கடல் நீர் உப்பாக உள்ளது. காரணம் அதில் உள்ள ஹைட்ரஜன். கடலில் சூரிய வெப்பம் பட்டபின் நீர் ஆவியாகப் போகின்றது. ஆவியாகச் செல்லும் பொழுது அதில் உள்ள ஹைட்ரஜன்... உப்பு தனியாகப் பிரிந்து விடுகிறது.
ஆவி மேகங்களாக மாறுகிறது. அதிலே உப்புச் சத்து (ஹைட்ரஜன்) மறுபடியும் பட்டபின் நந்நீராக மழையாகப் பொழிகின்றது.
1.முதலில் ஆவியாக மாறும் போது உப்பைப் பிரிக்கின்றது.
2.இருந்தாலும் மழையாகக் கொட்டும் பொழுது கணம் தாங்காதபடி
3.உப்புசத்திற்கு மூல காரணமான ஹைட்ரஜன் இதற்குள் சேர்கிறது.
ஹைட்ரஜன் ஆக மாறும் போது அதற்குள் இருக்கும் தீமைகளை முறித்துவிட்டு நல்ல தண்ணீராக மழையாகப் பெய்கின்றது.
1.அந்த ஹைட்ரஜன் கலந்து வரப்படும் போது செடி கொடிகள் எல்லாம் ஜோராக இருக்கும்.
2.மழை பெய்யும் போது பார்த்தோமென்றால் செடி கொடி தாவரங்கள் எல்லாம் அப்படியே ஒடுங்கும்.
3.மழையினால் தள...தள... என்று செழித்து வளர்வதையும் காணலாம்.
மனிதர்களான நமக்கும் மழை பெய்யும் அந்த நேரம் உஹ்குகு..உஹ்குகுகு... என்று அந்தக் குளிரின் நடுக்கம் நம் உடலில் வருவதைப் பார்க்கலாம். அது இனிமையாக இருப்பதையும் பார்க்கலாம்.
நம்மை அறியாமலே அந்த உணர்வு என்ன செய்கிறது...? என்று அனுபவத்தில் நீங்களே தெரிந்து கொள்ளலாம். குருநாதர் எனக்குக் கொடுத்தார். அதையேதான் உங்களுக்கும் சொல்கிறேன்.
உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் என்ற சொல் வரும் பொழுது யாம் (ஞானகுரு) சொன்ன மெய் ஞானிகள் அருள் உணர்வுகளை நினைவுபடுத்தி எடுத்தால் கஷ்டங்களிலிருந்து விடுபடலாம்.
ஒவ்வொரு நொடியிலும் சந்தர்ப்பங்களால் நாம் சந்தித்த உணர்வுகள் நம்மை என்ன செய்கின்றது...? என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்
அன்றாட வாழ்க்கையில் நம் உடலில் சேர்த்துக் கொண்ட அந்தந்தக் குணங்கள் வினைக்கு நாயகனாக நோயாகவும் வெறுப்பாகவும் இருக்கின்றது.
1.அதை எல்லாம் நமக்குள் வளராதபடி தடுப்பதற்குத் தான் “விநாயகர் சதுர்த்தி...” அதாவது நிறுத்த வேண்டும்.
2.தீய உணர்வுகளைக் கடலில் கொண்டு போய்க் கரைக்க வேண்டும்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணர்வுகளை எடுத்திருந்தாலும் ஏகோபித்த நிலைகளில் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு தீமைகளைக் கரைக்க முடியும்.
நாம் ஈர்க்க மறுத்த அந்தக் கெட்டதை எல்லாம் கடல் நீர் இழுத்துக் கொள்கிறது. விநாயகர் சதுர்த்தியன்று அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.கடலில் கரைக்கும்படியான இத்தகைய சாஸ்திரங்கள் நமது மெய் ஞானிகள் கொடுத்தது.
2.யார் மீது எந்தப் பகைமை இருந்தாலும் அதை எல்லாம் நம் உடலை விட்டு நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்...
3.அவர்கள் மீது பகைமையே வரக்கூடாது.
மற்றவர்கள் யாருக்கும் நாம் எண்ண முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் கூட்டாக இருக்கும் நம்மைச் சார்ந்தவர்களிடமாவது பகைமை இல்லாது நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதனைப் பழகிக் கொண்டால் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும். அடுத்து பகைமை வந்தாலும் அதை எதிர்த்து நமக்குள் புகாதபடி பாதுகாத்துக் கொள்ளும் உயர்ந்த சக்தியாக வளரும். நமக்குள் நல்ல குணங்கள் ஓங்கி வளரும். நம் உணர்வுகள் எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறும்.