ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2021

மெய் ஞான அறிவால் காணக்கூடியதற்கும் விஞ்ஞான அறிவால் காணக்கூடியதற்கும் உண்டான வித்தியாசம்

 

உங்களுக்குள் யாம் (ஞானகுரு) இப்போது ஆழமாகப் பதிவு செய்யும் மெய் ஞானிகளின் உணர்வினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதனை நீங்கள் பெருக்கிக் கொண்டால்
1.உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு
2.விண்ணின் அதிர்வலைகளை நுகர்ந்தறிந்து
3.விஞ்ஞானிகள் கருவியின் துணை கொண்டு வான இயல் புவியியலில் அளந்தறியும் செயல்களை
4.அந்தக் கருவிகள் இல்லாமலே அதன் உணர்வலைகளை நீங்கள் அறிந்து
5.இத்தனை மணிக்கு இன்னது நடக்கும்...! என்று சொல்ல முடியும்.

அதே சமயத்தில் மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி
1.விண்ணிலிருந்து வரும் ஒரு கல்லோ பாறையோ (ASTEROIDS) பூமியிலே மோதாதபடி
2.அது திசை திரும்ப வேண்டும் என்று பலர் சேர்ந்து எண்ணினால்
3.இந்த ஒலி அலைகள் கொண்டு குறுக்காட்டி அவைகளைத் திசை மாற்றவும் உங்களால் முடியும்.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டோர் அணு ஆயுதங்களைத் எடுத்து அணு விசை கொண்டு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அந்தப் பாறைகளையோ கல்களிலோ செலுத்தி அவைகளை நொறுக்கலாம்.

1.நொறுக்கிய பின் அதிலே கலந்த நஞ்சு பிரபஞ்சத்தில் பரவி மீண்டும் நம் பூமிக்குள் தான் வரும்.
2.பூமியிலே மோதாது அதைத் தாக்க முடியும்... ஆனால் நம்மைக் (மனிதர்களை) காக்க முடியாது.

ஏனென்றால் இவர்கள் வெடிக்கும் தன்மை கொண்டு அது நொறுங்கிய பின் அந்த நஞ்சான உணர்வின் தன்மை நம் பூமியில் படரப்பட்டு நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன்” என்ற திரையைக் கிழித்து அந்த நஞ்சின் தன்மைகளை இங்கே பெருக்கிவிடும்.

சாதாரணமாக... விண்ணிலிருந்து வரும் நஞ்சுகளை எல்லாம் ஒடுக்கும் தன்மையாக அது பெருகி வரும் போது தான் அது ஓசான் திரை. பூமிக்குள் ஒளியின் தன்மை பெருக்கி இங்கிருக்கும் மற்றதனைத்தையும் காக்கும் நிலைகளாக அந்த ஓசான் திரை இங்கே வருகிறது.

ஆனால் விஞ்ஞான அறிவின் செயலால் ஓட்டை விழுந்து விட்டால் நஞ்சு உள்ளே புகுந்துவிடும். விண் கற்களைத் (ASTEROIDS) தெறிக்கச் செய்தாலும் நம் பூமிக்குள் அது வருமே என்றால் நஞ்சினைத் தான் அது பரப்பச் செய்யும்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கிறோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் ஒரு பொருளின் தன்மை இருக்கின்றது. நாம் எடுக்கச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றோம். அந்த ஆசையே துணிவாக அங்கே நம்மைச் செல்லச் செய்கிறது.

ஆனால் இடைமறித்து பஸ் வருகிறதா...? அல்லது வேறு என்ன வருகிறது...? என்று நாம் பார்த்துச் சென்றோம் என்றால் அந்த எல்லையை அடைய முடியும்.

அப்படித் திரும்பிப் பார்க்காது நாம் சென்றால் அந்தப் பொருளையும் பெற முடியாது... நமக்கும் ஆபத்தாகிவிடும். அதைப் போன்று தான்
1.மனிதன் இந்த விஞ்ஞான அறிவால் நாட்டைக் காக்க எண்ணினாலும்
2.அதனால் விளைந்த நஞ்சு நாட்டு மக்களை அழித்துவிடும்.

இன்று நாம் பார்க்கும் விஞ்ஞானத்தின் விளைவுகள் இது தான்.