ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2016

மிக மிகத் திறமையுள்ளவர்களாக நாம் இருந்தாலும் வேதனை அதிகமானால் அந்தத் திறமை திறமையற்றதாகிவிடும்

சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒருவன் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்க்கப்படும் போது
அவன் படும் வேதனை நமக்குள் வந்தபின்
வேதனையின் உருவாக அது நம் உடலுக்குள் வலுப் பெறுகின்றது

ஒருவன் கோபமாகப் பேசும் நிலையில் கொடுரமான உணர்வின் தன்மை வருகின்றது. இது அதிகரித்து விட்டால் நமக்குள் வலுவான நிலைகளில் அது விளைந்து விடுகின்றது.

நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ அதே நிலைகள் சாரதியாக அது அமைந்து அவனை உதைக்கச் செல்கின்றோம். அந்த உணர்வுகள் அவனைத் தாக்கும் உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

இதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

அவன் செய்யும் கோபமான உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் போது அதுவாக மாறி நாமும் கோபக்காரனாக மாறுகின்றோம்.

வேதனைப்பட்டவனின் உணர்வுகளை அதிகமாக நுகரும் போது வேதனைப்படுவரின் உணர்வைச் சுவாசித்துவிட்டால் மயக்கப்படுவோரும் உண்டு சில பேர் அடிப்பதைப் பார்த்தவுடன் அப்படியே மயங்கிக் கீழே விழுந்துவிடுவார்கள்.

சில பேர் கொடூரமாகத் தாக்குவதைப் பார்த்தால் அவனை விடக் கூடாது என்ற நிலையில் வேகமாகத் தாக்க வேண்டும் என்றும் எண்ணுவார்கள்.

விஷத் தன்மையை அதிகமாக நுகரப்படும் போது இத்தகைய நிலைகள் வந்துவிடுகின்றது. வேதனையைச் சுவாசிக்கப்படும் போது அது சாரதியாக அமைந்து அந்த உணர்வின் தன்மை அந்த மனிதனைக் கீழே வீழ்த்தச் செய்கின்றது.

நல்ல குணங்கள் அனைத்தும் இதற்குள் ஒடுங்கிவிடுகின்றது.

நாம் மிக மிகத் திறமையுள்ளவர்களாக இருப்பினும்
வேதனை உணர்வுகளை அதிகமாக நுகரப்படும் பொழுது
அந்தத் திறமை திறமையற்றதாக மாற்றிவிடும்.

நாம் எவ்வளவு வலு கொண்ட நிலைகளில் இருப்பினும் இந்த விஷத்தின் தன்மைகளை அதை நமக்குள் கவர்ந்துவிட்டால் நம்முடைய உயர்ந்த குணங்கள் அனைத்தையும் அது மடியச் செய்துவிடும்.

கராத்தே மாஸ்டர் என்று சினிமாக்களில் அன்று காட்டியிருப்பார்கள். கராத்தேயில் உலகிலேயே அவன் பெரிய சாம்பியன்.

அவன் எல்லாவற்றிலும் வெற்றி கொண்டு செல்கிறான் என்ற நிலையில் சூட்சமத்தில் அவன் உணவுடன் ஒரு துளி விஷத்தைக் கலந்துவிட்டான். அவன் செயல் அனைத்தும் போய்விட்டது.

உடலின் வலிமை அவனுக்குள் எவ்வளவு இருப்பினும் ஒரு துளி விஷம் அவனை அழித்து மரணமடையச் செய்துவிட்டது.

அவன் இந்த உடலில் விளைவித்த உணர்வுகள் அனைத்தும் சோர்வின் தன்மை அடைந்தபின் அவன் மீண்டும் மனிதனல்லாத நிலைகள் கொண்டுதான் செல்ல நேர்கின்றது.

