ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2021

தேவர்கள் அசுரர்கள்… நெகடிவ் பாசிடிவ்… நேர்நிலை எதிர்நிலை…

 

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் எழுத்தறிவில்லாத அந்தக் காலத்தில் அகஸ்தியனின் உணர்வினை வியாசகர் கண்டுணர்ந்து வெளிப்படுத்தினார்.

அதாவது
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற் கடலிலே கடைந்து
3.கடைந்தவற்றில் வந்ததை விழுங்கியது அனைத்தையும் தேவர்கள் என்றும்
4.விழுங்கிய பின் மலமாகக் கழித்ததை எல்லாம் அசுரர்கள் என்றும் காட்டினார்.

மனிதர்களாக இருக்கும் நாம் ஒரு பொருளை உணவாக எடுத்து உட்கொண்ட பின் அதில் உள்ள சத்துகள் நம் உடலாக உருப்பெறும் சக்தியாகிறது.

உடலாக உருவானபின் கழிவின் சத்தை மலமாக வெளிப்படும்போது அது நஞ்சின் தன்மை கொண்டதாக வெளி வருகிறது. அந்த நஞ்சின் தன்மையை விழுங்கிய அனைத்தும் மற்றதை அழித்திடும் நிலையாக வருகின்றது.

மனிதனாக இருக்கும் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சினை அகற்றிய பின் அது வெளியே சென்றாலும் அது இன்னொரு தீமையின் நிலையாக வளர்ந்து அதனின் நிலைகள் வளர்ச்சியாகின்றது.

இதைத் தான்
1.தேவர்கள் அசுரர்கள் என்றும்... நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-) என்றும் சொல்வது
2.எந்த ஒரு இயக்கத்தின் தன்மையானாலும் அது எதிர்நிலை மறைகள் இருந்தால்தான் இயங்கும். (இல்லை என்றால் சூனியமாகிவிடும்)

அதைப் போலத்தான் மனித உடலுக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை எதிர்நிலை ஆனால்தான் நம் உடலின் அணுக்களின் தன்மை இயங்கும்.

ஆனால் அதே சமயம் எதிர்நிலையான உணர்வின் தன்மை அதிகரித்து விட்டால் நல்ல உணர்வின் தன்மைகள் இங்கே ஒடுங்கி விடுகின்றது.

ஆக நல்ல உணர்வுக்குள் எதிர்நிலைகள் ஓங்கி வளர்ந்தால் அந்தத் தீமையின் நிலைகள் நல்லதை ஒடுக்கி விடுகின்றது.

உதாரணமாக...
1.மிகவும் ஒரு காரமான பொருளை நாம் வாயிலே போட்டால் நம் உமிழ் நீர்கள் அனைத்தும் காணாமல் போய் விடுகின்றது.
2.ஆனால் மற்ற பொருளுடன் இந்தக் காரத்தை இணைத்து உட்கொண்டால் உமிழ் நீரை அதிகமாகச் சுரக்கச் செய்து
3.சாப்பிடும் உணவைத் தாராளமாக இழுத்துச் சென்று சுவைமிக்கதாக மாற்றுகின்றது.
4.ஆக... தீமையின் நிலைகளுக்குள் நல்லவைகள் அதிகரித்து விட்டால் தீமைகள் ஒடுங்குகின்றது.

ஆனால் தீமையின் தன்மை சிறிதாக இருப்பினும் நல்லவைகள் பலவாக இருந்தாலும் இது ஒரு நொடியில் அமுக்கிவிடும்.

அது போல் தீமைகளை ஒடுக்கிய
1.அருள் ஞானியின் உணர்வுகள் மிக மிக சக்தி வாய்ந்த அணுக்களாக இங்கே உண்டு
2.அதனை நாம் பருகும் நிலைகள் கொண்டு வந்தால் எத்தகைய தீமையாக இருந்தாலும் அதனைச் செயலிழக்கச் செய்துவிடும்.

ஆகவே நம் வாழ்க்கையில் வரும் எந்தத் தீமையாக இருந்தாலும் அந்த அருள் ஞானிகளின் அருள் சக்தி கொண்டு அதை விழுங்கிடல் வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் பழக்கம் வர வேண்டும்.