1. திட்டியவர்களை நாம் திரும்பத் திரும்பதான் எண்ணுகின்றோம்
திட்டியவர்களைப் பதிவு செய்து அதை எண்ணிய உடனே நமக்கு
கோபம் வருகின்றது.
அன்றைக்கு நாம் ஒரு கணக்குப் பார்த்தோம் என்றால், திட்டியவர்கள்
எண்ணியவுடனே “இப்படித் திட்டுகிறார்களே” என்று எண்ணினால்
இந்தக் கணக்கை நாம் விட்டுவிடுவோம்.
தப்பும் தவறுகளாகத்
தான் நாம் எழுத முடியும்.
அதே சமயம், எனக்கு இந்த மாதிரி துரோகம் செய்தான் என்று
எண்ணினால் அங்கே தவறாக ஆகும். ஏனென்றால் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றோம்.
ஆக, நம்மையறியாமலே இத்தகைய நிலைகள் நடக்கின்றது.
இதைப் போலத்தான் உள்ளுக்குள் இந்த உணர்வைப் பாய்ச்சிவிட்டால்,
ஆக தீமை என்ற உணர்வு நீங்கள் அறிந்துவிட்டால் அடுத்தகணம் பதிவு செய்துவிட்டால் துருவ நட்சத்திரத்தை நீங்கள் நுகர்ந்து கொண்டால் இதை அடக்கும்.
ஆக, ஒவ்வொரு நிமிடத்திலும்
தீமைகளை அடக்கக்கூடிய சக்தி உங்களுக்குள் வரவேண்டும்.
இந்த நிலையை பெறச் செய்வதற்குத்தான்
திரும்பத் திரும்பச் சொல்லுகின்றோம்.
2. திரும்பத் திரும்பச் சொன்னாலும், சாமி என்ன சொன்னார் என்று
திருப்பிச் சொல்லத் தெரியாது
என்னடா.., சாமி திரும்பத் திரும்ப இதையெல்லாம் சொல்கிறார். தலைவலியாக
இருக்கிறது என்று சில பேர் எண்ணுகின்றார்கள்.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் சாமி திரும்பச் சொல்கிறார்.
ஆனால் கேட்டு முடிந்தபின்,
சாமி என்ன சொன்னார் என்று கேட்டால்
திருப்பிச் சொல்லத்
தெரியாது.
ஆக, திரும்பச் சொல்கிறார் என்று தெரியும் என்ன சொல்கிறார்
என்று மட்டும் தெரியாது. இதைப் போல நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் தப்ப வேண்டும் என்பதற்காகத்தான்
சொல்கிறோம்.
இராமாயணம் எழுதுகின்றார்கள். வான்மீகி எழுதிய இராமாயணத்தைத்
திரும்பத் திரும்ப அதையெல்லாம் வாசிக்கின்றார்கள். அதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
இராமாயணத்தை எத்தனை பேர் எத்தனை தடவை சொன்னாலும், வருடா
வருடம் சொன்னாலும், அதையேதான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.