ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2021

இயற்கையின் சக்தி எப்படிப்பட்டது...? ஞானிகள் அதைப் பயன்படுத்திய விதம் எப்படி...?

 

இரண்யன் தனக்கு எதிலேயும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்றுதான் வரம் கேட்டான்.
1.ஆகையினால் அவனைக் கொல்லவில்லை.
2.ஆனால் தீமைகளையும் பகைமைகளையும் உள்ளே போகாதபடி தள்ளி விடுகின்றது... (நரசிம்மா) தீமைகளை வளர்க்கவில்லை.

நன்றாக இதைக் கவனித்துப் பாருங்கள். காவியத்தை ஞானிகள் எப்படிப் படைத்துள்ளார்கள்...? தெளிவாக நமக்கு எப்படிக் காட்டி இருக்கிறார்கள்...? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு அவனைக் கொன்றானா... இல்லை...! மடி மீது வைத்து இங்கே உள்ளே வராதபடி தடுத்து விட்டான். “இரண்யனைப் பிளந்தான்...” என்றால் தனக்குள் இருக்கக்கூடிய பல விதமான தீமை செய்யும் உணர்வுகளை விலக்கித் தள்ளி விடுகின்றது.

1.அருள் உணர்வுகள் எதை நாம் அரவணைத்தோமோ அதை உயிருடன் சேர்த்துக் கொள்கிறது.
2.அந்த அறிவின் தன்மை நமக்குள் பெருகுகின்றது.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நாம் வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமைகளைச் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடுகிறது

ஏனென்றால் நம் கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது பகைமை உணர்வுகளை எல்லாம் அகற்றி விடுகின்றது.

வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிக்கும் நாங்கள் எல்லோரும் பெற வேண்டும். எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணும் பொழுது அந்தப் பகைமைகளையும் அசுர குணங்களையும் தள்ளிவிட்டு விடுகின்றது. நாம் யாரும் அதை ஈர்க்கவில்லை என்கிற போது சூரியன் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கவர்ந்து மேலே இழுத்துச் சென்று விடுகின்றது.

அது இறப்பதில்லை... அதனால் தான் எனக்கு எதிலுமே இறப்பில்லை என்று இரண்யன் கேட்டான் என்று சொல்வது. ஆக... வெளியிலே வந்தபின் நாராயணன் (சூரியன்) அவனைக் கவர்ந்து கொள்கின்றான்.

காரணம் அவன் கொடுத்த வரம் தானே அது.
1.இந்த விஷம் இல்லையென்றால் அந்த்ச் சூரியனே இயங்காது.
2.ஒவ்வொரு அணுவிலும் இந்த விஷம் இல்லை என்றால் அதனின் உணர்ச்சிகள் இயங்காது... எந்தக் குணமும் அது இயங்காது.

எல்லாவற்றையும் இயக்குவதற்கு நானே தான் மூலம்... அதே சமயத்தில் அதை அடக்குவதற்கும் நானே தான் மூலம்... “என்னால்தான்...” என்று இரண்யன் சொல்கின்றான்.

விஷத்திற்கு வலு கூட்டக் கூடாது என்று தான் அந்த அசுர சக்திகளைக் கண்ணன் வீழ்த்தினான் என்று தீப ஒளித் திருநாளாகக் காட்டுகின்றார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிய வேண்டும்.

ஒளியை எடுத்த பின் வேதனைப்படுத்தும் உணர்வுகள் உள்ளே செல்லாதபடி நீக்கி விடுகிறோம். நமக்குள் அதை வளர விடுவதிலலை.

1.விஷ்ணு இதைச் செய்கிறான்... இரண்யனோ அங்கே நாராயணனிடம் சேர்ந்து விடுகின்றான்.
2.அவன் கேட்டபடி வரப்படி அவனைக் கொல்லவில்லை... அழிக்கவில்லை.
3.ஆனாலும் அந்த தீமையை வளர்க்க விடாதபடி தள்ளி விடுகின்றான் – நரசிம்மா...!

துருவ நட்சத்திரம் ஆகும்போது தனது பங்காக ஒளியாக மாற்றுகின்றது. பாசிட்டிவ் நெகட்டிவ் பாசிடிவ்...! சுழற்சியின் மோதலில் தான் ஒளியே வருகிறது சூரியனுக்கு. அதே உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கும் போது ஒளியாக மாற்றுகின்றது.

விஷம் இல்லை என்றால் அந்த உணர்ச்சியின் ஒளி அலைகள் பரவாது. இருளுக்குள் அடங்கி ஒளியாகப் பரவும். காரணம்...
1.ஒரு பொருளுக்குள் அந்த விஷத்தின் தன்மை இல்லை என்றால்
2.அந்தப் பொருளின் சக்தியை ஒளியாகக் காட்டாது... அந்த அறிவால் இயக்காது.
3.எந்தப் பொருளில் விஷம் கலக்கிறதோ அந்தப் பொருளின் மணத்தை வீரியமாக அதனின் உணர்ச்சியை ஊட்டுகிறது.

இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அந்த ஞானிகள் கண்ட மூலங்களை உங்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).