எவ்வளவு வீரியத் தன்மைகளை அடைந்தானோ அந்த நிலையை அவன் சிந்தித்துப் பார்க்கும் போது அவனுக்குள் பழி தீர்க்கும் உணர்வுடன்
விஷத்தின் தன்மை கலந்த இவனின் ஆன்மா
எவன் அந்த விஷத்தை வைத்தானோ
எவன் சூழ்ச்சியின் நிலைகள் செய்தானோ
அவன் நினைவு அங்கே வந்து
அவன் உடலுக்குள் சென்று அவனை அழிக்கும்.

இவனை அழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அவன் உணர்வு கொண்டு இந்த உடலை இந்த நஞ்சு அழித்தாலும் இவன் நினைவாற்றல் அவனை (விஷம் வைத்தவனை) அழிக்க வேண்டும் என்ற உணர்வு முன்னனியில் வந்துவிடுகின்றது.

அழித்திடும் உணர்வு முன்னனியில் வந்தபின் என்ன நடக்கின்றது?
  • ·         அவன் உடலுக்குள் சென்று அது பழி தீர்க்கும் உணர்வாக மாற்றிவிடும்.
  • ·         இந்த உடலின் வலிமை இழந்துவிடுகின்றது.
  • ·         நஞ்சின் வலிமை கூடிவிடுகின்றது.
  • ·         ஒரு உடலுக்குள் சென்றபின் அவனை அழித்துவிடுகின்றது.
  • ·         இவனையும் மனிதனற்ற நிலைகளுக்கு மாற்றிவிடுகின்றது.
இவை அனைத்தும் அந்தந்த உடலிலே விளையும் உயிரின் வேலைகள் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

“உலகைக் காக்கும் அருள் சக்தி” என் கருவில் வளரும் குழந்தை பெற அருள்வாய் ஈஸ்வரா

கருவுற்ற தாய்மார்களுக்கு அன்று ஞானிகள் காட்டியது எதை?

ஆனால், இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?
இப்பொழுது. நாம் எதைப் பார்க்கின்றோம்?
எதை எண்ணுகின்றோம்?
நம் வாழ்க்கையில் எதைப் பார்க்க நேர்கின்றது?

ஒன்றிலிருந்து மூன்று மாதம் கருவிலே இருக்கப்படும் போது சண்டை போடுபவர்களைப் பார்க்கின்றோம். “ஐய்யோ..., பாவிகள்.., எப்படிச் சண்டை போடுகிறார்கள்?”

இதை உற்றுப் பார்த்தபின் அந்தச் சண்டை போட்ட உணர்வுகள் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.

அடுத்து உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்காக தினசரி பத்திரிக்கைகளைப் பார்க்கின்றோம்.

அங்கே கொலை செய்தான், இங்கே வெடி குண்டை வெடிக்க வைத்துக் கொன்றார்கள், அங்கே கெட்டுப் போய்விட்டது இங்கே திருடினான், அங்கே கொள்ளையடித்தான்.., இப்படி என்னென்னமோ அக்கிரமங்கள் நடக்கின்றது என்று பத்திரிக்கையில் அதிகமாக இதைத்தான் படிக்கின்றோம்.

“ஐயோ, ஐய்யய்யோ.., இப்படியெல்லம் உலகில் நடக்கின்றதே..,” இந்த உணர்வுகள் அனைத்தும் கருவில் விளையக்கூடிய குழந்தைக்குப் பதிவாகின்றது.

இது போக வேறு என்ன செய்கின்றோம். டி.வி.யைப் போட்டு வைத்திருக்கின்றோம்.

அசுரத்தனமான உணர்வுகளும் அசுரத்தனமான செயல்களும்
இரக்கமற்றுக் கொன்று குவிக்கும் நிலைகளும்
இரக்கமற்று ஒருவரை ஒருவர் தாக்குவதையும்
படமாக்கிக் காட்டுவதை உற்றுப் பார்க்கின்றோம்.

இத்தகையை படங்களை இரசித்துப் பார்ப்பார்கள். கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாகப் பதிவாகிவிடுகின்றது.

குழந்தை பிறந்தபின் அடுத்தாற்போல் பார்த்தால் அது என்ன செய்யும்?

