மிருக நிலையிலிருந்து என்று மனிதனாக ஆனோமோ அன்றே “முழு முதற் கடவுள் என்று மனிதனைப் பாடியுள்ளார்கள்…” சிருஷ்டிக்கும் வன்மை கொண்டது தான் மனித உணர்வின் எண்ணம்.
அத்தகைய ஆற்றல் பெற்ற நாம்… நம் நினைவை இழந்து விடாதபடி இதன் எண்ணத்தைக் கொண்டு ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நமக்குள் தியானத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
ஞானிகள் அருள் வாக்குடன் கலந்து அவர்களுடைய அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
1.நம்மை அறியாது சுவாசித்த சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் பயம் வேதனை இதைப் போன்ற குணங்கள்
2.நமக்குள் நோயாக உருவாக்கச் செய்யும்… சிந்தனைகளை குறைக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.
ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி தியானத்தை மேற்கொண்டு இருளை நீக்கி ஒளியின் சரீரம் பெறுவோம். அதை நினைவுபடுத்தும் நாள் தான் தீப வழித் திருநாள்… தீப ஒளித் திருநாள்.
ஞானிகள் காட்டிய அந்த நிலையை நாம் எல்லோரும் அடைவோம்.
விண்ணிலே தோன்றியது தான் உயிர்.
1.அருள் ஒளியின் சுடராக தீப வழிப்படி விண்ணுக்குச் செல்லும் தகுதி பெற்ற நாம்
2.இந்த உடலில் இருக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.அந்த மெய் ஒளியுடன் ஒளியாக… உயிருக்குள் உணர்வு அனைத்தையும் ஒளியாகச் சேர்த்து
4.அழியா ஒளிச் சரீரமாக அதனுடன் இணைந்து விஜயதசமி…
5.பத்தாவது அவதாரமான கல்கி என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.
ஆறாவது அறிவு கொண்ட நாம் “ஏழாவது நிலையான” ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன் பெற்றவர்கள்.
ஒருவன் திட்டி விட்டால் தியான வலு கொண்டவர்கள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.அந்த இடைஞ்சல் செய்தவனின் உணர்வுகள் தனக்குள் இயக்காதபடி
2.அதைத் தடுத்து நிறுத்தச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.
இவ்வாறு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைச் சேர்த்து நம் உடலுக்குள் விளையச் செய்யும் போது “எட்டாவது நிலை…” உடலுக்குள் விளைந்த பின் உயிருடன் அது சேரும் போது “ஒன்பதாவது நிலை” ஆகின்றது.
ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்று மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்செல்லாம் நாமும் பேசுவோம். அவருடைய பேச்சு நமக்குள் இயங்காத வண்ணம் தடைப்படுத்துவதற்குத் தான் ஞானியின் அருள் சக்தி இதனுடன் இணத்துச் சேர்க்க வேண்டும் என்று சொல்வது.
அந்த இருளான உணர்வுகளைத் தடைப்படுத்தி அந்த உணர்வை ஞானமாக்கி அந்த ஒளிச் சுடராக ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்வதால் உயிர் ஒளியாக இருப்பது போன்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாகி உடலை விட்டுச் சென்றபின் தசமி “பத்தாவது நிலை…” கல்கி.
1.உடலுடன் வாழும் போது செடி கொடி தாவரங்கள் விளைய வைத்ததைத் தான் உணவாக உட்கொள்கிறோம்.
2.ஆனால் இந்தப் பூமியிலிருந்து நாம் விண் சென்ற பின்
3.நம் சூரிய குடும்பமான பிரபஞ்சத்திற்கு வெளியே தான் நம் உயிராத்மா செல்கின்றது.
இந்தச் சூரிய குடும்பத்திற்குள் விளைந்த அனைத்தையும் ஒளியின் உணர்வாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியில் என்றும் பதினாறு என்று செல்லும் நிலையில்
1.மற்ற பேரண்டத்தில் இருவரும் சக்திகளை அந்த விஷத்தன்மையைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து இதை எல்லாம் பெற்றோமோ
3.அந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் உயர்ந்த சக்திகளை அனுப்பி
4.இந்த சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
5.பேரண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வின் சக்திகளையும் ஒளியாக்கி
6.அந்தப் பேரண்டத்திற்கே வழி காட்டும் உணர்வின் ஒளி அலைகளாக நாம் வளர முடியும்.
அந்த தீபத்தின் வழி செல்வோமேயானால் இது தான் மனிதனின் கடைசி நிலை…! தீப வழி… தீப ஒளி (தீபாவளி).
ஆக உயிர் விண்ணிலே தோன்றினாலும் மீண்டும் விண்ணுக்கே ஒளியாகச் செல்கின்றது.