ஒரு மனிதன் வேதனைப்படும் சொல்லைச் சொன்னான் என்றால்
1.அந்த வேதனையான உணர்வு நம்மைத் தாக்கி…
2.அதே வேதனையான சொல்லைத்தான் நாமும் திருப்பிச் சொல்லுவோம்…
ஒருவரை வேதனைப்படும்படி பேசினால்… அல்லது வேதனையுடன் ஒருவர் பேசினால்… இந்த வேதனை அவர்களைத் தாக்கப்படும் பொழுது அதே தாக்குதல் திரும்பி நம்மையும் தாக்கும்.
அதே சமயத்தில் அன்புடன் பண்புடன் மகிழ்ச்சியுடன் ஒருவர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால் இந்தச் சொல் அவரைப் அன்புடன் பண்புடன் வாழ்ந்திட வளர்ந்திட உதவும்.
1.அதே உணர்வின் இயக்கமாக நம்மையும் பண்புடன் வாழச் செய்திட
2.அந்த எதிர் பதிலாக அங்கிருந்து வரும்.
ஒருவர் கொடுமைக்காரர் என்று நாம் சொல்கிறோம். அவருடைய செயல் பிறருடைய நிலைகளைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் தன்மையாக வரும் போது அது வலிமை மிக்கது. அந்த வலிமை மிக்க நிலைகள் யார் கேட்டாலும் இந்த வலுவின் தன்மையே அங்கே வரும்
மேலே சொன்னது போன்று தான் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றல்களைக் “கல்யாணராமன்” என்று அழைக்கின்றார்கள்.
அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாக ஆன நிலையில்
1.தனது வாழ்க்கையில் வந்த கொடுமைகளையும் கொடூரச் செயல்களையும் கண்டுணர்ந்து
2.அதைத் தனக்குள் வளராது “தன்னுடன் அரவணைத்து” தன்னுடன் இணைந்து இயக்கும் சக்தியாக மாற்றுகின்றான்.
3.ஆக… தீமைகளை விளைவிக்காது நல்லதாக மாற்றிக் கொள்கின்றான்.
இராமன் கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான்…?
வில்லை வளைத்து அதிலே கணைகளை ஏற்றும்போது தான் பிறருக்குத் துன்பங்கள் விளைவிக்கிறது என்பதால் பிறருக்குத் தீமைகளை விளைவிக்கும் அந்த வில்லையே இராமன் ஒடித்துவிடுகின்றான்.
இதைப் போல நீங்களும்…
1.உங்கள் வாழ்க்கையில் பிறருக்குத் தீமைகளை ஏற்படுத்தும் அத்தகைய கொடிய எண்ணங்களை அகற்றி விட்டு
2.அருள் ஞான உணர்வின் தன்மையை அனைவரும் பெற வேண்டுமென்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டால்
3.நீங்களும் கல்யாணராமன் தான்.
நம்முடைய எண்ணம் பிறரை அரவணைக்கும் சக்தியாக மாறும். அந்த அரவணைக்கும் சக்திகளை நாம் எப்பொழுது பெருக்குகின்றோமோ அப்போது நாமும் கல்யாணராமன் ஆகின்றோம்.
ஆகவே கல்யாணராமன் என்றால் யார்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றியவர்களில் அகஸ்தியன் அணுவின் ஆற்றலைத் தனக்குள் அறிந்தான். பூமியின் துருவத்தை நுகர்ந்தறிந்தான். அதனின் இயக்கத்தை அறிந்து மனிதனுக்குள் தீமைகள் எப்படி உருவாகிறது…? என்றும் உணர்ந்து கொண்டான்.
1.அந்தத் தீமையான உணர்வின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒளியின் சுடராக மாற்றி
2.இன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய கடும் விஷமானாலும்
3.அவை அனைத்தையும் ஒளியாக மாற்றித் தனக்குள் அரவணைத்து
4.ஒளியின் சுடராக மாற்றி அங்கேயே (துருவத்திலேயே) வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.
உங்களுடைய வாழ்க்கையில் நீங்களும் அந்தத் துருவ மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
யாருடைய தீமைகளை நீங்கள் பார்த்தாலும் அந்தத் தீமைகள் நீங்கி அவர்கள் மகிழ்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். வெறுமனே அல்ல… அருள் சக்திகளைச் சேர்த்து…!
அருள் மகரிஷிகளின் உணர்வை எண்ணத்தால் நீங்கள் எண்ணி வலுவாக்கிக் கொண்ட பின் யார் தீமை செய்கின்றார்களோ அவர்களுக்குள்… அந்தத் தீமை செய்யும் உணர்வுக்குள்… அந்த மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பார்ப்போர் அனைவரும் பெற வேண்டும்… அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால் அவர்களுக்குள் மகிழ்ச்சி பொங்கும் உணர்வாக வரும்.
அந்த மகிழ்ச்சி அங்கிருந்து வெளிப்படும் போது அந்த உணர்வினை நீங்கள் நுகர்ந்தால் அந்த அருள் வழி உங்களுக்குள் கிடைக்கின்றது இருள் நீக்கும் நிலைகள் பெருகுகின்றது. ஒருவருக்கொருவர் அரவணைக்கும் கல்யாணராமனாக நீங்கள் ஆகின்றீர்கள்.
நாம் அனைவருமே…
1.அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்ற உயர்ந்த நிலைகளை எண்ணி இதைப் பெருக்கி
2.ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவர்கள் உயர வேண்டும் என்றும்
3.அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்றும்
4.அவர் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றும்
5.அவர் தொழில்கள் வளம் பெற வேண்டும் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்றும்
6.இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டால் இது கல்யாணராமன் ஆகிவிடுகின்றது