ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 5, 2016

ஒவ்வொருவருக்குள்ளும் தினமும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது... ஏன்...?

நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். இது ஆனவுடன் என்ன ஆகின்றது?

“இப்படி எனக்குப் பண்ணுகிறானே..,” என்ற கோபம் வந்து உயிரிலே படுகின்றது, குரு. இந்தச் க்ஷேத்திரத்தில் என்ன செய்கின்றது? அவன் செய்த தவறின் உணர்வு இங்கே நடக்கின்றது.

அதனின் உணர்வு கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ இந்தக் கண் என்ன செய்கின்றது? வழி..., காட்டுகின்றது.

அவனிடம் போய் “நீ எப்படி இப்படிச் செய்யலாம்..,?” என்று இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று கேட்கும் நிலைகளுக்கு வழி காட்டுகின்றது.

அப்பொழுது இங்கே போர் நடக்கின்றது.

ஆனால், நடந்தாலும் நாம் இதில் தப்புவதற்கு வழி இல்லை. குருக்ஷேத்திரப் போர் நடந்தவுடன் உடலுக்குள் போய் என்ன செய்கின்றது?

அவன் செய்த வேதனைப்படும் உணர்வுகள் அர்ச்சுனன், குறி வைத்துத் தாக்கிவிடுகின்றான்.

நம் இரத்தத்தில் போனவுடன் என்ன செய்கின்றது?

நகுலன். அவனின் வேகமான உணர்ச்சிகள் என்ன செய்கின்றது?

ஆக, ஒரு மிளகாயை வாயில் போட்டவுடன் “ஆ..,” என்று நம்மை அலறச் செய்கின்றது. நகுலன், விரிந்து உள்ளுக்குள் போகின்றது.

சகாதேவன், அதிலுள்ள காந்தம் இரண்டற இணைக்கின்றது. இணைத்தவுடன் என்ன செய்கின்றது?

அதன் பின் கோபமான உணர்வு வரும்போது பீமன். நமக்குக் கோபம் வந்துவிடுகின்றது. பயங்கரமான கோபம் வருகின்றது.

அப்படி பீமனாகும் பொழுது அடிக்கடி கோபம் வந்து வலுவாகும் போது நமக்குள் இரத்தக் கொதிப்பாகின்றது.

அதுதான் எண்ணங்கள் - இராமாயாணம் நடக்கவும் செய்கின்றது. கண்ணன் குருக்ஷேத்திரப் போரை வழி நடத்திக் கொண்டு தான் இருக்கின்றான். இப்படி நமக்குள் மகாபாரதப் போர் உள்ளுக்குள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் பார்த்தோம் என்றால் “எனக்கு ஒரே மனக் கலக்கமாக இருக்கின்றது.., அப்படி இருக்கின்றது..,, என் வீட்டுக்காரர் இப்படிச் செய்கின்றார்..., என் பையன் இப்படிச் செய்கின்றான்..,” என்று இந்தப் போர் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

யார் நடத்துவது?

கண்ணால் பையன் செய்வதை நினைத்தவுடன் உடனே போர் நடக்கின்றது. கண்ணால் பார்க்கும் பொழுது என் வீட்டுக்காரர் இப்படிச் சொல்கிறார் என்று வருகின்றது. கண்ணால் பார்த்து ஒன்றைச் செய்யும் பொழுது இப்படியெல்லாம் நடக்கின்றது.

இந்தக் கண்ணன், அவர்கள் தவறு செய்கின்றார்கள் என்ற உணர்வைப் பார்த்தவுடன் அதே உணர்வு இங்கே ஆகின்றது.

அப்பொழுது எது நடக்கின்றது?

இதுவெல்லாம் நமக்குள் பூரண பௌர்ணமியாகக் கூடிய ஒளியின் உடல் பெறக் கூடிய காலத்தில் இதெல்லாம் மறைத்துக் கொள்கின்றதே...!

நம் சாஸ்திரங்களில் எவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்? அதில் தவறு எதுவும் இல்லை. நாம் புரிந்து கொண்டோமா?