ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 4

குறை கூறும் உணர்வுகளை நாம் வளர்க்கக் கூடாது
யார் யார் குறை சொல்லும் உணர்வுகளை எடுத்துள்ளார்களோ
குறை கூறிய உணர்வுகள் அவ்வுடலிலேயே விளைந்து,
அந்த உயிரான்மா உடலைவிட்டுப் பிரிந்தபின்
யார் மீது குறை கூறியதோ
அவ்வுடலுக்குள் சென்றுவிடும்.

பின் மனிதனாகப் பிறக்கச் செய்யும் நிலையை இழக்கச் செய்து, கீழான பிறவிகளுக்கு அழைத்துச் சென்று அந்த உடலாக மாற்றிவிடும் உயிர்.

ஆக, மீண்டும் இந்த மனித உடல் கிடைக்கும் வரை எத்தனையோ கொடுமையான வேதனைகளை அனுபவிக்க நேரும். குருநாதர் இதை நேரடியாகவே எமக்கு உணர்த்துகின்றார்.
மகிழ்ச்சியைக் காண நாம் என்ன செய்யவேண்டும்?
ஒவ்வொரு நிமிடமும் அனைத்து மக்களும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்.

உங்களுக்குள் அந்த மகிழ்ச்சியைக் காணமுடியும்.

யார் கடும் சொல்லைச் சொன்னாலும்,
“உன்னையறியாத நிலையிலிருந்து தப்புவாய்”
என்று இதைச் சொல்லுங்கள்.

நீ அனுபவித்தே தீருவாய் என்கிற பொழுது இரண்டு பேரும் கெடும் நிலை வரும். மனிதருடைய நிலைகளுக்குள் அத்தனை நிலைகள் உண்டு.
விண்ணுலகம் செல்லும் வித்தையைக் கற்க வேண்டும்

ஒரு சமயம் காசி கங்கைக் கரையில் இராமகிருஷ்ண பரமகம்சர் இருக்கும்போது ஒருவர் “நான் நீரின் மேல் நடந்து காட்டுவேன்” என்று சொன்னார்.

அதற்கு பரமகம்சர், நீரின் மேல் செல்வதற்கும் ஆற்றைக் கடப்பதற்கும் எத்தனையோ படகுகள் இருக்கின்றன. இதற்காக வேண்டி சக்திகளைப் பெற்று நீரில் நடந்து செல்வதால் உனக்கு என்ன நற்பயன் விளையப் போகிறது?

இவ்வளவு பெரிய வித்தையும் நீரைக் கடப்பதற்கா? என்று கேள்வி கேட்டார்.

பின், உலக வாழ்க்கையில் நஞ்சினை வென்று
புவியின் ஈர்ப்பினைக் கடந்து,
“நீ விண்ணுலகம் செல்லும் வித்தைகளைக் கற்றுக் கொண்டாயா? என்று கேட்டார் பரமகம்சர்.

இது பற்றிய பரமகம்சரின் உணர்வுகள் எந்தப் பத்திரிக்கையிலும் வரவில்லை.

September 15, 2014

குருநாதர் கொடுத்தது "கோடி கோடி - தேடித் தேடி - நாடி நாடி" - உன்னை நாடி வருகின்றது என்பார்

நீ (சாமிகள்) வேதனையை அறிகின்றாய்”, அதே போல நான் (குருதேவர்) கொடுக்கும் அடியின் தன்மை உனக்கு எப்படி வருகின்றது”.

இப்பொழுது பாசத்தால் அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. நீங்கள் தமாஷாக அடித்துப் பாருங்கள், கோபம் வருகிறதா என்று பார்க்கலாம், 

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சொல்லை மட்டும் இலேசாக குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள், இந்த உணர்வுகள் மாறும்.

ஆகவே, குரு எனக்குக் காட்டும் நிலைகள் கொண்டு அவர் என்னை அடிக்கப்படும்பொழுது, அந்த உணர்வின் தன்மைஎது?”,
அடித்தவுடன் சிரிப்பார்
சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்.
            
