உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம்... அவ வேதனைப்படுகின்றார் என்று கண் பார்க்கின்றது. நண்பராக இருக்கும் போது நம் இரக்க மனம் அவருக்கு உதவி செய்கின்றது.
1.இரக்கம் என்பது வலு குறைவு.
2.ஈகையோ உதவி செய்யச் செல்கிறது.
ஆனால் இதிலே விஷம் (வேதனை என்பது விஷம்) பட்டால் என்ன ஆகும்..?
உதவி செய்த அந்த நல்ல குணங்களுக்குள் அது பதிந்து இணைந்து விடுகின்றது. அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாகத் தொடங்குகின்றது.
அந்த நண்பரைத் திரும்பத் திரும்ப எண்ணினோம் என்றால் முதலிலே அது கருவாகின்றது. கருவான பின் அதற்குச் சாப்பாடு தேவை.
அவர் உடலிலிருந்து வரும் உணர்வை எடுத்து அது வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் அணுவாக ஆகிவிட்டால் இந்த வேலையைச் செய்யும்.
பொதுவாக ஒரு செடியில் விளைந்த வித்து நிலத்தின் மீது (மேலெழுந்தவாரியாக) விழுந்து விட்டால் முளைக்காது. மழை பெய்தாலும் பதிவானால் தான் முளைக்கும். அப்படியே முளைத்தாலும் மேலே இருந்தது என்றால் கருகிவிடும்.
அதைப் போன்று தான் நாம் எடுத்துக் கொண்ட அந்த நோயாளியின் வேதனையான
1.உணர்வு இரத்தத்திலே சுற்றுகின்றது... பதிவாகின்றது
2.எந்த உறுப்பின் பாகம் சுழல்கின்றதோ அந்த நேரத்தில் அவனைப் பற்றி நினைத்தோம் என்றால்
3.அந்த உறுப்பில் போய் ஒட்டிக் கொள்கின்றது
ஒட்டியவுடன் துடிப்பின் நிலைகள் வரும். பட...பட... என்று அடிக்கும். அந்த அணு என்ன செய்கிறது...? முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளி வந்துவிடும். வெளியிலே வந்த பின் அது கத்த ஆரம்பிக்கும்.
உதாரணமாக குஞ்சுகள் வந்த பின் தாய்க் கோழி என்ன செய்கின்றது...? குக்குக்கூ... என்று கத்தி அதற்கு இரையைக் கொடுக்கின்றது. குஞ்சுகள் பின்னாடியே போகின்றது.
அது போல் தான்
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் குஞ்சாக ஆகிவிட்டது என்றால் சிறு மூளைக்கு எட்டுகிறது அந்த உணர்ச்சிகள்
2.உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகிறது.
3.ஆணையிட்டவுடன் காற்றிலிருந்து அந்தச் சக்திகளை இழுக்கிறது.
சுவாசித்த பின் இதே உயிர் அதற்கு அதைச் சாப்பாடாகக் கொடுக்கின்றது. “ஏன் சாப்பாடு போடுகிறாய்...?” என்று உயிரிடம் கேட்க முடியுமா...?
ஆறாவது அறிவால் தான் அதை எல்லாம் தடுக்க முடியும். ஆறாவது அறிவால் தீமைகள் வளராதவண்ணம் தடுத்து அதை அடக்கிப் பழக வேண்டும்.
அதைத்தான் அங்குசபாசவா என்று காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவு பெற்றவன் எதையுமே அடக்க வல்லமை கொண்டவன்.
1.மிகப் பெரிய யானை இருந்தாலும் சிறிய அங்குசத்தை வைத்து அடக்கி விடுகிறார்கள்
2.அதைப் போன்று அருள் ஒளியின் தன்மையை நாம் எடுத்துக் கொண்ட பின்
3.எவ்வளவு பெரிய தீமை வந்தாலும் இந்த அருள் ஒளியைப் பாய்ச்சியவுடன் அது அடங்குகிறது.
காவியத்தில் இப்படித்தான் நமக்குக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள். ஆனால் என்னென்னமோ நாம் கதைகளை எழுதி வைத்திருக்கின்றோம்.
ஒரு சிலையை வைத்துக் காட்டி மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட இவ்வளவு விரிவுரையைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.