“டமார்.., டுமார்...,” என்று அடிக்கும். சில குழந்தைகள் கராத்தே அடிப்பது போல் விளையாடும். ஆ! டுஸ்ஸ்.., இ! டுஸ்ஸ்..,” என்று அடித்துக் காட்டி விளையாடும்.

ஒன்றும் தெரியாத அந்தக் குழந்தைப் பருவத்தில் இப்படியெல்லாம் செய்யும். கண்டிப்பாக வீடுகளில் இதை நீங்கள் பார்க்கலாம்.

பெரியவர்களுக்கு இன்றுள்ள டி.வி.யை சரியாக இயக்கி வைக்கத் தெரியாது. ஆனால். இரண்டு வயதுக் குழந்தை டி.வி.யைத் திறந்து அதை இயக்கி வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.
அதில் என்னென்ன விளையாட்டுகள் இருக்கின்றதோ
அதையல்லாம் மிகவும் எளிதாக விளையாடுவான். பார்க்கலாம் நீங்கள்.

ஏனென்றால், கருவிலிருக்கும் போது அந்தத் தாய் டி.வி.யை உற்றுப் பார்த்தது. அதை நினைவு கொண்டது.

அப்படிப் பார்த்த அந்த உணர்வுகள் அங்கே விளைந்து அந்த டி.வி.யைத் திருப்பி வைக்கின்றான் குழந்தை, அது வேலை செய்கிறது.

சினிமாவில் “டிஷ்யும் டிஷ்யும்” என்றுதான் சண்டை போடுவதைக் காட்டுகின்றார்கள். அவன் என்னென்னெ தந்திரம் செய்கின்றானோ குழந்தை அதை அத்தனையுமே அந்தச் சிறிய வயதிலேயே செய்கிறான்.
தாய் பார்த்த உணர்வுகள் கருவிலே விளையப்படும் போது
இப்படித்தான் வருகின்றது.

இதை மாற்றுவதற்குத்தான் அருள் மகரிஷி சொன்னான்.

கருவில் தன் குழந்தை வளரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்தி என் கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் குழந்தைக்குப் பெறவேண்டும்.

இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும். உலகையே காத்திடும் உணர்வுகள் என் குழந்தைக்கு விளையவேண்டும் என்று
அந்த உயர்ந்த ஞானத்தை கருவில் விளையும் அந்தக் குழந்தைக்கு
இதை வினையாகச் சேர்க்க வேண்டும். என்று
அந்தக் கருவுற்ற தாய் பிரார்த்தனை செய்யவேண்டும்.
இது குழந்தைக்குக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.

உலக மக்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்  எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியின் தன்மை பெறவேண்டும் என்ற இந்த உணர்வை வினையாகச் சேர்க்கச் சொன்னான். அதையே கணங்களுக்கு அதிபதியாக்கச் சொன்னான்.

அப்பொழுது அதே தாய் உலக மக்கள் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று அதை எண்ணும் போது அந்த உணர்வுகள் தாய் கருவில் வளரும் அந்தச் சிசுவிற்கு பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

அன்னை தந்தையருக்கும் இந்தச் சக்திகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று இதைச் செய்யச் சொன்னான் அன்று ஞானி.

நாம் செய்தோமா? செய்கின்றோமா?

ஞானிகள் காட்டிய வழியில் இனியாவது செய்வோம். அருள் ஞானிகளை உருவாக்குவோம். உலகைக் காக்க வேண்டும் என்று தவமிருப்போம்.

February 10, 2016

ஏட்டிலும் இல்லை, எந்தப் பாட்டிலும் இல்லை, உங்கள் கூட்டிலும் இல்லை

அன்று ஞானிகள் காவியமாகக் கொடுத்ததை அரசர்கள் காட்டிய நிலைகள் அந்தக் காவியங்களை எழுத்து வடிவுக்கு வரும் போது அது தான் உண்மை என்றும் அதிலே செய்யும் சாங்கியங்களையும் சாஸ்திரங்களையும் செய்து விட்டால் கடவுள் காப்பாற்றுவான் என்றுதான் இன்று இருக்கின்றோம் அல்லவா.