உனக்குள் எத்தனை கோடி உணர்வுகள் சேர்த்து,  நான் அடிக்கும் அதாவது  அடிக்கும் உணர்வுக்குள்இருப்பதை, 
என் (குருதேவர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும்,
அந்த நினைவால் கலந்த உணர்வும்,  
உன்னுடன் எப்படி அது சேர்ந்து,
அண்டத்தை அறிகின்றாய் என்று நீ பார் 
என்று குரு காட்டுகின்றார்.
ஆக நீ அதை (அண்டத்தை) அறிந்துவிடு, “ஒரு மனிதனின் உணர்வுக்குள் நீ சொல்லைப் பாய்ச்சிவிடு, அங்கே கிளரும் உணர்வின் தன்மை நுகர்ந்தறி,

அப்படி நுகர்ந்தறிந்தால், அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும், ஆனால், அவனை மாற்ற முடியாது. 

ஒரு செடியின் நிலைகள் காரத்தின் தன்மை கொண்டதோ, கசப்பின் தன்மை கொண்டதோ, அதன் நிலை மாறாது. அதைப்போல அவரின் உணர்வின் தன்மை மாறாது,

ஆனால் மாறாத நிலைகள் கொண்டு, நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும். ஆனால் இதை எவ்வாறு மாற்றுவது? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப்போன்று கேள்விகள் கேட்டு பின் விளக்கங்கள் கொடுத்து, “விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது என்றும், இது கோடி உணர்வுகள் சேர்த்து உணர்வின் நிலைகள், அவர் (குருநாதர்) சொல்வார்,

கோடி கோடி, கோடி கோடி, கோடி கோடி,
என்ற நிலையில்
தேடித் தேடி, தேடித் தேடி இதை நான் பெற்றேன்

கோடி கோடிஎன்ற நிலைகளில்,
தேடித் தேடி தேடிச் சென்று பெற்றேன்”,

ஆக உன்னை  “நாடி நாடி நாடி வருகின்றது
ஆனால்,  நீ தேடித் தேடிஅதைப் பெறவேண்டும்  என்று
இப்படிச் சொல்வார்.  

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோமென்றால், இப்படி என்னை அடித்தவுடன், “உன்னை தேடித் தேடி வருகின்றது, நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்என்று இப்படிச் சொல்வார்.

ஏனென்றால், இதெல்லாம்  குருநாதருடைய சொல்லுக்குள் சூட்சமம். ஆக, இது அனைத்தும் சூட்சமம்தான். 

ஆக இந்த பொருள் காணும் தன்மை, இந்த கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது என்ற நிலையைத்தான், இந்த கோடியின் நிலைகளை  நீங்கள் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாக  குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன். 

ஆக அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும், அவர் (குருநாதர்) பிறவா நிலைகள் பெற்ற நிலையில், நாமும் பிறவா நிலைகள் அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.
விண்ணுலக ஆற்றலையும், இந்த நிலை, இதுதான் கோடி கோடிஎன்று சொல்லும்பொழுது, “இந்தக் கோடியைச் சாப்பிட்டால், நீ எதை எதையெல்லாம் போய் சாப்பிடலாம் போய் சாப்பிடறா.., பாருடா..,என்று குருநாதர் சொல்வார்.

அதனால்தான் இப்பொழுது உங்களுக்கு, எது எது எதை எதை விழுங்குகிறது? என்ற நிலையை அதாவது,
உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை, 
அந்தத் தீமையை எடுத்து,
அதை ஞானியர்களுடைய உணர்வுகளுடன் கலந்தவுடன்
அது விழுங்கி அந்தத் தீமைகளை அடக்குகின்றது.

அதை அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக, ஆக உணவு தேவைதான், ஆனால் இதனுடைய தன்மை அதற்குத் தேவை. 

ஒரு மரம், கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து, எண்ணெய்ப்பசை இருந்தால்தான் எரியும். எண்ணெய்ப்பசை இல்லையென்றால் கருகிவிடும்.

இதைபோலத்தான் எதனின் உணர்வின் தன்மை எதுவாக இருப்பினும், ஒரு குழம்பிற்குள் சுவை தேவை என்றால், காரம் தேவை. அந்தக் காரத்தை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

ஆகவே, இதைப்போல நாம் எத்தகைய தீய குணம் இருப்பினும், அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை விழுங்கிடல் வேண்டும்.

ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால்,
தீமைகளை இது விழுங்கும். 
எனவே, மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானம் அறிய வேண்டும் என்றால், இப்பொழுது உங்களுக்குள் கேட்டறிந்த உணர்வுகள், உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும், அவை அனைத்திலும், எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலந்து. அவ்வாறு கலக்கும்பொழுது, இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாக துகள்களாக இது சேர்கின்றது.

