ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2021

தீமைகளை அகற்றும் ஞானத்தின் பெருக்கு...!

 

ஆடி மாதங்களில் பெரும்பகுதி கேரளா கர்நாடகா உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் இந்த பகுதிகள் எல்லாம் நல்ல மழை பெய்கின்றது... நீர் அங்கே பெருகுகின்றது.

1.அங்கே பெய்யும் மழை நீரின் அழுத்தம் அதிகரிக்கப்படும் பொழுது
2.அதிலிருந்து மோதும் காற்று அலைகள்
3.மழை இல்லாத இடங்களுக்குக் காற்றாகத் தள்ளி வருகின்றது.

அதாவது அங்கே மழை பெய்தாலும் இதனின் உணர்வின் காந்த அலைகள் ஈர்ப்பாகி இங்கே தள்ளிக் கொண்டு காற்றாக வருகிறது.

உதாரணமாக நாம் அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே பொருளைப் போட்டுக் கொதிக்க வைக்கும்போது ஆவியாக நகர்ந்து மேலே செல்வது போன்று...
1.சூரியனின் வெப்பத் தணலால் அந்த குளிர்ச்சியின் வேகம் அழுத்தத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது
2.இந்த வெப்பத்தின் தன்மையால் காற்றின் சக்தி அதிகமாகப் படுகின்றது.

ஒரு கேஸ் (GAS) அதிக அழுத்தமானால் அது மூடியை எப்படித் தள்ளிக் கொண்டு செல்கின்றதோ இதைப்போல ஒரு பகுதியில் பெய்யும் மழை தனக்குள் வரும் வெப்பத்தின் தணலைக் கவர்ந்து அலைகளாக வரும் பொழுது வேகம் அதிகரிக்கின்றது. பெரும் காற்றாக வீசத் தொடங்குகிறது.

அது வரும் பாதையில் மற்ற தாவர இனங்கள் அதன் வித்துகள் அங்கே படர்ந்து இருப்பினும் அதை அடித்துச் சென்று மற்ற இடங்களில் அதைப் பெருக்கச் செய்கின்றது. இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அங்கே ஒரு இடத்தில் மழை பெய்கின்றது அதிலிருந்து வரும் அழுத்தத்தின் தன்மை அங்கே நிலைப்பதில்லை... இங்கே வருகின்றது.
1.அது நீரைக் கவர்ந்து வந்த நேரத்தில்
2.வெப்பத்தின் தணல் தாக்கப்படும் போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கின்றது.

வேகத்தின் தொடர் அதிகரிக்கப்படும் பொழுது மற்ற தாவர இனங்களில் உள்ள வித்துகளைப் பரவச் செய்கின்றது. மற்றொரு பக்கம் விளைந்திடும் சத்தின் தன்மையை தாவர இனத்தில் இணையச் செய்யும் பொழுது அந்தத் தாவர இனங்களில் நஞ்சான அணுக்கள் உருவாவதை இது அப்புறப்படுத்துகின்றது.

ஆகவே இந்த ஆடிக் காற்று அது மிகவும் சிறந்தது.

எதைப் பெருக்குகின்றது...? தீமையை அகற்றும் சக்தியாகப் பெருகுகிறது. ஒரு பக்கம் பெய்யும் மழை நீரின் சத்தைத் தனக்குள் கவர்ந்து நீர் இல்லாத இடத்தில் அதைப் பெருக்கும் தன்மையை அடைகின்றது.
1.அங்கே நீரின் தன்மை பெருகுகின்றது
2.இங்கே காற்றின் தன்மை பெருகுகின்றது

அதனால் தீமைகளை அகற்றும் சக்தியும் மற்ற தாவர இனங்களில் மோதும் பொழுது அதில் இருக்கும் நஞ்சினை நீக்கும் வல்லமையும் பெறுகின்றது.

இது வழி தொடர்ந்து... ஒன்றின் பின் ஒன்று தொடராக... அது இணைந்திடும் சக்தியாக... அந்த இயல்பின் தன்மையாக... இயற்கையின் நிலையாக... ஒன்று ஒன்றுடன் இணைக்கப்படும் பொழுது இது செயல்படுகின்றது.

உதாரணமாக
1.நாம் கோபப்படுவோரைக் கண்டால் அந்தக் கோப உணர்வு நமக்குள் பெருகுகின்றது
2.ஒருவன் வேதனைப்படுகிறான் என்று அறிந்தால் அந்த வேதனையான சக்தி நமக்குள் பெருகுகின்றது
3.ஒருவன் நோயினால் அவதிப்படுகிறான் என்று அவனை உற்றுப் பார்த்தால் நமக்குள் வலியும் வேதனையும் பெருகுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் பெருக்கிக் கொண்டால் அது நமக்குள் தீமையை நீக்கும் சக்தியாகப் பெருகும்.

அங்கே நீரின் சக்தியில் விளைந்து அதன் உணர்வின் தன்மை ஆவியாக மாறி இங்கே தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகி நல்ல வித்தின் தன்மை பெருகும் தன்மை வருகின்றது.

அதே போல்
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கித் தீமையை அகற்றும் சக்தியைப் பெருக்கி
3.அனைவருக்கும் இந்தத் தீமையை நீக்கும் சக்தியைப் பெருக்க வேண்டும்.

இதை நினைவுபடுத்தும் நாள் தான் ஆடிப்பெருக்கு...!