1. யாம் கொடுத்த அருள் ஞான சக்கரத்தை எடுக்கச் சொல்கிறான் மந்திரவாதி
ஒரு சமயம் என்ன ஆனது? மங்களூரில் ஒரு மந்திரவாதி இருக்கின்றான்.
நம் சொந்தக்காரர் ஒருவர் கோயம்புத்தூரில் பாத்திரம் செய்யக்கூடியவர்.
இவர் பாத்திரம் செய்யும் இடத்திற்குப் பக்கத்தில், காணாமல்
போன ஒரு பெண் குழந்தைக் கண்டுபிடித்து, அதைக் கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று மந்திரவாதி
சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
அதைக் கேள்விப்பட்ட இவர், தன்னுடைய கஷ்டத்தை நீக்க மந்திரவாதியைக்
கேட்கும் பொழுது அவன் இவர் பாத்திரக் கடையில் வந்து பார்த்து,
பாத்திரம் செய்யக் கூடிய மிஷினுக்கு அடியில்
எந்திரத் தகடைப் பதித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறான்.
அப்பொழுது நான் யாருக்கும் தெரியாமல் அங்கே வந்தேன்.
இதற்கு முதலில், முன்னாடி அவர் எம்மிடம் கஷ்டம் என்றும்,
வீட்டில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது, ஏன் என்று தெரியவில்லை என்று சொன்னார். என்னிடமிருந்து
(ஞானகுரு) ஒரு சக்கரத்தை வாங்கி அவர் பாத்திரக் கடையில் மாட்டி வைத்திருந்தார்.
நான் கொல்லூரில் இருக்கும் பொழுது ஜெபம் பண்ணி அதை அவரிடம்
கொடுத்து, நீ இந்த மாதிரி சொல்லி பூஜித்துக் கொண்டு வா என்று பாத்திர வியாபாரியிடம்
கொடுத்தது.
இந்த மந்திரவாதி என்ன சொல்கிறான்?
நான் கொடுத்த
சக்கரத்தை கடையில் அவர் மாட்டியிருப்பதைக் காட்டி, “இதிலேதான் எல்லாக் கெடுதலும் இருக்கின்றது” என்று அதைத் தூக்கி
எடுத்து வைத்துவிட்டான்.
நான் இந்த உணர்வைத் தெரிந்துதான் இங்கே கடைக்குள் வருகின்றேன்.
2. சோடா பாட்டிலில் மண்ணை அள்ளிப் போட்டு ஏமாற்றுகின்றான்
அந்த மந்திரவாதி அங்கே ஒரு கடப்பாரையை வைக்கின்றான். ஒரு
பாட்டில் வைத்திருக்கின்றான். அந்த பாட்டிலில் இந்த மண்ணை அள்ளிப் போட்டவுடன் “குபு..,
குபு..,” என்று பொங்கி வருகிறது. பாருங்கள் எப்படியெல்லாம் பண்ணியிருக்கிறார்கள் என்று
அவரிடம் சொல்கின்றான்.
ஏனென்றால், அந்த பாட்டிலில்
சோடாவை ஊற்றி வைத்திருக்கின்றான்.
மண்ணைப் போட்டால் தன்னாலே பொங்கி வரும்.
ஆக, வீட்டிலிருப்பவர்களுக்கு
என்ன தெரியும்?
இதைப் பண்ணி முடித்தவுடன் அடுத்து என்ன செய்கிறான்? கடப்பாரை
முனையை வைத்துக் கொண்டு, “நீ குத்து., குத்து.,” என்று சொல்லி அழுத்துகிறான் மந்திரவாதி.
“ம்..,” என்றவுடனே, உங்கள் வீட்டில் செய்வினை செய்திருக்கிறார்கள்.
மிஷினுக்கு அடியில் ஒரு சக்கரத்தை வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறது. நீங்கள்
அதை எடுக்க வேண்டும். அதற்கு இரண்டாயிரம் ரூபாய் ஆகும் என்றான்.
நீங்களே தோண்டுங்கள் என்கிறார்.
மந்திரவாதி தோண்டியவுடனே, அதே மாதிரி சக்கரம் மிஷினுக்கு
அடியில் இருக்கின்றது.
“அடப்பாவிகளா, இந்த மாதிரி செய்து வைத்திருக்கிறார்களே”
என்கிறார்.
மிஷினுக்கு அடியில் இந்தச் சக்கரம் இருந்ததனால்தான் உங்களுக்குக்
கஷ்டம். அதனால், இந்தச் சக்கரத்தை மூன்றாவது வீட்டில் கொண்டு போய் அவர்களுக்குத் தெரியாமல்
வைத்துவிடுங்கள். இந்தக் கஷ்டம் அவர்களுக்குப் போகட்டும் என்கிறான் மந்திரவாதி.
3. என்னப் பார்த்தவுடன் மந்திரவாதி மயங்கி விழுந்தான்
அப்பொழுது அந்தச் சக்கரத்தை எடுத்தவுடனே நான் என்ன செய்தேன்?
திடீரென்று அங்கே உள்ளே சென்றேன். என்னப்பா சக்கரம் எங்கே? என்றேன்.
இவ்வளவையும் சொன்னானே அந்த மந்திரவாதி.., என்னைப் பார்த்தவுடனே
“ஆ..,” என்று மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான்.
அப்புறம் எழுந்து, “என்னை மன்னித்துவிடுங்கள்” என்றான். வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுத்தான். யாம் சுற்றுப்பயணத்தின்
போது நடந்தது இந்த நிகழ்ச்சி.