ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2021

ஏகாதசி அன்று “விடிய விடிய முழித்திருப்பது...” என்றால் அதனுடைய தத்துவம் என்ன...?

 

பால் சத்தானது தான்... அதிலே விஷத்தைக் கலந்தால் என்ன செய்யும்...? குடிப்போரை மாய்த்துவிடும்.

இதைப் போல எவ்வளவு அழகான நிலைகளில் எவ்வளவு பரிமாணம் எடுத்துக் கொண்டாலும் வேதனை வேதனை என்ற நிலைகள் வந்தாலே அந்த அழகே போய்விடுகிறது.

பெரிய குடும்பமாக இருக்கின்றது... தொழில் செய்கின்றோம்... எல்லாச் செல்வங்களும் வந்துவிட்டது. பையன் மீது பிரியமாக இருக்கின்றோம்.

ஆனால் அவன் ஏதாவது தவறு செய்தாலோ... “இப்படிச் செய்கின்றானே... இப்படி இருக்கின்றானே...” என்று எண்ணும் பொழுது வேதனை.

வேதனை என்றாலே விஷம்...!

1.தொழில் செய்கின்றோம்... அதில் நஷ்டம் வந்தால் வேதனை.
2.ஒருவருக்கு உதவி செய்கின்றோம்... கேட்கவில்லை என்றால் வேதனை.

இப்படி இந்த விஷமான சத்துக்கள் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்குள் பட்டு விட்டது என்றால் நம் உடலிலே அது நோயாக மாறிவிடுகிறது.

எவ்வளவு உயர்ந்ததற்குக் கொண்டு போக வேண்டும் என்று எண்ணினோமோ அங்கே போகாதபடி
1.வேதனை என்ற நிலையைக் கொண்டு வந்து சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
2.மனித உடலை இழக்கச் செய்து இழிநிலையான சரீரத்திற்குக் கொண்டு விட்டு விடுகின்றது.

அப்படி வந்தாலும் மீண்டும் அந்தக் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைப் பெறும் நிலைகள் வந்தால்தான் உயர்வு பெற முடியும் என்ற நிலைகளை வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்கும்படி ஞானிகள் அதைச் சாஸ்திரத்தில் காட்டுகிறார்கள்.

“விடிய விடிய முழித்திருப்பது...” என்றால் அதனுடைய தன்மை என்ன...?

ஒரு சூரியனின் தன்மையே என்றுமே விழித்த (பிரகாசமான) நிலை கொண்டது. அதைப் போன்று சப்தரிஷி மண்டலம் தனக்குள் என்றுமே அது ஒளி கொண்டது.

1.என்றைக்குமே விழித்த உணர்வு கொண்டு தான் பெற வேண்டுமென்று
2.விழித்திருந்தே பொருளறிந்து தனக்குள் செயல்படும் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
3.பரமபதத்தின் தத்துவத்தை “வைகுண்ட ஏகாதசி – சொர்க்கம்...” என்று காட்டி
4.உடலை விட்டுச் சென்றபின் நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று என்ற தெளிவைக் காட்டுகின்றார்கள்.

நம்மை அறியாது வரக்கூடிய விஷத்தை நீக்கக்கூடிய வழியையும் ஒவ்வொரு செயலைச் செய்யும் போது நாம் எப்படி விழித்திருக்க வேண்டும் என்றும்...?
1.இதை உணர்த்துவதற்கு ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருந்து
2.அந்த நல்ல நிலைகளைப் பெறச் சொன்னார்கள்.

ஆனால் இன்றோ விடிய விடிய விழித்திருந்து காலையில் வந்தபின் அதைச் செய்வோமா...? இதைச் செய்வோமா...? என்று அந்த நிலையில்தான் நாம் இருக்கிறோம்.