ஆனால், சாங்கியத்தினாலும் சாஸ்திரங்களாலும் “கடவுள் நம்மைக் காக்க மாட்டான்.., காண மாட்டோம்..,” என்ற நிலையை நமது குருநாதர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

இந்த உயிர் எவ்வாறு மனிதனாக உருவாக்கியதோ அவன் தன் உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான், உண்மையான சாஸ்திரம் இது.

அந்த அருளைப் பெறுவதற்குத்தான் ஆற்றங்கரையில் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள். உடல் அழுக்கைப் போக்கித் துணி அழுக்கைப் போக்கிக் கரையேறி வந்தபின் நம்மைக் கிழக்கே பார்க்கும் படி வானை நோக்கி ஏகி அந்தக் கதிரவனின் உணர்வின் ஆற்றலை அதைப் பெறவேண்டும் என்று ஏங்கச் செய்தனர்.

கண்களை மூடித் தன் உடலுக்குள் அதை வலுவேற்றிய பின் அந்தத் தத்துவ ஞானிகள் காட்டிய வழியில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம்
இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசா.., கணேசா.., என்று
நம் உயிரிடம் வேண்டும்படி வைத்தார்கள் ஞானிகள்.
ஏங்கியபின் தன்னைச் சிந்தித்துப் பார்க்கும் படி செய்தார்கள்.

எனது உயிர் தோன்றியதிலிருந்து புல்லைத் தின்று தழைத் தாம்புகளைத் தின்று கனி வர்க்கங்களைத் தின்று இன்று சுவை மிக்க நிலைகள் படைத்துச் சாப்பிடும் இந்த உடலைக் கொடுத்தது இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்த அந்த ஈசனை வணங்கும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

அந்த ஞானிகள் காட்டிய காவியத்தைத் தனக்குள் பதிவு செய்வதற்கு படிப்பறிவு இல்லாத அக்காலங்களில் சிலைகளை உருவமாக்கிக் கதைகளாகச் சொல்லியுள்ளார்கள்.

இந்த உயிர் உன்னை மனிதனாக எவ்வாறு உருவாக்கியது? என்று எழுத்தறிவு இல்லாத காலங்களில் சிலையை உருவாக்கி அந்தச் சிலையின் ரூபமாகக் காவியமாக கதைகளாகச் சொல்லி மனிதனின் வாழ்க்கையில் பதிவு செய்தான்.

இதைத்தான் எமது குருநாதரும் என்னிடம் சொன்னார். எனக்குள் பதிவு செய்தார்.

இது ஏட்டில் இல்லை.
யாம் சொல்லும் இந்த நிலைகள் பாட்டிலும் இல்லை.
ஆக, உங்கள் கூட்டிலும் இல்லை.

அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகரவேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் அருள் உனர்வுகள் உங்கள் கூட்டிற்குள் பதியச் செய்யவேதான் இதை உபதேசிக்கின்றேன்.

நீங்கள் யார்? இந்தப் பிள்ளை யார்?
என்று கேள்விக் குறியின் நிலைகளில்
அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்யவே இதைச் செய்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் கூட்டிற்குள் வந்துவிட்டால் பின் ஏட்டிலே ஏறுவதற்கு உங்கள் சிந்தனைகளும் செயல்களும் இந்த அறிவின் ஞானம் பெற்ற நிலைகள் கல்வியின் ஞானம் பெற்றாலும் இதை
அனுபவத்தில் வரப்படும் போது எழுத்து வடிவிலும் கொண்டு வரலாம்.
பிறருக்குப் போதிக்கவும் செய்யலாம்.
பேருண்மைகளை உணர்த்தவும் செய்யலாம்.

