்பான். கடைசியாக ஒரு கருப்புத் துணி கொண்டு வந்தால் பரவாயில்லை
என்பான்.
ஏனென்றால்,
கருப்பு அது பாவத்தின் நிலை. அதைக் கொண்டு மூடவேண்டும் என்று சொல்வான். அப்புறம்
உங்கள் வீட்டில் இன்னொரு பழைய துணி இருக்குமே என்பான். அது இன்ன மாதிரி கலரில்
ஐந்து துணி வேண்டும் என்பான். உங்கள் வீட்டில் இந்த மாதிரி ஒரு தலை முடி இருக்கும்
பாருங்கள். அதை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்பான்.
ஆக, வெளியிலே இன்னார் இதைச் சொன்னதால் இந்த மாதிரி ஆகிவிட்டது
என்று சொல்லிக் கொண்டு என்ன செய்வான்? ஐந்து ரூபாய், பத்து ரூபாய், நூறு ரூபாய் என்று
சொல்லிக் கொண்டே ஆயிரம் ரூபாய் கூட வாங்கிவிடுவான்.
எல்லாவற்றையும்
எடுத்து பந்து போல சுருட்டிக் கொள்வான். இதில் தீய வினைகள் எல்லாம் அடங்கியிருக்கிறது என்பான்.
அதைக் கொண்டு போய்
சுடுகாட்டில் இராத்திரி 12 மணிக்குப் போடவேண்டும்.
அங்கே உள்ள கிணற்றில் போடும் பொழுது, “பூதம் திடீரென்று
பாயும்’ என்று பயத்தை ஊட்டுவான். நீங்கள் போடுங்கள், நான் வரட்டுமா என்பான், நடந்த
நிகழ்ச்சி இது.
நாம் என்ன செய்வோம்? பயந்து போய் நீங்களே கொண்டு போய்
போடுங்கள் என்போம்.
அதற்கு என்ன செய்வான்? இத்தனையும் நான் செய்ய வேண்டுமென்றால்,
என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். நான் திடீரென்று போய்விட்டால் என்ன செய்வது?
அதனால், இன்னும் கொஞ்சம் சேர்த்து, ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை என்று சொல்லி
வாங்கிக் கொள்வான்.
பின், நடந்தது எதையும் சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டீர்கள்
அல்லவா? சொன்னால் என்ன ஆகும்? (உடனே
ஆணியை எடுத்து அடிப்பான்).
ஒரு (முதல்) வீட்டில் இதையெல்லாம் செய்வான். இவ்வளவு நடந்த
பிறகு என்ன செய்வான் தெரியுமா?
3. முதல் வீட்டில் சொன்னது போன்றே அடுத்த வீட்டிலும் சொல்லி
ஏமாற்றுவார்கள்
அடுத்து, பக்கத்து வீட்டில் போய் இதே மாதிரியே சொல்லி
(அதாவது பக்கத்து வீட்டுக்காரர்
செய்வினை செய்திருக்கிறார்), அங்கேயும் முதல் வீட்டில் வாங்கியதை விட அதிகமாகவே பணத்தை வாங்குகின்றான். ஆனால்,
முதல் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
இதெல்லாம் நடந்த நிகழ்ச்சி.
ஊருக்குள் இது மாதிரி நடந்து கொண்டிருக்கின்றது.
குருநாதர் இவர்கள் எல்லாம் என்ன செய்கின்றார்கள் என்று
அறிவதற்காக வேண்டி, என்னை இப்படி வேஷம் போடச் சொன்னார். நானும் ஒரு
பிச்சைக்காரன் போல போகின்றது. ஒரு அழுக்குத் துண்டைப் போட்டுக் கொண்டுதான்
செல்வது.
ஏனென்றால், இதையெல்லாம் அன்றைக்கு அரசர்கள்
கிரிபவனம் வருவார்கள். அதே மாதிரி ஒரு
டென்டைப் போட்டுக் கொண்டு ஜோதிடம் என்ற பெயரில் காடாறு மாதம், நாடாறு மாதம் என்று
இந்த மாதிரி ஆள்கள் (மந்திரவாதிகள்) ஊருக்குள் வருவார்கள்.
ஆக, நானும் அவர்கள் இருக்கும்
இடத்திற்குச் சென்று அவர்களுக்குத் தெரியாமலேயே, ஒரு பைத்தியக்காரன் மாதிரி
இருந்து
அவர்கள் என்ன செய்கின்றார்கள்?
ஏது செய்கின்றார்கள் என்று
பார்த்துக் கொண்டு வந்தது.
தொடர்ந்து பார்த்துக் கொண்டே
வந்தால், ஒரு வீட்டில் ஜோதிடம் சொல்கிறான் என்றால், அடுத்து பக்கத்து வீட்டில் இன்னும் கொஞ்சம் சொல்லி பணத்தை
அதிகமாகவே வாங்கிக் கொள்கின்றான்.
இப்படியெல்லாம் ஊருக்குள்
நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தான் பிழைப்பதற்காக இப்படிச்
செய்கின்றார்கள்.