சில நேரங்களில் மனித உணர்வின் எண்ணம் செயல் கொள்ளும் காலங்களிலேயே “உள் மனம்… வெளி மனம்…” என்ற இரண்டு நிலை கொண்ட எண்ண ஓட்டங்கள் உருவாவதை அறிகின்றோம்.
1.ஆத்ம இயக்கத்தின் சரீர உந்தலில் சரீரம் சமைக்கும் எண்ண உணர்வு
2.ஆத்மாவின் பதிவு - சரீர மோதலின் எண்ண உணர்வு என்ற
3.இந்த இரண்டு வகையான போராட்டக் காலங்களில் தான்
4.மனிதன் சொல்லும் உள் மனம் வெளி மனம் என்ற இரண்டு நிலை கொண்ட எண்ணங்களே ஓடுகிறது.
சில ஆத்மாக்களுக்குச் சபல நிலையின் இரண்டு குண மோதலில்… வாழ்க்கை நிலை நடைபெறும் நிலையும் நிகழ்கின்றன.
1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து போன்றது
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.
நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் சக்தி வாய்ந்தது. ஆத்ம உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்... அதைக் காக்கும்...!
வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும்…. அல்லது வலிமை இருக்காது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்று அறிந்து கொண்ட நிலையில்.. மேல் நோக்கிய சுவாசமாக எடுக்கும் ஞானியரின் உணர்வுகளை ஆழமாக நமக்குள் பதிவாக்கிடல் வேண்டும். அதை வலுக் கொண்ட பதிவாக நம் ஆத்மாவில் ஏற்றிடல் வேண்டும்.
1.ஆத்மாவின் அத்தகைய வலுவைக் கொண்டு சரீரத்தை மட்டுமல்ல…!
2.சகல சித்துக்களையும்… சகல நிலைகளையுமே… அந்த ஆத்ம வளர்ச்சியினால் மட்டும் தான் வலுப்படுத்திட முடியும்.