February 9, 2016

சாஸ்திரம் என்பது மெய், சாஸ்திரப்படி நாம் வாழ்கின்றோமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்

விநாயகனைப் பார்க்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் அதுவே தனக்குள் விதியாக இருந்து ஒன்றி வாழும் நிலையாகத் தனக்குள் முழுமை பெறவேண்டும் என்ற இந்த உணர்வை அன்று சாஸ்திரங்களாக ஞானிகள் உருவாக்கினார்கள்.

சாதாரண மக்களும் இதைப் பெறும் நிலையாக திரும்பும் பக்கமெல்லாம் விநாயகனைக் காட்டி நமக்குள் அதைப் பதியச் செய்துள்ளார்கள். நாம் ஏற்றுக் கொண்டோமா?

விநாயகரோ, முருகனோ சரஸ்வதியோ, இலட்சுமியோ இராமனோ, கிருஷ்ணனோ அனைத்தும் சாஸ்திரத்தில் உண்மை.

ஈசன் என்று சொல்வது நமது உயிர்
ஈஸ்வரனாக இயக்குகின்றது. சாஸ்திரப்படி உண்மை.

நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மை கொண்டு
உயிருக்குள் வெப்பமாவது விஷ்ணு சாஸ்திரப்படி உண்மை.

வெப்பத்தின் இயக்கத்தால் ஈர்க்கும் காந்தங்களாக வரும் இந்த நிலை நமக்குள் இலட்சுமி - கவரும் சக்தி கொண்டு காந்தம், என்ற நிலைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

மனிதனாக உருவான பின் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி மற்றொன்றை இழுத்துத் தனக்குள் பதிவு செய்வது ருக்மணி சாஸ்திரப்படி பெயரை வைத்தான் ஞானி.

அந்தக் காந்தப்புலனால் கவர்ந்திடும் இந்த நிலையை சாஸ்திரப்படி சத்தியபாமா.

எவர் தவறு செய்தாலும் எப்பொருளைப் பார்த்தாலும் இந்த உணர்வின் அலைகளைத் தனக்குள் ஆன்மாவாக மாற்றி நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அலையாக நமக்குள் உண்மையைச் சொல்கிறது சத்தியபாமா.

உண்மையைத் தனதாகக் காட்டுகின்றது. தனக்குள்ளே உணர்த்துகின்றது என்று காராணப் பெயரை வைத்தானே

அதெல்லாம் கடவுள் அல்லவா...?

நமக்குள் கண்கள் - கண்ணனாக இருந்து இதனின் உணர்வைக் கண் கவர்ந்து நாம் சுவாசித்து உயிருடன் இயக்கப்படும் பொழுதுதான் கண்ணன் தான் சங்கநாதம் ஊதியபின் தான் குருக்ஷேத்திரப் போரே.

எதனின் நிலையை நாம் நுகர்கின்றோமோ நமக்குள் பதிவு செய்த நல்ல எண்ணங்களுக்கும் நல்லவை ஆகும் போது அந்த மகிழ்ச்சியின் நிலைகள் அதற்குள் மகிழ்ச்சியாகின்றது.

மாறுபட்ட நிலையாகி எதிர் நிலையாகும் போது போர் முறையே வருகின்றது. நமக்குள் மனக் கலக்கமும் வருகின்றது என்று காட்டினானே சாஸ்திரத்தில் அது பொய்யா?

இவர்கள் சொல்கிற மாதிரி கண்ணன் திருடன் என்றும் பல லீலைகள் ஆடுகின்றான் என்ற நிலைகள் கொண்டு இந்தச் சாஸ்திரங்களைத் தலைகீழாக மாற்றிச் சொல்வது
கண்ணன் எனக்குச் சொந்தமானவன் என்றும்
வட கிளை தென் கிளை என்ற நிலைகளும்
பார்த்தசாரதிக்கு நைவேத்தியம் செய்தேன், சாங்கியங்களைச் செய்தேன்.