இவ்வாறு சேர்த்துகொண்ட இந்தத் துகள்கள் இந்த உணர்வுகள் நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.

எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும்பொழுது, இங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது.  அந்தத் திறன் இல்லையென்றால், நாம் செயலாக்கமுடியாது.

அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்குத்தான், இந்த உணர்வைப் பதிவு செய்வதும், அந்த உணர்வின் துணைகொண்டு, தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்றும், அதே சமயத்தில்
அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணும்பொழுது,
நுகர வேண்டுமென்பதற்கும்தான் இதை உபதேசிப்பது.

September 14, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 3

அரச காலங்களில் செயல்பட்ட தவறான மந்திர நிலைகள்தான் இன்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளது
அரசர்கள் கற்பித்த உணர்வின் தன்மையின் ரகசியங்களை அரசர்களிடத்தில் சேனாதிபதிகளாக, மந்திரிகளாக இருந்தவர்களும் அறிந்திருந்தார்கள்.

இந்த ரகசியங்களைப் பின்பற்றி மக்களிடையே தங்களை சித்தர்களாகக் காண்பித்துக் கொண்டு, மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளை மந்திரங்களாக ஜெபித்து
தவறான வழிகளில்
தான் ஒரு பெரிய ஆண்டவன் என்ற நிலையில்
அன்று அரச காலங்களில் செயல்பட்டு வந்ததுதான்
இன்று வரையிலும் இந்த உலகில் தொடர்ந்து கொண்டுள்ளது.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் உடலைக் கோவிலாக எண்ணச் சொன்னார்கள். மனித உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத்தான் கோவிலாகக் கட்டி வைத்திருக்கிறார்கள்.

அன்று வாழ்ந்த ஆதிசங்கராச்சாரியார் நம் உடலில் மெய் ஒளியைப் பரப்பச் சொன்னார்கள்.

ஆனால், இன்று என்ன சொல்கிறார்கள்?

பிள்ளை வரத்திற்கு இந்தக் கோவில்; திருமண தடை நீங்க இந்தக் கோவில் என்று ஸ்தல புராணங்களை எழுதி வைத்து, சனி பிடித்தால் திருநள்ளாறு போ என்று திசை திருப்பி, ஊர் ஊராக மக்களைச் சுற்ற வைத்துவிட்டார்கள்.
உருவாக்கி இயக்கும் சக்தி நம் உயிரான ஈசன் தான் – எவரும் எதுவும் செய்ய முடியாது
நல்ல நேரம் வந்தால் கல்யாணத்தைப் பண்ண வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். எவரும் எதுவும் செய்ய முடியாது.

உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனிடத்தில் சுவாசிக்கும் உணர்வின் தன்மை விளைய வைத்து அதனை உங்களுக்குள் சேர்த்து, அந்த உணர்வின் தன்மை உயிராத்மாவாகச் சேர்த்துச் சென்றபின்,
அவனே நம்மை உருவாக்குகின்றான்.
அவனுக்குள் சேர்ந்த உணர்வின் தன்மைக்கொப்ப
அடுத்த உடலை உருவாக்கிவிடுவான்.
உயிரான ஈசனிடம்தான் நாம் வேண்ட வேண்டும்
எந்த நிமிடம் ஆனாலும் எந்தக் குறையைப் பார்த்தாலும் ஈஸ்வரா என்று அவனிடம் வேண்ட வேண்டும். ஈஸ்வரா என்ற சொல்லை எப்பொழுதும் மறக்கக் கூடாது.

ஈஸ்வரா என்பது நம்மை உருவாக்கிய உயிர். உருவாக்கத் தெரிந்தவன் உயிர். நாம் எண்ணியதை உருவாக்கினாலும், நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் உயிர்.

ஆகையினால், எத்தகையை நிலை வந்தாலும் அவர்களின் குறைய நீக்கிவிட்டு ஈஸ்வரா என்று வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும்.

உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஜீவான்மா, ஜீவஅணுக்கள் பெறவேண்டுமென்று இந்த உணர்வை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இது வளர்ந்தவுடன் நம் குறைகளை நீக்கும். 
உங்களுக்கு பன்மடங்கு சக்தி கொடுத்துள்ளேன் - ஞானகுரு
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எவ்வளவு சக்தி கொடுத்தாரோ, அதைக் காட்டிலும் பன்மடங்கு சக்தி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.

