ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 19, 2021

நல்லதைச் செயல்படுத்த நமக்குக் காலதாமதம் ஆவது ஏன்...?

 

நம்மை அறியாமலே எத்தனையோ வேதனைகளை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அன்றாட வாழ்க்கையில் வருகிறது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

நம் உடலுக்குள் அவை புகாதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றுகின்றோம். அசுர சக்திகள் நம்மை அணுகாது மாய்க்கின்றோம்.

இது தான் தீப வழி... தீப ஒளித் திருநாள் என்பது.

இதைக் கணவன் மனைவி இருவருமே தனக்குள் வளர்க்கப்படும் போது தீயது வராதபடி தடுக்கவும் செய்கின்றது.

கருணைக் கிழங்கை வேக வைத்த பின் அதில் உள்ள விஷம் நீங்குவது போன்று... தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியபின் செம்பும் வெள்ளியும் ஆவியாக மாறுவது போல்... தீமைகளை அகன்று செல்ல வைக்க வேண்டும்.
1.தீமைகள் என்பது அறிவதற்கு நமக்கு உதவியது.
2.ஆனாலும் அது அணுவாக நமக்குள் உருவாகி விடக் கூடாது.

உதாரணமாக வெள்ளியும் செம்பும் தங்கத்துடன் சேர்த்துச் சூட்டிலே காண்பித்தவுடன் உடனே அவைகள் உருகி நகையாக ஒட்டிக் கொள்கின்றது
1.ஆனால் தங்கம் உருக வெகு நேரமாகும்
2.இதைப் போன்றுதான் நல்ல குணம் உடனடியாக இயங்காது.

ஒரு பாலைக் குடித்தோம் என்றால் நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்துத் தான் உடலுக்குள் அதனின் சத்து கூடுகின்றது. ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்றால் மெதுவாகத்தான் பேசுகின்றோம். ஆனால் ஒரு கோபம் வருவது உடனே இயக்குகின்றது.

ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றால்
1.ஒரு நொடிக்குள் நாம் கோபப்பட்டுப் பேசி விடுகின்றோம்... உடனே அதை அழுத்தி விடலாம்
2.ஆனால் அடுத்துச் சாந்தமாக பேச வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.

அதாவது சாந்தமாகச் சொல்லி ஒருவருக்கு அந்த அர்த்தத்தைப் புரிய வைக்க வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.

சுருக்... என்று சொல்லி விட்டால் உடனே அங்கே கோபத்தை உண்டு பண்ணிவிடலாம்.
1.என்ன சொன்னாய்...?
2.பார்... உன்னை என்ன செய்கிறேன் என்று... உடனே எதிர்த்துப் பேச வந்துவிடும்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒரு நல்லதைச் சொல்வதற்குக் கேட்பதற்கு ரொம்ப நேரம் ஆகிவிடும்.

ஆகவே நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அந்தச் சக்தியை நாம் தடைப்படுத்த வேண்டுமல்லவா. ஒரு நொடிக்குள் நம்மை உணர்ச்சிவசப்படச் செய்ததை மாற்ற
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து இந்த ஆத்ம சக்தியை
3.சிறிது நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டோம் என்றால் அதைச் சுத்தப்படுத்த உதவும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

எங்கெங்கேயோ போகிறோம்... என்னென்னெமோ செய்கின்றோம்...! ஆனால் இருந்த இடத்திலிருந்து நீங்கள் இந்த சக்திகளைப் பெற முடியும். அந்தச் சக்தி பெறக்கூடிய சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

உயிர் ஒளி பெற்றது... அது ஒளியாக இருப்பது போல்
1.உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த மெய் ஞானிகள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்
2.வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இருளையும் நாம் மாற்றி விடலாம்.
3.அந்தத் தீப வழியாக அருள் உணர்வுகள் வரும்.

தொழிலும் சீராக இருக்கும் உங்கள் வாழ்க்கையும் சீராக இருக்கும். கணவன் மனைவி இதே மாதிரி செய்து பாருங்கள். சரியில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்... சரியாக வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.