ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2016

“புலஸ்தியர் வம்சம்” - “இக்ஷ்வாகு வம்சம்”

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன். “புலஸ்தியர் வம்சத்தில்” வந்தவன் தான் அகஸ்தியன். அணுவின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவன் அவன். எதன் உணர்வோ அதன்படி எண்ணங்கள் எப்படித் தோன்றியது என்று உணர்த்தியவன் அகஸ்தியன்.

அதாவது பத்தாவது நிலை அடைந்தது. ஒரு உணர்வின் தன்மை வந்தது “இக்ஷ்வாகு வம்சம்”.  எது..,?

இந்த உடல் பெற்ற பின் நாம் எதை இச்சைப்படுகின்றோமொ அந்த வம்சத்தில் வந்தவன் தான் அரசன். இந்த நாட்டைப் பிடிக்க வேண்டும் அந்த நாட்டைப் பிடிக்க வேண்டும். என்று இச்சைப்படக் கூடிய நிலைகள் வருகின்றது.

ஆக, தசரதச் சக்கரவர்த்தி. இந்த உடலின் இச்சைகொண்டு வரும்போது இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவன், பிரியப்பட்டான்.

ஆனால், அந்த அகஸ்தியனுடைய மூதாதையர்கள் யார்? புலஸ்தியர்கள். புலனை அறிந்தார்கள்.

அந்த உணர்வின் புலனை அறிந்து அந்த மணத்தால் எடுக்கப் போகும் போது அணுவின் இயக்கத்தை அறியும் தன்மை புலஸ்தியர் வம்சத்தில் தோன்றிய அந்த அகஸ்தியனுக்கு வந்தது.

இக்ஷ்வாகு வம்சத்தில் வந்தது தசரதச் சக்கரவர்த்தி. அவன் இந்த நாட்டை காக்க நல்லவன் (இராமன்) வர வேண்டும் என்று இந்த நிலைகள் வந்து இச்சைப்பட்டான்.

இந்த உணர்வின் தன்மையை வளர்க்கப்படும்போது அந்த இச்சையின் அளவுகள் கூட்டமைப்பில் எப்படி நடக்கின்றது என்பதனை இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றனர்.

இக்ஷ்வாகு வம்சம் - நாம் எல்லாம் ஆசைப்பட்டு அந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பத்தாவது நிலை அடையக் கூடியது. எதில் இச்சைப்படுகின்றோமோ அதன் வழியே நாம் செல்லுகின்றோம்.

ஒரு நாட்டை இச்சைப்பட்டால் அதை அடைய வேண்டும் என்றால்  அந்தச் சக்தியின் தன்மை வரும்போது அவனுடைய மகன் இங்கே மற்றவரோடு வரும் போது பரதனாகின்றான். இருந்தாலும் சகோதரப் பற்று வருகின்றது.

இச்சைப்பட்ட கைகேயின் உணர்வுகள் என்ன செய்கின்றது, ஆக தீமையை மாற்றி நல்லது செய்ய விடாது அவன் வாயை அடைக்கின்றது. அந்த உணர்வு ஆன பின் உடலில் நோயாகி மடிகின்றது. எதை இச்சைப்பட்டானோ அந்த வம்சத்தில் இவன் (தசரதன்) மடிகின்றான்.

ஆகவே, இதே உணர்வு நமக்குள் எடுக்கப்படும்போது நாம் கோபப்பட்டோ வெறுப்புப்பட்டோ இருந்தால் அது தசப்பிரியன் (இராவணன்) என்ற நிலை வரப்போகும் போது சந்தோஷம் என்ற நிலைகளில் இயக்குகின்றோமா? இல்லை.

கோபமாக இருப்பவனிடம் போய் சந்தோசம் என்று சொன்னால் என்ன செய்வான்? சீதாவை (அந்தச் சந்தோசத்தை) இயக்குகின்றானா? இல்லை. ஆகவே அவன் சீதாவைச் சிறைப்பிடித்தான். இவ்வளவு அழகாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் இராமயாணத்தை தலை கீழாக மாற்றி நாம் என்ன செய்கின்றோம்? சீதா காட்டிற்குப் போய்விட்டாள். பல அல்லல்பட்டாள். இதில் அழுகின்றவர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு சமயம் சீதாவைப் பற்றிய கதை பற்றி இராமாயணத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் கதை வரவில்லை என்று சொன்னவுடனே டி.வி. பெட்டியையே தூக்கி உடைத்துள்ளார்கள். அவ்வளவு பக்தி.

ஞானிகள் உருவாக்கிய காவியப் படைப்புகள் சாதாரணமானவை அல்லை. நம் குரு காட்டிய அருள் உணர்வு கொண்டு அந்தக் காவியங்களைப் படித்துப் பாருங்கள். அதன் மூலக் கூறுகளை அறிந்துகொள்ள முடியும்.

அதன் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை எளிதில் போக்க முடியும். உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.