ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 8, 2015

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி - எந்தச் சக்தியை நாம் இச்சைப்பட வேண்டும்...?

பல கோடி சரீரங்களில் நாம் தீமைகளை வென்று வென்று, 
தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று,
தீமை என்று தெரிந்துகொண்டு
தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்ற ஆறாவது அறிவைத்தான்
வலிமைமிக்க சக்தி “வள்ளி”
என்று காரணப்பெயர் வைக்கிறார்கள்.

ஒரு வலிமையான ஒருவன் குற்றம் செய்கிறான் என்றால் அதன் உணர்வின் தன்மை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு சாந்த குணத்தை மாற்றி, அதன் உணர்ச்சிகள் நம்மை இயக்கத் தொடங்கிவிடும்.

அது இச்சாசக்தி, கிரியாசக்தி என இதன் உணர்வுகள் அறிந்து கொள்ளப்படும்.

என்ன பேசினான்? என்று அந்த உணர்வின் தன்மை அறிய முற்பட்டால் அவன் செய்த குற்றச் செயல்கள் அனைத்தும் நம் உயிரிலே பட்டு அது தெய்வ ஆணையாக உணர்ச்சிகள் தூண்டும். இந்த உணர்ச்சிகள் கலந்து விடுகின்றது.

இது நமது உமிழ் நீருடன் கலக்கபப்டும் பொழுது நுகர்ந்த உணர்வுகள் நம் ஆகாரத்தைப் பாழாக்கும். சுவை கொண்ட உணர்வைச் செயலாக்கும் அதுதான் இங்கே வள்ளி (வல்லி) வலிமை மிக்க விஷத்தின் தன்மை அது இதைக் காட்டிலும் வலிமை பெற்றது.

இதைப் போன்ற வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது நாம் நுகர்ந்தால் தெய்வ ஆணை. அந்த வேதனைப்படும் உணர்ச்சிகள் ஊட்டி அது தெய்வமாகி, அந்த சொல்லும் செயலும் நம் உடலை வருத்தும். இதை ஞானிகள் தெளிவாகக் கூறுகின்றனர்.

ஞானிகள் காட்டியது, துவைதம் என்ற நிலைகளில் உருவம் அமைத்து அருவ நிலைகளில் நம்மை எப்படி இயக்குகின்றது? அதை நாம் மாற்றி அமைப்பதற்கு அதைக் கொடுத்து அதனின் உணர்வை நுகர்ந்து நமக்குள் வரும் தீமைகளை அகற்ற உதாரணத்தைக் கண்டனர் ஞானிகள்.

அதை யாரும் நாம் பயன்படுத்துவதில்லை.

ஆகவேதான், நாம் வலிமைமிக்க சக்தி வள்ளி என்ற நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெறவேண்டும் என்று நாம் இச்சைப்பட்டால், அதன் உணர்வுகள் நமக்குள் கிரியைகிவிடுகின்றது.

அதன் உணர்ச்சிகள் நமக்குள் தீமையை அகற்றிடும் வலிமையையும் சிந்தித்து செயல்படும் தன்மையையும் ஊட்டி, தெய்வ ஆணையாக சிந்திப்பவனாகவும் செயலைச் சரியாகச் செய்பவனாகவும் நம்மை ஆக்கும்.

அதை நுகரப்படும்பொழுது சீராக அமையும் உடலாக அமைய இது உதவும். ஆகவேதான் இதை ஞானியர்கள் இச்சாசக்தி கிரியா சக்தி என்று உணர்த்தினார்கள்.

இப்பொழுது, நம்மை இப்படியே பேசுகிறான் என்று ஒரு தடவை அதன் நிலை கொள்ளும் பொழுது, அவன் இப்படிச் செய்தான் ஆகவே, அவனுக்கு நாம் எப்படித் துன்பத்தைச் செய்ய வேண்டும்? என்று இச்சைப்பட்டால் என்ன ஆகும்?

அவன் எப்படி நமக்குத் துன்பம் செய்தானோ. அந்த உணர்வை நமக்குள் எடுத்து அது நமக்குள் கிரியையாகி, ஞானமாக அந்த உணர்வின் தெய்வமாக, நம்மைத் தீமை செய்பவனாக தீமை செய்யும் செயலைச் செய்பவனாக இது மாற்றிவிடுகின்றது.

இப்படி மாற்றும் நிலைகளிலிருந்து நாம் எப்படி மீள்வது?

பலகோடி சரீரங்களில் இருந்து விஷத்தை வெல்லக்கூடிய சக்தி பெற்று, விஷம் என்று அறிந்து விஷத்தை மாற்றி. தனக்குள் சுவைமிக்க உணர்வை உருவாக்கும் தன்மை கொண்டது நமது இந்த ஆறாவது அறிவு.

அதன் வழி கொண்டு நாம் தீமைகளை நீக்கவேண்டும் என்று இச்சைப்பட்டால்
இந்த உணர்வின் தன்மை கிரியையாகி,
அதன் ஞானத்தின் வழி கிரியையாகி,
இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகின்றது.

ஆகவே நாம் எதன் வலிமையைப் பெற்றோமோ,
அதுவே தெய்வமாகி
அதன் ஆணைப்படிதான் உடலை இயக்குவதும் நம் உடலில் நோய்கள் வருவதும் இதைபோன்ற பல நிலைகள் வருகின்றது என்று நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.