அதனுடைய நிலைகள் இருப்பது அந்தக் கண்ணன் அந்தச் சாஸ்திரம் அது பொய்யா? அது மெய்யா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இயக்குகிறது என்றும் ஒவ்வொரு சரீரத்திலேயும் சேர்த்துக் கொண்ட நம்மை மீட்டிக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக (கணேசா) இருந்தது உயிர் என்று அவன் சாஸ்திரத்தை வகுத்தானே அது பொய்யா?

சூட்சமமாக மறைந்திருக்கும் சக்தியின் நிலைகள் உடலாக உறைந்தது சிவம் என்று சொன்னானே அது பொய்யா?

நாம் எண்ணும் எண்ணம் எதுவாக இருந்தாலும் விஷ்ணுவான உயிர் தனக்குள் கவர்ந்து கொண்ட காந்தம் இலட்சுமி கவர்ந்து அந்த உயிருடன் இயக்கப்பட்டு சுழலின் நிலைகளில் அந்த எண்ணத்தை ஜீவ அணுவாக உருவாக்குவதை விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று சொன்னானே அந்தச் சாஸ்திரம் பொய்யா?

அந்த உணர்வின் சக்தி ஜீவ அணுவாகி உயிருடன் ஒன்றி இயக்கி உடலாக சிவமாக மாற்றினானே, இது பொய்யா? நன்றாக இதைச் சிந்தித்துப் பாருங்கள்.

புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வகையிலும் நம் உடலிலுள்ள காந்தப்புலன் தன்னுடன் இணைத்து கண்ணுக்குள் இருந்த காந்தமும் அதனுடன் இணைந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்கி அந்த உணர்வின் சத்தாக நமக்குள் உணர்த்தி இயக்கியதே பார்த்தசாரதி என்றும்
தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை
கண்ணன் அர்ச்சுனனுக்கு உறுதுணையாக இருந்தான்
வித்தைகளைக் கற்றுக் கொடுத்தான்
என்று சாஸ்திரத்தைச் சொன்னானே அது பொய்யா?

வட கிளை தென் கிளை என்று பார்த்தசாரதி கோவிலில் நாங்கள் சொல்வதுதான் உண்மை நீங்கள் சொல்வதுதான் உண்மை யானைக்கு எப்படி நாமமிட வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போட்டார்கள்.

அந்தக் கடவுள் என்ன ஆனது?

இவர்கள் கடவுளுக்காக வேண்டி இவர் வாதாடுகின்றார்களே
கடவுள் இவர்களுக்கு உண்மையின் நிலையை உணர்த்துகின்றாரா?

அல்லது கடவுளுக்காக வேண்டடி வாதாடுகின்றார் என்றால்
கடவுளைக் காட்டிலும் இவர்கள் பெரியவர்களா?

நமக்குள் (உள்) நின்று
நாம் எண்ணிய உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது என்று
சாஸ்திரத்தைக் காட்டினானே அது பொய்யா?
சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதையெல்லாம் மதங்களாக்கப்பட்டு மதங்களின் அடிப்படையில் கொண்டு வாழ்க்கையை உயர்த்திட வேண்டும் என்று வாழ்ந்தாலும்
எத்தனை காலம் நீ வாழ்ந்திடப் போகின்றாய்?
அப்படி வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் இன்று இருக்கின்றார்கள்?

பிறரைப் பழித்தோ பிறரை அழித்தோ பிறரை இம்சித்தோ தனக்குச் செல்வத்தைச் சேர்த்தவர்கள் எத்தனை கோடிப் பேர் இருக்கின்றார்கள்? வாழ்கின்றார்கள்?

தெய்வத்தின் பெயரால் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவித்து மடாதிபதிகள் என்ற பெயரால் செய்து இன்று எத்தனை மடாதிபதிகள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்?

பல நிலைகள் தனக்குள் மதத்தின் அடிப்படையில் சுகங்களைத் தேடினாலும் மக்களுக்கு நீ என்ன சேவை செய்தாய்? உண்மையினுடைய நிலைகளை எதை நீ உணர்த்தினாய்?

