ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2016

TENSION (மன அழுத்தம்) ஆகி கோபப்படுபவர்கள் உடலுக்குள் நடக்கும் செயல்கள்

என்னைத் திட்டினார் என்றால் அந்த உணர்வு நமக்குள் ஆனால் அதே உணர்வான பின் கோபம் வருகின்றது. அவரை எண்ணும்பொழுதெல்லாம் நமக்குக் கோபம் வருகின்றது.

இந்த உணர்வு அதிகமாகிவிட்டால் இரத்தக் கொதிப்பு வந்துவிடுகின்றது. ஒருவருக்கு நாம் கடன் கொடுக்கிறோம் அவர் திரும்பக் கொடுக்கவில்லை. இரண்டு தரம் ஏமாற்றினால் போதும்.

"என்னையா.., நான் தான் தருகின்றேன் என்று சொல்கிறேன்.., அதற்குள் கேட்கிறீர்கள்..," என்று சொன்னவுடன் உடனே கோபம் வருகின்றது.

பார்..., நான் இவ்வளவு நாள் பொறுத்துக் கொண்டு இருந்தேன் கடனை வாங்கிவிட்டு இப்படிச் சொல்கிறானே..., என்று கோபம் வரும்.

கோபம் எங்கிருந்து வருகின்றது? சந்தர்ப்பத்தால் தான் உருவாகின்றது. உணர்வின் தன்மை பெருக்குகின்றது. கந்த புராணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

நாம் பல கோடி உடல்களைப் பெற்று வந்தபின் கார்த்திகேயா. எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றோம். சேனாதிபதி, இந்த ஆறாவது அறிவு தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ளும் திறன் பெற்றது.

சிவனுக்கே ஓதினான் "ஓம்" என்ற பிரணவத்தை. நாம் நுகர்ந்த உணர்வுகள் எது எண்ணமோ அதன்வழி தான் சிவமாகின்றது. சிவனின் பிள்ளைதான் இயக்கம் வினை.

ஆகவே, தீமையை நீக்கி வினைக்கு நாயகனான நிலைகள் பெற்று கார்த்திகேயா எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் சக்திகள் பெற்றது.

தெரிந்து கொள்ளும் சக்தி வருகின்றது, சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை. நாம் கொடுத்தவன் கொடுக்கவில்லை என்று  வேதனைப்படுகின்றோம். அப்பொழுது அந்தச் சந்தர்ப்பம் ஓம் நமச்சிவாய.

அந்த வேதனை என்ற உணர்வு வரும் பொழுது சிந்தனையற்ற நிலையில் கோபப்படுகின்றோம். அது இரத்தக் கொதிப்பாகின்றது. அடுத்து அவனை நினைக்கும் பொழுது "இரு நான் பார்க்கிறேன்..., அவனை உதைக்க வேண்டும்..," என்று தான் கோபம் வருகின்றது.

அவனை உதைக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். இந்த உணர்வு நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணத்தை எல்லாம் “பட பட என்று” பதட்டமடையச் செய்கின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தவர்களுக்குப் பாருங்கள். பட பட என்று வருவார்கள். சும்மா இருந்து கொண்டுதான் இருப்பார்கள். பணம் கொடுக்கவில்லை என்றவுடன் வேதனை வரும்.

அப்பொழுது அந்தப் பட படப்பு வரும். “ஜில்” என்று உடலில் நடுக்கம் வரும். முதலில் செய்துவிடுகிறோம். உடலுக்குள் ஒன்றுக்கொன்று போர் ஆகும் பொழுது எதுவும் இயக்கம் இல்லை என்கிற பொழுது ஜில் என்று ஆகின்றது.

எப்படியோ மயக்கம் வருகின்றது.., தலை சுற்றுகின்றது..,. இது எதனால் வருகின்றது? உடலுக்குள் நடக்கும் இந்தப் போர் முறைகள். முதலில் தெரிந்து கொள்கின்றோம். அணுக்கள் நமக்குள் இப்படி ஆனவுடன் போர் செய்தே தான் தீரும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும். இராமாயணப் போர் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மகாபாரதப் போர் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.