அந்தச் சக்தியின் துணை கொண்டு தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் எடுக்க வேண்டும்.

சாமி சொல்கிறார், நான் படுகின்ற இம்சை எனக்குத்தான் தெரியும் என்று இதைக் கலந்துவிட்டால் இதைப் பெறமுடியாது.

ஆனால், குரு சொன்னதைச் செய்தால் நிச்சயம் பெறமுடியும்.

September 13, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 2

பிறரை வேதனைப்படுத்திய நிலைகளின் விளைவுகள்
நாம் அறிந்தோ அறியாமலோ பிறரை வேதனைப்படுத்திய நிலைகள், தீயவினைகளாக நம்முள் சேர்க்கின்றன.

அவ்வாறு நமக்குள் சேர்த்துக்கொண்ட நிலைகள் நம்முள் இருந்துகொண்டு குறிப்பிட்ட காலம் வந்ததும் அது நம்முள்ளிலிருந்தும் நோய்களாக அல்லது துன்பம் தரும் நிலையாக வெளிப்படுகின்றது.

இதுபோன்ற நிலைகளிலிருந்து மனிதர் தம்மை மீட்டுக்கொள்ள வேண்டும். மனிதர் தமது ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை நமக்குள் சேர்த்து, தம்முள் அறியாது வந்து சேரும் அழுக்குகளை நீக்க வேண்டும்.
கடவுள் என்று ஒருவன் இல்லை
கடவுள் என்று தனி ஒருவன் இல்லை. கடவுளென்ற நிலையோ, கோவிலில் நம்மைக் காக்கின்ற தெய்வம் என்ற நிலையோ இல்லை.

நம் உயிர் தான் கடவுள். நாம் நுகர்ந்து இயக்கும் தன்மை நம் உடலுக்குள் நின்று இயக்கும் உணர்வுகள் அனைத்தும் கடவுள். நம்முள் நின்று எதன் உணர்வை இயக்குகின்றதோ அதுவே கடவுள்.

நம் உயிர் நம்மை இயக்கினாலும்
நாம் எண்ணியதைத்தான் இயக்கும்.

எந்த உணர்வின் தன்மையை இயக்குகின்றோமோ அந்த உணர்வின் செயலாக நம்மை இயக்கும் ஈசனாக இருந்து இயக்குவதும் உருவாக்குவதும் உயிரே.

இந்த உடலுக்குள் அனைத்தையும் ஆள்வதும் ஆண்டவனாக இருப்பதும் நம் உயிரே.

எண்ணியதை இறையாக்கி, இறையின் உணர்வாக செயலாக்குவதால் நம் உயிரே அந்த உணர்வின் செயலாக இயக்குவதும் நாம் எண்ணியது எதுவோ அது தெய்வமாக இருந்து செயல்படுகின்றது.
நாம் தெய்வமாக ஆகவேண்டும் – ஞானிகள் காட்டியது
ஞானிகள் காட்டிய முறைப்படி யாருமே தெய்வத்தை வணங்குவதில்லை.
அந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும்
தெய்வமாக ஆகவேண்டும் என்று யாருமே எண்ணுவதில்லை.

இனியாவது கோவிலுக்குச் சென்று நீங்கள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் தியானியுங்கள். தெய்வ சக்தி பெறவேண்டும் என்று அந்த தெய்வ குணத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
தூங்காமல் தூங்கும் நிலை
இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தையும், சப்தரிஷி மண்டல்த்தையும் எண்ணி அந்த அருள்சக்திகளை நுகர்ந்து அதை உயிருடன் இணைத்து உடல் முழுக்கச் செலுத்த வேண்டும்.

இதுதான் தூங்காமல் தூங்குவது. ஆக, ஒளி சரீரம் பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றும் பொழுது தூங்காமல்தான் தூங்குகின்றோம்.

ஞானகுருவின் பொன்மொழிகள் -- Quotes of Gnanaguru September 2014

30.09.2014
அனைவரையும் மகிழ்ந்திடும் நிலை பெறச்செய்து,
அந்த மகிழ்ச்சியின் தன்மையில்
நமது மகிழ்ச்சியின் தன்மையை
நம்மில் வளர்த்திடும் நிலை பெறவேண்டும்.
29.09.2014
“தன் உடலைக் காக்கும்” எண்ணத்தாலே பரிணாம வளர்ச்சியில் இந்த மனிதப் பிறப்பைப் பெற்றோம்.