ஆக சாஸ்திர விதிகளின் தன்மை கொண்டு தனக்கு மாறாக நடந்தால் அவனைக் கொன்று புசிக்கத்தான் மடாதிபதிகளால் முடிந்ததே தவிர அவனை வாழ வைக்கும் வழி இல்லை.

அரச காலங்களில் கொடுத்த அந்த நிலைகளைத் தனக்கென்று சாதகப்படுத்தி மக்களுக்கு இன்று உணர்த்த நிலைகள் கொண்டாலும் விஞ்ஞான அறிவு கொண்ட நிலைகளில் மடாதிபதிகள் மக்களுக்கு ஆக வேண்டி என்ன செய்தார்கள்?

இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோமா? உலகெங்கிலும் இந்த நிலைதான். நான் பெரிதா? நீ பெரிதா என்று ஆட்சி புரிவதில் சண்டை வரும்.

இன்று கோவில்களில் நான் பெரியவன் நீ பெரியவன் என்னுடைய ஆட்சிதான் இருக்கும் என்று அங்கேயும் தகராறு.

ஆலயங்களில் எவன் வலு பெற்றதோ அவனின் நிலைகள் கொண்டுதான் அர்ச்சனைகள் செய்வதோ அபிஷேகங்கள் செய்வதோ எல்லாமே. எல்லா ஆலயங்களிலும் இதே நிலை தான்.

ஆண்டவன் என்று யார் மதித்தோமோ அந்த ஆண்டவனைப் பழித்திடும் நிலையாக நம்முடைய செயல்கள் அமைந்து கொண்டிருக்கின்றது.

ஞானிகள் மக்களைக் காப்பதற்காகக் காட்டிய நிலைகளைத் தன் சுகபோகத்திற்காக மெய்ப் பொருளை அழித்துவிட்டு இன்று உலகெங்கிலும் தீமைகளை விளைவிக்கும் நிலைகளே உருவாகிவிட்டது.

மகான்களைப் போற்றித் துதித்தாலும் அந்த மகான்களுடைய நிலையைத் துளி அளவாவது நமக்குள் எடுத்து மனிதனைக் கடவுளாக உருவாக்கப்பட்டது அவனை மதிக்க வேண்டும் என்ற நிலைகள் வேருடன் புதைந்துவிட்டது. மறைந்துவிட்டது.

ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நம் உடலுக்குள் நம் காந்தம் கவர்ந்த உணர்வின் செயலாக நாம் அறிந்தாலும் அந்த அறிவின் ஞானம் அனைத்தும் மகா சரஸ்வதி என்று மனிதனின் அறிவிற்குள் ஞானம் வளர்ந்தது என்று சொன்னானே அது பொய்யா?

கவர்ந்து கொண்ட உணர்வனைத்தும் படைக்கும் திறன் பெற்றது பராசக்தி. மனிதனுக்குள் அனைத்தும் உணர்ந்து ஒவ்வொன்றும் உருவாகும் ஆற்றல்மிக்க இச்சக்தி நமக்குள் பராசக்தியாக வீற்றிருக்கிறது என்று சொன்னானே அது பொய்யா?

இவ்வாறு உருவாக்கும் நிலைகள் கொண்டு நம் ஆறாவது அறிவு மாற்றியமைக்கும் திறன் கொண்டதும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு உலகையே படைத்திடும் நிலையும் ஒவ்வொன்றயும் புதிதாகச் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது மனிதனின் அறிவு.

அத்தகையை மனிதனின் அறிவின் தன்மையை - நமக்குள் கடவுளாக இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இன்று எதைச் சிருஷ்டிக்கின்றோம்?

 சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்?

