ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 14, 2021

இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள் - ஈஸ்வரபட்டர்

 

ஜீவ சக்தியுடன் கூடிய இந்த மனித உடலில் பல கோடி உயிரணுக்கள் உண்டு.

உடல் கூற்றை ஆராயும் மருத்துவ விஞ்ஞானிகள் மனிதனுக்கு ஏற்படும் வியாதியை அவன் உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் மற்றும் எத்தனையோ நிலைகளில் உள்ள அணுக்களை ஆராய்ந்து காணுகின்றார்கள்.

அந்தந்த வியாதிக்குகந்த இரத்தத்தில் ஏற்படும் அணுத் தன்மையின் மாற்றத்தையும் எவ்வணுவின் நிலை உயர்ந்துள்ளதோ அவ்வுடலுக்குகந்த அணுத் தன்மையில் மனிதனின் வியாதிக்குகந்த மாற்றத்தையும் கண்டறிகின்றார்கள்.

1.நாம் “உணர்வின் குண அமிலம்” என்று உரைக்கின்றோம்.
2.அதையே விஞ்ஞான மருத்துவத்தில் “வைட்டமின்கள்” என்று உரைக்கின்றார்கள். (வைட்டமின் A B1 B2 B6 B12 C D K E)
3.இதுவல்லாமல் உடலில் உள்ள மாறு கொண்ட “விஷ அணுக்கள்” (VIRUS) உள்ளதையும் உணர்ந்து வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்நிலையில் சில அமிலங்களை அதில் செலுத்தி அணுக்களின் தன்மையை நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டுணர்ந்து
1.மனித உடலின் அணுக்களின் ஆராய்ச்சியின் விகித நிலைக்கொப்ப
2.மருத்துவ விஞ்ஞானம் மிக மிகத் துரித கதியில் முன்னேறி உள்ளது இன்று.

ஜீவன் பிரியக்கூடிய ஒரு மனிதனை மருத்துவ விஞ்ஞானத்தால் ஜீவிக்க வைக்கின்றான் மருத்துவன்.

ஆனால் மருத்துவ ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் நோய்க் கிருமிகளை ஆராய்ந்து அதற்குத் தகுந்த மாற்றுக் குணங்களை ஏற்றி அந்நோய்கள் பரவா நிலைக்காக
1.தன் செயலின் சக்தியையும்… பணத்தின் வலிமை கொண்டும்…
2.பல சாதனைகளை இயந்திரங்களின் நிலைக்கொப்ப
3.மனித உணர்வின் எண்ணங்களை விஞ்ஞான மருத்துவம் இழுத்துச் செல்கிறது.

ஆனால் இயற்கையின் குண அமில மாற்று நிலையை வழிப்படுத்தி
1.ஆத்ம தியானம் என்ற இயற்கையுடன் ஒன்றி
2.இயற்கைக் கோளமான மனிதக் கோளத்தின் வீரிய உயர் சக்தியின் ஞானத்தை
3.இயற்கை ஈர்ப்பின் குண அமிலத்துடன் ஒன்றச் செய்து
4.மண்டலங்களாக உருப்பெறும் இவ்வுடல் மண்டலங்களைச் செயலாக்கும் திறமைக்கு
5.இவ்வெண்ண ஈர்ப்பு உணர்வைச் செலுத்த முடியாதவர்களாகி விட்டனர்
6.இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள்.

இந்தப் பிம்ப ஜீவ மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் வாழ்கின்றது. சந்தர்ப்பத்தில் அதற்குள் பிணி ஏற்படுகிறது. அது எப்படி வந்தது…? என்று அறியும் நிலை இல்லை.

ஆக அந்த ஈர்ப்பிலேயே தொடர்ந்து செல்லும் நிலையில் அதே வியாதி நிலை சிக்குண்டு
1.அந்த ஆரம்ப வியாதி குணமாகாமல்…
2.அதன் சுழற்சியில் (குணமாகவில்லை என்ற வேதனையால்) உணர்வின் எண்ணத்தைக் கடினமாக்கிச் செலுத்தி
3.மேன்மேலும் அதன் ஈர்ப்பின் சுவாசத்தால் குறைவாக உள்ள இவ்வியாதியின் அணுவே
4.உடல் முழுமைக்கும் ஏற்றச் செய்து விடுகின்றனர்.

ஓர் நோயின் அணு பல அணுவையும் தன் குணத்தின் தொடரின் சுழற்சியினால் உடல் முழுவதற்கும் அந்த (அதன் குணச் செயல்) வியாதி தொற்றிக் கொண்டு விடுகிறது.

நோயாகி விட்டது… நோயாகி விட்டது… என்ற அதே சுழற்சி பயத்தினல்
1.அந்த உடலுக்குகந்த நல்ல அமிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டு
2.ஒன்றின் ஈர்ப்பு வியாதியுடன் ஒன்றி கடைசியில் பிரிவது தான் இஜ்ஜீவன்.