இந்த மனிதப் பிறப்பில் “தன் உயிரான்மாவைக் காக்கும்” உணர்வை வளர்த்து ரிஷி நிலை பெறுவோம்.
25.09.2014
மின்னலைக் கண்டு லேசரைப் படைத்தவர் விஞ்ஞானி
மின்னலை நுகர்ந்து தன்னுள் ஒளியைப் பெருக்கியவர் அகஸ்தியர்

அகஸ்தியமாமகரிஷியின் அருளைப் பெற்று, நம்மிடம் உள்ள இன்னலைத் துடைப்போம்.
24.09.2014
மனதைச் சமப்படுத்த பக்குவம் தேவை
பக்குவம் பெறுவதற்கு அருள்ஞானம் தேவை
அருள்ஞானம் இருந்தால் தீமைகளை அடக்க முடியும்
தீமைகளை அடக்கினால் சிந்தனைத் திறனைப் பெறமுடியும்
சிந்தனைத்திறன் பெற்றால் செயல்திறனைப் பெறமுடியும்
23.09.2014
ஒர் நோயாளி தன் நோய் தீர வேண்டுமென்றால், மருத்துவர் தரும் மருந்தை கட்டாயமாக சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

இதே போன்று நம்முள் அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுகளை நீக்க வேண்டுமென்றால், நமக்குள் கட்டாயப்படுத்தித்தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெருகச் செய்ய வேண்டும்.
22.09.2014
உயிரினப் பரிணாம வாழ்க்கையானது ஞானிகள் நமக்கு உருவாக்கிக் கொடுத்த பரமபத விளையாட்டு போன்றது.

பரமபத விளையாட்டில் ஏணிகளும் பாம்புகளும் விளையாட்டை நிர்ணயிப்பது போன்று, நமது பரிணாம வாழ்க்கையில்
நஞ்சான உணர்வுகளை நமக்குள் இணைக்கும்போது
இதனின் உணர்வுகள்
நம்மைக் கீழான பிறவிக்கு அழைத்துச் செல்கின்றது.

அருள்ஞானிகளின் உணர்வை நம்முள் இணைக்கும் பொழுது
பிறவா நிலை எனும் பெருவீடு பெருநிலையைப் பெறச் செய்கின்றது.
21.09.2014
எந்த வண்ணத்தில் நாம் மின் விளக்கைப் பொருத்துகின்றோமோ அந்த வண்ணத்தை ஒளிரச் செய்கின்றது எலக்ட்ரிக் (மின்சாரம்).

இதைப் போன்று நமது உயிரும் எலக்ட்ரிக்.

நமது உயிரில் அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை இணைக்கும்பொழுது நமது உயிர் தன்னில் விளைந்த உணர்வுகளை இயக்கி நம்மிடத்தில் மெய்ப் பொருள் காணும் திறனைப் பெறச்செய்யும்.
20.09.2014
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
நம்மையெல்லாம் கடவுளாக்குகின்றார்
நம்மைக் கடவுளாக மதிக்கின்றார்
நாமெல்லாம் கடவுளாக ஆகவேண்டும்
என்று விரும்புகின்றார்.

அதனைத்தான் செயல்படுத்த அவர் காட்டிய நெறிகளில் நீங்கள் பெறவேண்டுமென்று அந்த உணர்வை இங்கே வழிகாட்டுகின்றார்.
19.09.2014
வளரும் குழந்தைகளுக்கு உணவுடன் அருள்ஞான உணர்வுகளையும் சேர்த்து ஊட்டி வளர்ப்பீர்களேயானால் அந்தக் குழந்தைகள் உலகைக் காக்கும் உத்தமஞானிகளாக, அருள்ஞானிகளாக உருவாகுவார்கள்
18.09.2014
உடலுக்கு ஊட்டம் தருவது பாதாம் பருப்பு கலந்த பால். ஆனால், அந்தப் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்தால் அது தன் சத்தினை இழந்து, முழுவதும் விஷத்தன்மையாக மாறி ஆளையே கொல்லும் தன்மை பெற்றுவிடும்.