கொலை செய்யும் உணர்வுகளைச் சிருஷ்டிக்கின்றோம். மற்ற மதத்தை உருவாக்கி மற்ற மதத்தை அழித்திடும் உணர்வை மனிதனுக்கு மனிதன் போர் செய்யும் நிலைகளும் மனிதனுக்கு மனிதன்  அழித்திடும் நிலைகளைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம்

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு மனிதனை மனிதனாக மதித்து நடக்க வேண்டும். மனிதனின் வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த நிலைகளை மதிக்க வேண்டும்

இந்த உடலை விட்டு நாம் சென்றபின் நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்த ஞானிகள் இத்தனை சாஸ்திரங்களையும் உருவாக்கினார்கள். மக்கள் அனைவரும் அந்த எல்லையை அடைய வேண்டும் என்று தான் வழி காட்டியுள்ளார்கள்.

விநாயக தத்துவத்தில் காட்டியபடி நாம் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வைத் தனக்குள் விளைய வைக்க வேண்டும்

மகரிஷிகளின் அருள் உணர்வை விளைய வைத்தால் அதன்வழி நம் வாழ்க்கையில் வந்த எத்தகைய இருளையும் போக்கிட முடியும். மெய்ப் பொருளைக் காண முடியும் மெய் ஒளி பெற முடியும்.

ஆகவே, நாம் அனைவரும் ஞானிகள் காட்டிய சாஸ்திரத்தைக் கடைப்பிடிப்போம்.  

February 7, 2016

நமக்குள் புகும் உணர்வுகளையும் அது நம்மை இயக்குவதையும் ஞானிகள் கண்ட சாஸ்திர நிலைகளை “பௌதீக (PHYSICS)” வழிகளிலும் பார்க்கலாம்

உங்கள் விஞ்ஞான அறிவுப்படி நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் பௌதீக நிலைகளில் எடுத்துக் கொண்டாலும் உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

நமது வாழ்க்கையில் நம்மையறியாது புகுந்திருக்கும் நிலைகளிலும் நாம் தவறு செய்யாது நஞ்சு கொண்ட உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலைகளிலும்
பிறர் செய்யும் தவறுகளையோ,
பிறர் படும் தீமைகளிலிருந்தோ
பிறர் படும் வேதனைகளையும்
உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டால்
அதனதன் உடல்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள்
இங்கே வரத்தான் செய்யும்,
நம் முன் நிற்கத்தான் செய்யும்
சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் இயக்கி உணர்த்தத்தான் செய்யும்.
அது நமக்குள் தீமையின் விளைவாக விளையத்தான் செய்யும்.

இத்தகையை தீமையான விளைவுகளை மாற்றியமைக்க தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி அதனுடன் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் நீக்குகின்றோமோ இதைப் போன்று நாம் நீக்குதல் வேண்டும்.

அதை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

மகரிஷிகள் இத்தகைய தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.

ஆனால், அவர்கள் பிறவிக் கடனை அற்று விண் சென்றவர்கள்.

அவர்களுடைய உணர்வின் அருகிலே நாம் அணுகினாலும் நம் எண்ணத்தைச் சுட்டுப் பொசுக்கி விடும்.

அதைக் கவரும் உணர்வாக நமக்குள் ஒருக்கிணைந்த உணர்வினைச் சேர்த்து
நாம் அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு
அவர்களின் எண்ணமுடன்
ஒத்த நிலைகள் கொண்டு வலுப்பெற்று
அதை நாம் நுகரும் தன்மை கொண்டு நாம் ஈர்த்தால் அதை நம் உணர்வின் நிலைகள் கலந்து சிறிதளவே நமக்குள் வரும்.

நமக்குள் சிறிதளவே வந்தாலும்
நமக்குள் இருக்கும் தீமையினுடைய நிலைகளில்
அதற்குள் இது கலக்கும்

தீமைகளை அகற்றிடும் உணர்வாக நமக்குள் கலந்து நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் கலந்து பதிவாகிவிடுகின்றது இந்த எண்ணம்.

அந்த நிலையைச் செய்யப்படுவதற்கே இப்பொழுது யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள். அந்த ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிப்படி நாம் நடந்தால் அவர்கள் அடைந்த எல்லையை அடையலாம்.