இன்று இந்த மனிதனால் விஞ்ஞான
அறிவினால் வந்த இந்த விஷத் தன்மைகள் அது மேகங்களிலே படர்ந்து மழை நீருடன் கலந்து அதன்
மூலம்
விஷத் தன்மைகள் இந்தப் பூமியில் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது.
அந்த விஷத் தன்மையான உணர்வுகள் தாவர இனத்திலும் படர்கின்றது.
மழைக் காலங்களில் பார்த்தோம்
என்றால் விஷக் கிருமிகளும் கடும் நோய்களும் தாவர இனங்களில் ஒரு பக்கம் ஒன்று நன்றாக
விளைந்தாலும் இன்னொரு பக்கம் தீமைகள் கொண்டு விளைச்சலை மாற்றிவிடுகிறது.
ஒர் வேதனைப்பட்ட மனிதன்
கண் கொண்டு நீரை ஒரு செடிக்கு ஊற்றினால் இதனுடன் கலந்து அந்தச் செடி வாடிவிடும். அதே
சமயத்தில் மகிழ்ச்சி கொண்ட உணர்வுடன் நீரை ஊற்றினால் அந்தச் செடி நன்றாக வளரும்.
அதே சமயத்தில் ஒரு பாடலைப்
பாடிக் கொண்டே ஒரு செடிக்கு நீரை ஊற்றினால் அந்தச் செடி மகிழ்ச்சி கொண்ட நிலையில் அழகான
நிலைகளில் வளரும்.
ஆக, ஒரு மனிதன் பாடலைப்
பாடி அதன் உணர்வால் மகிழ்வான் என்றால் அந்த உணர்வு கூடி அவன் உடலில் அழகென்ற நிலை வரும்,
மகிழ்ச்சி என்ற நிலை வரும்.
மழை நீர் மூலமாகத்தான் தாவர இனங்கள் வளர்ந்தது.
அதை நாம் உணவாக உட்கொள்கிறோம்.
அந்த உணர்வின் தன்மை நமக்குள் உண்டு.
நாம் நினைவில் கொண்டால்
எதன் உணர்வை நமக்குள் பெற்றோமோ இதைக் கலந்து அந்த மேகத்துடன் கூட்டச் செய்யும்போது
நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள் மேகங்களுடன் கலந்து நல்ல மழையாக நாம் பெய்யச் செய்ய
முடியும்.
நமது நினைவலைகள் அனைத்தையும்
அந்த மழை மேகத்துடன் கலக்கச் செய்யும்போது அங்கே ஊருக்குள்ளும் பகைமை உணர்வை மாற்றிடும்
சக்தி பெறுகிறது.
அகஸ்திய மாமமகரிஷிகளின் அருள் சக்தியும், துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும், சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும், மேகங்களில் படரவேண்டும்
என்ற உணர்வை நாம் சொல்லாக
வெளிப்படுத்தும் போது
இந்த உணர்வுகள் அங்கே அந்த
உணர்ச்சிகளாக மாற்றப்பட்டு
ஆக, மனிதனால் உருவாக்கப்பட்ட
தீமைகளை
மேகங்களிலிருந்து கலைக்கச்
செய்து
நல்ல மழை நீராகப் பெய்யும்போது
அதிலிருந்து நல்ல அணுக்களாகத்
தாவர இனங்களில் வளர்க்கப்பட்டு
அதன் மலம் தாவர இனங்களுக்கு
நல்ல உரமாகின்றது.
உயர்ந்த குணங்களை எடுக்கும் பொழுது
அதனின் மலம் நம் உடலில்
நல்ல உடலாக மாற்றுகின்றது.
தீய உணர்வுகளை எடுக்கும்போது
தீய அணுக்கள் பெருக்கப்பட்டு
நம் உடலில் நோயாக மாற்றுகிறது.
இதைப் போன்றுதான் மனித
உடலில் உருவான இந்த உணர்வுகள் கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் மழை
மேகத்துடன் கலக்கச் செய்யும்போது அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் தாவர இனங்களில்
பரவி தாவர இனங்களில் நோய்கள் வராது தடுக்கச் செய்யலாம்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும்
கூட்டமைப்பாக மழை மேகங்களில் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாகப் பரவச் செய்ய வேண்டும்.
ஆங்காங்கு ஒவ்வொரு ஊரிலும்
உள்ளவர்கள் இதே போன்றே மகரிஷிகளின் அருள் உணர்வை மேகங்களில் கலக்கச் செய்தால்
இந்த உணர்வுகள் அந்த ஊரில்
படர்கின்றது.
தீமை என்ற அணுக்களை மாற்றுகின்றது.
ஆக, மழை நீருடன் கொட்டுகின்றது.
இந்த உணர்வுகளில் தாவர
இனங்களில் பட்டால் அந்த நல்ல அணுக்கள் அங்கே உருவாகின்றது. தாவர இனங்களுக்கு வரும்
நோய்களிலிருந்து மீட்ட முடியும். தாவர இனங்களைச் செழித்து வளரச் செய்ய முடியும்.
இதை நீங்கள் அனைவருமே ஒரு
கூட்டமைப்பாக இருந்து செயல்படுத்துங்கள். இதன் உண்மையின்
உணர்வை அறியலாம்.