முதலில் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லிக் கொண்டு வந்ததெல்லாம் கொஞ்சம்
கொஞ்சமாகப் பதிவாக்கிப் பதிவாக்கி அதை நீங்கள் புரிந்து அந்த உணர்வின் தன்மை
வளர்ச்சியாகி வருகின்றது.
அதே சமயத்தில் உங்களை அறியாமல் ஏதாவது தப்பு வந்தாலும் உடனே “ரிமோட்” செய்து
அது உடனே மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி உங்களுக்குள் வர வேண்டும் என்றுதான் இதை
உபதேசிக்கின்றேன்,
வந்தால் தவறு செய்பவனைப் பார்த்தவுடன் உங்களுக்குள் கோபம் என்ற உணர்வு வருகின்றது.
அந்தக் கோபப்படும் உணர்வு இங்கே ரிமோட் - வலுவாக ஆகும் பொழுது தீமையைப் பார்த்தவுடனே
நமக்குள் புகாதபடி அவனுக்கு நல்ல அறிவு வரட்டும் என்று நமக்குள் உட்புகாமல்
தடுத்துக் கொள்தல் வேண்டும், சேனாதிபதி.
ஆகவே, குரு வழி என்ன? நமக்குள் எடுத்துக் கொண்ட தீமையை நீக்கும் உணர்வுகள்
உருபெறுகின்றது. அதுதான் வசிஷ்டர் பிரம்ம குரு.
நீங்கள் மற்ற உபதேசங்களுக்குப் போனீர்கள் என்றால் இவ்வளவு நேரம் கேட்டுக்
கொண்டிருப்பீர்களா? அவர் என்ன பேசுகிறார்? இவர் என்ன பேசுகிறார்? என்று திரும்பித்
திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்கள் அனைவருக்குள்ளும் எப்படியும் பதிவு செய்ய வேண்டும் குருநாதர் காட்டிய
அருள்வழியில் ரிக்கார்டு செய்துவிடுகின்றேன். அடுத்துச் சிறிது நேரம் சிந்தனை
செய்தீர்கள் என்றால் ஞானிகள் பெற்ற உணர்வு உங்களுக்குள் அந்த ஞானம் பெருகும்.
உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டு போனால் ஒருவன் திருட
வருகின்றான் என்றால் அது முதலிலேயே தெரியும். சுதாரித்துக் கொண்டு தடுத்துவிடலாம்.
திருடன் போகிறான் என்று கவனக் குறைவாக இருந்தால் பிட்பாக்கெட் அடித்துவிட்டுச்
சென்றுவிடுவான். பிட்பாக்கெட்காரன் வருகிறான் என்றால் தெரிந்து கொள்ளலாம்.
ஏனென்றால், வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக இருக்க
வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவு செய்கிறோம்.
யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு அதன் வலிமையைக்
காட்டிவிடுகின்றது.
ஆக, மொத்தம் அதைக் காட்டிலும் வலிமையான துருவ நட்சத்திரத்தின் உணர்வை
உங்களுக்குள் பதிவாக்கிவிட்டால் இதன் வலிமை காட்டும் போது தீமைகளிலிருந்து
விடுபடும் உணர்வின் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
வேதனை என்ற உணர்வு நமக்குள் வந்தால் கலி. அடுத்த நிமிடம் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வைப் பெறவேண்டும் என்று எடுத்தால் கல்கி. ஆக, உயிரைப் போல
உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி வரவேண்டும்.
அந்த நிலை பெறச் செய்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.