இதைப் போன்றுதான், நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகளில் நஞ்சான உணர்வுகள் கலந்தால் நல்ல உணர்வின் அணுக்கள் செயலிழந்து நம்மை வீழ்த்துகின்றது.

ஆகவே, அனுதினமும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் இணைத்து நம்மையறியாது வரும் நஞ்சான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
17.09.2014
உங்களை நீங்கள் நம்புங்கள்
நீங்கள் எடுக்கும் உணர்வுதான் தெய்வம்
பேரண்டத்தின் பெரும் உணர்வுகள் உங்களுக்குள் உண்டு
மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசியுங்கள்
உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவட்டும்
உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காக்க உதவட்டும்

உலகில் மெய்ஞான அருள் ஒளி பரவட்டும்
16.09.2014
தயவு செய்து பிறருக்கு ஏற்படும் துன்பங்களையோ, வேதனைகளையோ பார்த்து சந்தோஷப்படாதீர்கள்.

பிறரின் துன்பத்தைப் பார்த்து, “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்று சந்தோஷப்படுவீர்களானால் அதனின் உணர்வுகள் உங்களில் விளைந்து நோயாக உருவாகிவிடும்.
15.09.2014
சித்திரையாக சிறு திரையாக இருந்து நம்மில் மெய்பொருளைக் காணவிடாது தடைப்படுத்தும் நஞ்சான உணர்வுகளை, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வின் துணை கொண்டு நாம் நீக்குதல் வேண்டும்.
14.09.2014
விஞ்ஞானிகள் இரு உயிரினங்களின் அணு செல்களை எடுத்து ஒரு புதுவிதமான உயிரினத்தை உருவாக்குவது போன்று, அருள் ஞானிகளின் அருள் உணர்வை நம்முள் இணைத்து “அருள் ஒளியினை” நாம் உருவாக்க முடியும்..
13.09.2014
கடல் அலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிறு துரும்பு அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிவது போல நாமும் நம் மனித வாழ்க்கையில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்படுகின்றோம்.

துயர்மிகு இவ்வாழ்க்கையிலிருந்து காத்துக் கொள்வதற்காக மேலான மெய்ஞானத்தைப் பெறவேண்டும் என்று நாம் பாடுபடும் பொழுது மெய்ஞானிகளின் அருளை நாம் பெறமுடியும்.
11.09.2014
ஒருவரைத் தேள் கொட்டிவிட்டதென்றால், தியானம் எடுத்தவர்கள் அவர் கையில் ஏதாவது கொடுத்து வாயில் போடச் சொல்லி,
மரத்தில் கைகளை வைக்கச் சொல்லி
விஷம் இறங்கிவிடும் என்று சொன்னால்

அந்த விஷம் இறங்கிவிடும்
10.09.2014
கல்வி, விஞ்ஞானம் போன்றவைகள் நம் சமூக வாழ்க்கைக்கு மட்டுமே உதவ முடியும்.

மெய்ஞானம் ஒன்று மட்டுமே நம் ஆன்மாவுக்கு உயர்வு தரும். அந்த மெய்ஞானத்தை குருவின் அருளால்தான் பெறமுடியும்.

09.09.2014
இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவல் எழும் பொழுது அது ஞானத்தின் வளர்ச்சிக்கு உரமாகின்றது. அனைத்தும் தெரியும் என்கிற பொழுது அது ஞானத்திற்கு முற்றுப்புள்ளியாகின்றது.


பின், முன்னால் இருக்கும் உண்மைகள் கூட கண்ணால் காணமுடியாத நிலை உருவாகிவிடும்.

08.09.2014
நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் நம்முள் ஜீவ அணுக்களாக விளைந்து ஓம், ஓம் என்று இயங்கிக் கொண்டுள்ளன. இவைகளுக்கெல்லாம் ஈசனாக ஓமுக்குள் ஓமாக இருந்து இயக்குவது உயிர்.


சாபம் என்பது கொடிய விஷம் போன்றது.
சாபம் கொடுத்தவரும் கெடுவார்
சாபம் பெற்றவரும் கெடுவார்.
காலில் ஏறிய விஷம் தலை வரை பாய்வதைப் போன்று சாபம் பெற்ற்வர் மட்டுமல்லாது சாபம் பெற்றவரின் வாரிசுகளும் கெட்டழிவர்.