ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 7, 2021

“மனிதனுடைய எண்ண வலு” தன்னையும் வாழ வைத்து... பிறரையும் வாழ வைக்கும் சக்தியாக வர வேண்டும்

 

ஒருவனைத் தொலைந்து போக வேண்டும் என்று சொன்னால் போதும். அதை அவர் கூர்ந்து கவனித்தால் ஊழ்வினை என்ற வித்தாக அவருக்குள் பதிவாகி விடுகின்றது.

என்னை இப்படிச் சொன்னான் என்ற நிலையில்...
1.அவனைப் பார்... நான் என்ன செய்கிறேன்...? என்று என்ற உணர்வுகள் அங்கே விளைந்து
2.அவன் நல்ல செயல்களை எல்லாம் ஒடுக்கிவிட்டு இவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளே வந்துவிடும்.

அவருடைய உடலுக்குள் இருக்கும் நல்ல உணர்வையும் வளர்ப்பது இல்லை. இவன் சொன்ன நிலையை வேதனையாக எண்ணி
1.இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற உணர்வை அங்கே ஊட்டி
2.அவனுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை எல்லாம் இரண்டில் ஒன்று பார்த்துவிடும்.

ஒருவன் “தீங்கே விளைவிக்கின்றான்...” என்றால் இந்த மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த எண்ணம் அங்கே நுழைந்து விடுகின்றது.

பின்... இவன் உடலிலே விளைந்தது திருப்பி அங்கிருந்து வந்தவுடனே...
1.அவ்வளவு திமிரா...? இரு நான் பார்க்கின்றேன்... என்ற இந்தத் தீய உணர்வலைகளை விளைய வைத்து
2.இந்த உணர்வின் நிலைகள் உடலுக்குள் ஜீவான்மாவாக மாறுகின்றது.
3.சொல்லாக அது வரப்படும் பொழுது பரமாத்மாவாக மாறுகின்றது.

பரம் என்பது பூமி. சூரியனின் காந்த சக்தி சொன்ன உணர்வலைகளைக் கவர்ந்து இப்படிப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

பரமாத்மாவாக மாற்றிய நிலையில் இது சிறுகச் சிறுக விளைந்து மழை பெய்யும் மேகத்திற்குள் கொண்டு சென்ற உடனே நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தையும் அழிக்கின்றது.

தொலைந்து போகும் மழை இந்த நேரத்தில் தானா வர வேண்டும் என்று மழையைச் சொல்கின்றோம். இதைச் சாதாரணமாக வேடிக்கையாகச் சொல்லலாம். ஆனால் மழை பெய்வதைத் தடுக்கும் சக்தியாக அது மாறுகிறது.

ஏனென்றால் மனிதன் என்பவன் முழு முதற்கடவுள் என்று அதற்குத் தான் விநாயகனைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.

1.யானையின் தலையைப் பொருத்தி மனித உடலைப் போட்டு
2.நாம் புழுவிலிருந்து மிருகமாகி மிருகத்திலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வின் எண்ண வலுவாகி
3.அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு மனித உருவை உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
4.எண்ண வலு கொண்டு எதையும் சாதிக்கும் அவ்வளவு வல்லமை பெற்ற இந்த நிலையை
5.அதனின் வலு துணை கொண்டு மனிதனைக் காட்டிலும் மிக சக்தி வாய்ந்த உணர்வை ஈர்த்து
6.நம் உடலுக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் மனித உடல் பெற்ற நிலையில் நம் ஆறாவது அறிவிற்கு உண்டு.

அதனின் துணை கொண்டு மெய் ஞானிகள் இந்த வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் அதை இணைப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை நீக்கும் நிலை வருகின்றது.

நஞ்சின நீக்கும் உணர்வின் ஆற்றலாக நாம் வெளிப்படுத்துவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஜீவாத்மாவாக விளைந்து அதனின் உணர்வு பெருக அந்த ஆற்றலின் வலிமை கொண்டு
1.நாம் எதைப் பரமாத்மாவில் கலக்கச் செய்தோமோ
2.அதிலே பெருகுவதை எடுத்துத் தனது ஆத்மாவாக மாற்றுகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்து நம் உடலுக்குள் விளைந்து உயிராத்மாவில் விளைந்து ஒளியாக மாறுகிறது. நாம் ஒளி உடல் பெறுகின்றோம்.