இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை
நம்மிடம் வந்து சொல்கிறார்கள்.
அதைப் பார்த்துவிட்டு அப்புறம் “ஐய்யய்யோ...,” என்று அலறுகின்றோம்.
அவர்கள் சொன்னவுடனே அந்த உணர்வு பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தான் வருகின்றது. “சரி
நடக்கின்றது..., நாம் ஏன் அங்கு போக வேண்டும்..,?” என்று எண்ணுகின்றோமா என்றால் இல்லை.
ரோட்டில் போகிறோம். ரோட்டில் போய்கொண்டிருக்கும் போது ஒரு விபத்து நடக்கின்றது.
அடிபட்டுக் கீழே விழுந்துவிடுகின்றான். விழுந்து அங்கே நசுங்கிக் கிடக்கின்றது.
உடனே கூட்டம் கூடிவிடுகின்றது.
“என்ன கூட்டம்.., எதனால்?” என்று கேட்டவுடன் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள்.
சரி என்ன என்று தான் பார்த்துவிடுவோம் என்று அதை உற்று நோக்கிப் பய உணர்வோடு
இதைப் பார்ப்பார்கள்.
அவன் எப்படி நசுங்கியிருந்தாலும் அந்த உணர்வுகள் இங்கே வந்து விடுகின்றது.
இரவிலே என்ன ஆகின்றது?
கனவிலே காட்சிகள், வண்டியில் போகின்ற மாதிரி இருக்கின்றது, நசுக்குகின்ற
மாதிரித் தெரிகிறது. அதனால் என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை, மற்ற வேலைகளைச்
செய்ய முடியவில்லை என்பார்கள்.
எல்லாமே தெரிகின்றது. விபத்தைப் போய்ப் பார்த்தபின் குறைந்தது 4 நாட்களுக்கு
இப்படித் தான் இருக்கின்றது. இப்படி அதே உணர்வுகள் அதிகமானபின் அந்த பயத்தினாலே
மனிதன் தன் சிந்தனையை இழந்துவிடுவான்.
ஏனென்றால், புலனறிவால் நாம் அறிந்தாலும் கூட நமக்குள் பலவீனமான நிலைகள்
இருக்கின்றது. அதை அறியப்படும்போது அதன் உணர்வை நுகர்ந்தால் நமக்குத் தீமை என்று
நினைத்தாலும் அதை நாம் விடுவதில்லை. அதை நுகர்ந்து பார்க்கின்றோம்.
இப்படி நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று
இயக்குகின்றது. ஆக, தெரிந்து கொள்ளக்கூடிய விருப்பம் தான் வருகின்றது.
அது தெரிந்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்ற பின் தான் தெரிய
வருகின்றது.
அவன் பயத்தால் எப்படித் துடித்தானோ நுகர்ந்த உணர்வுகள் பய உணர்ச்சிகளை நம்
இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களுக்குள் சேர்ந்து விடுகின்றது.
அவன் எப்படிப் பதட்டம் அடைந்தானோ அது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குள் இதைக்
கண்டபின் உணர்ச்சியால் வெப்பம் ஆகின்றது.
அதே மாதிரி அந்தப் பய அலைகள் வந்தால் என்ன செய்யும்?
ஒன்றுமே செய்யாமல் சும்மா ஒருவன் படுத்திருந்தால் கூட பார்த்தால் பயம்
வருகின்றது. அவன் செத்துப் போய்விட்டானா? என்று பயந்த அதே உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.
அதே சமயத்தில் வீட்டிற்குள்ளே இருந்தாலும் கூட ஒன்றை நாம் பார்த்தவுடனே அந்த
நினைவு வரும். “ஓ..,” அங்கே பார்த்த நிலைகள் இங்கேதான் இருக்கின்றது என்று வீட்டில்
படுத்திருந்தால் கூட இந்த நினைவு வருகிறது.
அப்போது இதில் எது அறிகிறது? நம் உடலில் எதைப் பதிவு செய்தோமோ இந்தப்
புலனறிவுதான் நம்மை இப்படிச் செய்கின்றது. தெளிவாகச் செய்யும் நம் செயலாக்கங்கள் அனைத்தும்
பலவீனமடைகின்றது.
இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க நாம் என்ன செய்யவேண்டும்?
விபத்துக்களையோ மற்ற எதிர்பாராத சம்பவங்களையோ பார்க்க நேர்ந்தால், கேட்க நேர்ந்தால்
உடனே நம் கண்ணின் நினைவினை “ஓம் ஈஸ்வரா” என்று நம் உயிரின் பால் செலுத்த வேண்டும்.
பின் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, அது எங்கள்
உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று வானை நோக்கி ஏங்கித் தியானித்து அந்தச்
சக்திகளை உடலுக்குள் இணைக்கச் செய்ய வேண்டும்.
பின், அடிபட்டவர்கள் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வினைப்
பாய்ச்சுதல் வேண்டும்.
இவ்வாறு செய்தால் நமக்குள் புகும் அதிர்ச்சியான உணர்வுகளை துருவ மகரிஷிகளின்
உணர்வலைகள் அடக்கிவிடும். மன பலம் கிடைக்கும்.