ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பின் தன்மையை நாம் அதிகமாக வளர்த்து விட்டால் அது நம் உடலுக்குள் வந்து எத்தனையோ கெடுதலான வேலைகளைச் செய்யும்.
அதை எல்லாம் முழுவதுமாக நான் (ஞானகுரு) உணர்வதற்காக வேண்டி மூன்று இலட்சம் பேருடைய (அந்தக் குடும்பங்கள்) உணர்வுகளை ஏககாலத்தில் ஒவ்வொன்றாகப் படிப்படியாகக் குருநாதர் காண்பித்தார்.
அவர்களையும்... அந்தக் குடும்பத்தின் உணர்வுகளை எல்லாம் நுகர்ந்தபின் அங்கிருக்கும் கெட்டது எல்லாம் உன்னை என்ன செய்கின்றது... உன் உடலில் என்ன செய்கிறது என்று பார்...! என்று சொன்னார் குருநாதர்.
அந்தக் குடும்பங்களில் நடந்ததை எல்லாம் நீ ஜோதிடம் பார்ப்பது போல் பார்த்து விடாதே... ஆனால் நீ தெரிந்து கொள்கின்றாய்.
யாராவது வந்து கேட்டால்... உன்னிடம் கஷ்டத்தைச் சொன்னால் நீ கேட்பாய். கேட்ட பின்...
1.ஐயா...! நீங்கள் இன்ன மாதிரியான காரணத்தினால் கஷ்டப்படுகிறீர்கள்
2.உங்கள் வீட்டில் உள்ள சண்டையெல்லாம் போய்விடும் என்று கண்டறிந்து நீ சொன்னால்
3.கடவுளே நீ தான்...! என்று உன்னைப் போற்றுவார்கள்
4.ஆனால் அவன் கஷ்டம் எல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை...!” என்று சொல்லி விட்டார்.
காரணம் எல்லாவற்றையும் நீ தெளிவாகத் தெரிந்து கொள்கின்றாய் தெரிந்து கொண்ட பின் “உனக்குக் கஷ்டம் இப்படி இருக்கின்றது... தொழில் நஷ்டமாகி விட்டது...!” என்று நீ அவரிடம் சொல்வாய்.
அந்தக் கஷ்டத்தை எல்லாம் நீ வாங்கிய பின் தான் “நல்லதாகும்” என்று நீ சொல்ல முடியும். ஆக... கஷ்டத்தை நுகர்ந்து அவர்களுக்கு மீண்டும் கஷ்டத்தை தான் கொடுக்க முடியுமே தவிர நல்லதைக் கொடுக்க முடியாது.
ஆனால் உன்னைக் கடவுளாக அவன் போற்றுவான். இவரிடம் போனேன்... என் குடும்பத்தைப் பற்றி எல்லாமே சொன்னார்... இவர் கடவுள்...! என்பான்.
1.ஆனால் அவருடைய நோய் எல்லாம் உன்னிடம் வந்து வடும்
2.அவனுடைய இந்த கஷ்டமெல்லாம் உன்னிடம் வந்துவிடும் “ஜாக்கிரதை...!” என்று சொல்லிவிட்டார் குருநாதர்.
அதையும் சொல்வார்... இதையும் சொல்வார்... நான் தெரிந்து கொள்ளவும் செய்வேன் (ஞானகுரு).
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.அவர்களுடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் உனக்குள் வராதபடி நீ நிறுத்த வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவாத்மாவிலே அந்த அருள் சக்திகள் பெற வேண்டும் என்று இதை முதலில் நீ எடுக்க வேண்டும்.
எடுத்துக் கொண்ட பின் அவரிடம் என்ன சொல்ல வேண்டும்...?
மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்... உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கும்...! என்று வாக்கினைப் பதிவு செய்து அந்தக் கஷ்டத்தை நிறுத்த “அவரைப் பழக்கச் செய்ய வேண்டும்...”
கஷ்டம்…! என்று அவர் சொன்னால் ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று கேட்டு அதை இழுத்துக் கொள்கிறோம்.
அவருக்குள் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொண்ட பின் “உனக்கு நல்லதாகும்…” என்று நியாயத்தைச் சொல்வாய். ஆனால் அவர்கள் கஷ்டம் எல்லாம் இங்கே வந்துவிடும்.
ரொம்பப் பேர் என்ன செய்வார்கள்…?
1.இரக்க மனமாகப் போய் எல்லோருக்கும் நியாயத்தைச் சொல்வார்கள்
2.ஆனால் தனக்குள் பிறருடைய அந்தக் கஷ்டமான உணர்வுகள் தனக்குள் உட்புகுவதை நிறுத்தத் தெரியாமல் இருப்பார்கள்.
அதை நிறுத்த வேண்டும் என்பது தான் சதுர்த்தி…!
ஏகக்காலத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஒருவருக்கொருவர் இருக்கும் பகைமை நீங்க வேண்டும் என்று எண்ணிய பின் இந்த அலைகள் போனபின் என்ன செய்கிறது…?
1.மனிதனான நானும் எனக்குள் அந்தப் பிடிப்பை அறுத்து விடுகிறேன்.
2.என் மீது பகைமை கொண்டிருப்பவர்களும் என் மீது வெறுப்பில்லாதபடி அதை அறுத்து விடுகின்றார்கள்.
அப்போது அந்தத் தீமை செய்யும் அலைகள் அனாதையாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் முதலிலே ஒருவருக்கொருவர் சண்டை போட்டதெல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது. இருந்தாலும்
1.நாம் இப்போது எண்ணும் இந்த வலுவான உணர்வுகள் என்ன செய்கிறது…?
2.அதைத் துரத்திக் கொண்டு போகிறது.
துரத்திக் கொண்டு சென்றாலும் செடிகள் மரங்கள் இருக்கும் பக்கம் அவைகள் போகாது. நேராகக் கடல் பக்கம் தான் போகும்.
ஏனென்றால் கடல் பக்கம் யாரும் அதிகம் (நடமாட்டம்) போவதில்லை. அங்கே அலைகள் தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கும்.
1.கடல் அலைகள் மாறி மாறி வரும் பொழுது
2.நாம் ஈர்க்க மறுத்த தீய வினைகளை எல்லாம் இழுத்து இழுத்து உள்ளே கொண்டு போய் அமிழ்த்திவிடும்
3.அந்த உப்பு நீர் (ஹைட்ரஜன்) அவைகளைக் கரைத்துவிடும்.
இது எல்லாம் அக்கால மெய் ஞானிகள் கண்டுணர்ந்து நமக்கு வழி காட்டிய பேருண்மைகள். ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் நடக்க வேண்டும்.