இராமேஸ்வரம் என்றால் தன்னை அறியச் செய்யக்கூடிய நிலைகள் பெற்றது. அதுதான்
தனுசு கோடி.
நாம் எத்தனையோ உடல்கள் பெற்று இன்று மனிதனாக வந்துள்ளோம். கோடிக்கரை என்ற எல்லையில்
இன்று இருக்கின்றோம்.
அதே சமயத்தில் தனுசு கோடி இதையெல்லாம் வென்றவன் துருவ நட்சத்திரம் அந்தக் கடல்
பகுதிக்குப் போனவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் பார்க்கலாம்.
அதன் உணர்வைக் கவர்ந்து அந்த எல்லையை வைத்து எடுத்துத் தீமைகளை வெல்லக்கூடிய
சக்தி பெறவேண்டும் என்பதற்காகத்தான் ஞானிகள் சாஸ்திரங்களை வடித்தார்கள்.
ஆனால், இன்று செய்யக்கூடிய நிலைகள் காசைக் கொடுத்துவிட்டு மோட்சத்திற்கு
அனுப்பக்கூடிய இடம் சொர்க்கம் என்று சொல்லிக் கொண்டு செய்தால் எங்கே போகின்றது?
இதுவெல்லாம் அறியாமை. அவர்களுக்கும் இது தெரியாது.
ஏனென்றால் காலத்தால் அன்றைய அரசர் வழி தலைகீழாக மாற்றிய உணர்வு கொண்டுதான்
நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, பௌர்ணமி போன்று முழுமை பெறக்கூடிய
நாம் இதிலிருந்து பிரிந்து ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றியமைக்கும்
திறன் உள்ளவராக வர வேண்டும். பதிவின் எண்ணம் உங்களுக்கு வரும்.
ஒரு எஞ்சினியர் படித்துக் கொண்டு வருகின்றார். ஒரு இயந்திரத்தில் இந்தெந்தக்
காலங்களில் பழுது வருகிறதென்றால் அது ஏன்? என்று சிந்தித்துத் திருத்துகின்றார்.
அதே மாதிரி உங்களிடம் இப்பொழுது எஞ்சினியரை அனுப்புகின்றோம். இங்கே
உங்களுக்குள் பதிவான பிற்பாடு என்ன செய்கின்றோம்?
வாழ்க்கையில் எதில் தவறு வருகின்றது? என்று உடனே இது மாற்றியமைத்து இப்படித்தான்
என்று உங்களுக்குள் இந்த உணர்வு நினைவு வரும். தப்பைத் திருத்த உங்களுக்குள்
எண்ணியதுதான் உயிர் இயக்குகின்றது.
எல்லாம் காற்றில் உள்ளது.
அதை மாற்றிக் கொள்ள இந்த உணர்வைச் செய்தால் நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை
உங்கள் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.
ஆகவே, நாம் அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்தால்
நமக்குள் வரும் துயரங்களை மாற்றி அதில் இருள் என்ற நிலையை நீக்கி ஒளி என்ற உணர்வைக்
கொண்டு வரும்.
அதுதான் தனுசு கோடி. நாம் ஒளியாக முடியும்.
இல்லை என்றால் சாமி செய்யும் சாமியார் செய்வான் என்றால் போக வேண்டியதுதான்.
அவர்களுக்குக் காசைக் கொடுத்துவிட்டு இதையும் செய்தேன் அதையும் செய்தேன் என்று
சொல்லிக் கொண்டு மீண்டும் சிவ தனுசுக்கு வந்துவிட வேண்டியதுதான்.
சொல்வது உங்களுக்கு நன்கு அர்த்தமாகின்றதா?
எண்ணத்தால் உருவாக்கப்பட்டதுதான் இராமேஸ்வரம் என்ற இந்த ஈஸ்வரலோகத்தை நாம்
எப்படி உருவாக்க வேண்டும்?
இந்த உடலுக்குப் பின் என்ன என்பதைத்தான் இப்பொழுது துருவ நட்சத்திரத்தின்
உணர்வை நீங்கள் பெற்று அதன் உணர்வு கொண்டு தீமைகளை நீக்கி பொருளறிந்து செயல்படும்
சக்தி நீங்கள் பெறமுடியும்.
ஆகவே, கணவனும் மனைவியும் அவசியம் எந்த ஊரில் இருந்தாலும் சரி. அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், உடல்; முழுவதும் படர வேண்டும் எங்கள்
ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க
வேண்டும் என்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் இரண்டு
பேரும் இதை எண்ணினாலே போதும் வேண்டும்.
இந்தச் சக்தியைக் காட்டிலும் வேறு எந்தச் சக்தியும் இல்லை.
அதே சமயத்தில் கணவரோ, மனைவியோ இல்லை. உடலை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டால்
எப்படி எண்ண வேண்டும்?
அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் உண்டு. உடலை விட்டுப் பிரிந்தால் இந்த
உணர்வின் தன்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய
வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு பரவிய உணர்வுகள் அடிக்கடி அங்கே
அனுப்பிவிட்டால் அங்கே கரைக்கப்படுகின்றது. நமக்குள் அந்த அருள் உணர்வுகள்
சேர்க்கப்படுகின்றது.
ஆக, புவியின் ஈர்ப்போ சிவ தனுசிற்கோ வருவதில்லை. விஷ்ணு தனுசாக மாற்றிவிடுகின்றது.