விஞ்ஞானிகள் செயற்கை கோள்
துணை கொண்டு கம்ப்யூட்டர் மூலம் எத்தனையோ கணக்கீடுகளைச் செய்கின்றனர், உலகம் முழுவதற்கும்
இணைக்கின்றனர்.
இன்று விஞ்ஞானிகள், ஆனால், அன்று ஸ்தபதி.
அதாவது பண்டைய காலங்களில்
வான இயலின் உணர்வுகள் வருவதை கணக்குகள் இட்டனர். அவர்கள் ஸ்தபதி.
ஸ்தபதி என்றால் ஒரு உணர்வின்
தன்மை தனக்குள் இணைத்து இணைத்த
உணர்வின் தன்மையை இணைந்து வாழச் செய்பவர்கள்.
அதாவது மற்றதை ஒன்றாக இணைத்து
அதன் உணர்வின் தன்மை கொண்டு
பிரபஞ்சத்தின் இயக்கம் அது - நட்சத்திரங்கள் எப்படி என்றும்
இணைத்த உணர்வுகள் கொண்டு
தெய்வம் என்றும்
அந்த உணர்வுக்கொப்ப அந்த
நல்ல உணர்வுகளை நாம் கவர்வதற்காக
ஆலயங்களை நிர்மாணித்தார்கள் ஸ்தபதி.
27 நட்சத்திரங்களானாலும்
48 கோள்களின் உணர்வுகள் அது அந்த நட்சத்திரங்களுடன் இணையும் பாதையில் அதனின் உணர்வுகளை
சூரியன் கவரும் நிலையும் இதன் அலைகள் படரும் நிலைகளில் “ராசி” என்று ஆகிறது
இப்படி 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு
அந்த ராசி இணைந்து வளரும்போது
ஒன்றாக இணைந்து
ஒரு உணர்வின் தன்மை கருத்தன்மை
பெறும் என்பதை அறிந்தவன் ஸ்தபதி.
அது இணைத்து இந்த 12 ராசியின்
உணர்வுகள் வரப்படும்போது அந்த இணைத்த உணர்வின் தன்மையை அந்த ராசிகளில் இந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் மேல் படும்.
இந்த உணர்வின் தன்மை அடைந்த
பின், இதற்குள் துவாரம் எங்கிருக்கும் என்று நாம் அறிய முடியாது.
ஆக, சூரியனின் ஒளிக்கற்றைகள்
12வது ராசியைக் கடந்து
உணர்வின் தன்மை ஒன்றாக
இணைக்கும்
ஆலயத்திற்குள் உருவத்தை அமைத்து
அருவ நிலைகள் வரும்போது
நெற்றியிலே இது உருவாகும்.
ஆக, நம் உயிரின் உணர்வுகள்
வருவது போல இந்த உணர்வை நுகரப்படும் அதன் அளவை நாம் நுகர்ந்து உணர்வின் தன்மை நாம் நுகரப்படும்போது நம் உயிரிலே இணைந்து
உயர்ந்த குணங்களை நமக்குள்
வளர்க்கும் தன்மை வருவதற்காக
ஸ்தபதிகள் இவ்வாறு ஆலயத்தை
அமைத்தனர்.
ஆனால், நாம் தரித்திரத்தையும்,
கஷ்டத்தையும் துயரத்தையும் எண்ணி ஆலயத்திற்குச் சென்றால் நமது ராசிகள் அது பலன் தராது.
எதன் உணர்வின் தன்மையை
நாம் எடுத்தோமோ தீமையின் உணர்வை எடுத்தால் அதன் ராசிதான் நமக்குள் தீமை என்ற நிலைகள்
விளையும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து
விடுபடுவதற்கு இவ்வாறு ஆலயங்களை அமைத்து நமது பக்குவ நிலைகளை அமைப்பதற்குத்தான் ஆலயங்களை
அமைத்தனர்.
உயர்ந்த நிலை ஒவ்வொருவரும்
பெறவேண்டும் என்று நம் முன்னோர்கள் நிர்மாணித்த ஆலயத்திற்குச் சென்று அவர்கள் சொன்ன முறைப்படி நாம் விண்ணுலக ஆற்றலைப் பெறுகின்றோமா...?
மாறாக நாம் எதை எண்ணுகிறோம்?
சற்று சிந்தித்துப் பாருங்கள்.