ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2021

சக்தியைப் பெண்ணாகக் காட்டியதன் உண்மைப் பொருள் என்ன..? - ஈஸ்வரபட்டர்

 

சப்தரிஷிகளாலும் சித்தர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்பட்ட உயர் சக்தியின் நிலைகள் எல்லாம் ஊன்றிப் பார்த்தால்
1.ஒவ்வொரு சப்தரிஷியும் தன் சக்தியால் வணங்கப்படும் தெய்வங்கள்
2.பெண்மை உருவங்களாகத் தான் இருக்கும்.

ஆகவே பராசக்தியையும் ஆதி சக்தியையும் பெண்மையின் சக்தியாக வணங்கும் நிலை என்ன…?

ஒவ்வொரு சப்தரிஷியின் உயர்ந்த சக்திக்கும் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அவர்களின் ஆரம்பகால தாம்பத்ய வாழ்க்கையின் உணர்வின் எண்ண மோதலின் ஒன்றுபட்ட உயர் சக்தியின் வழித் தொடர் பெண்மையின் சக்தி கொண்டு தான் ஆண் வலுப் பெற்று ரிஷியாக சப்தரிஷியாக உயர்ந்தான்.

1.ஜீவனற்ற… ஜீவனை வளர்க்கும் சக்தியற்ற நிலை…
2.அமில குண ஆண்மைக்கு வலுத் தந்த சக்தியே
3.இத் தாம்பத்ய எண்ண வலு பெண்மையின் ஜீவ வளர்ச்சி வாழ்க்கையின் கூட்டினால் தான்…!

இக்கலியிலும் ஆதாம் ஏவாள் என்று உணர்த்திய மனித இன வளர்ச்சியின் செயல் முறையும் இதன் உண்மை கொண்டு தான்.

அமிலமான சிவ உருவம் கொண்டு திருவள்ளுவருக்கு வாசுகி அம்மையாரின் உயர் ஞான ஈர்ப்புக் கரு அமில செயல் சக்தி கூடித் தான்
1.அவர் (வாசுகி) வளர்த்த ஞானக் கருவை இவர் உருவில் வெளிப்படுத்தி
2.இன்றளவும் வள்ளுவனையும் வாசுகியையும் போல் என்று
3.பெரியோர்களின் வாழ்த்தாக அமையப் பெற்ற வாழ்த்தின் சொல்லின் உண்மை இதுவே…!

பெண்மையின் கரு வளர்ச்சியினால் உயர் இன வளர்ச்சியின் வித்தை உருவாக்க முடிகின்றது. ஒரு சித்தர் தன் பாடலில் “பூவையரை அன்னையெனப் புகழ்ந்தாய் போற்றி…!” என்றும் உணர்த்தியுள்ளார்.

அதன் உட்பொருள் என்ன…? படைப்பின் படைப்பே
1.பூவையரை அன்னையாகக்கூடிய செயலுக்கு
2.இந்த மனிதக் கரு இன வளர்ச்சியைப் பெருக வைத்து
3.உயர் சக்தியை வளர்க்க செயலாக்க வழி தந்த படைப்பிற்கே
4.பூவையரை அன்னையாகும் வளர்ச்சியைத் தந்ததற்காகப் போற்றி வணங்கினார்.

அதே போல் மகாத்மா காந்திக்கு வலுத் தந்ததே அவரின் மனையாளான கஸ்தூரிபா காந்தியின் பக்தி மார்க்க வழி முறை தான்.

பூவையரின் சுவாச அலையே “கரு வளர்ச்சி” அலை. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஈர்ப்பலைக்கு வீரிய சக்தி உண்டு. ஆனால்
1.சிவனான அமிலமுடன் மோதுண்டு வெளிப்படும் சக்தியில் தான்
2.அச்சக்திக்கே சக்தி கிடைக்கின்றது.

மனித இன வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வு நிலைக்கொப்ப ஒன்றுடன் ஒன்று இந்த எண்ணத்தின் செயல் இணையும் பொழுது தான் படைப்பு முழுமையாகின்றது.

பாவாகவும் ஊடையாகவும் நூற்பு நெய்யப்படும் துணியைப் போல் இரண்டு நிலைக்குள்ள எண்ணங்கள் ஒன்றாக இணைந்து மோதுண்டு இந்தத் தாம்பத்ய எண்ண உணர்வில் அமில பிம்ப சிவ ஊடைக்கு சக்தி ஈர்ப்புப் பாவாய் இந்தத் தாம்பத்ய நிலை அமைந்து
1.பெண்மையின் உயர் வழியைச் செயல் கொள்ளும் ஆண்மையின் நிலையில் தான்
2.இந்தப் பூமியின் உயர் ஞானங்களும் சித்து நிலைகளும் சப்தரிஷியின் நிலையும் உருவானதே…!