ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 20, 2015

விஞ்ஞானியின் செயலுக்கும் மெய்ஞானியின் செயலுக்கும் உண்டான வித்தியாசம்

இன்று விஞ்ஞானி எத்தனையோ நிலைகளைச் செய்கின்றான். ஒருவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?

ஒரு அணுவின் தன்மையை அதற்குண்டான கருத்தன்மை கொண்டு மனிதனாக உருவாக்கிய விந்துகளிலிருந்து அதை ட்யூபுகளில் வைக்கப்பட்டு மனித அறைக்குள் வைக்கப்பட்டு அதன் உணர்வின் உணர்ச்சிகளை உருவாக்குகின்றான்.

ஆனால், இந்த ட்யூபுகளில் வைக்கப்படும்போது அந்த உணர்வுகள் எவ்வாறு செயல்படுகிறது என்ற நிலையும் விஞ்ஞானி கண்டறிகின்றான்.

இவ்வாறு இயற்கையின் உணர்வுகளைக் கண்டறியும் உண்மைகளை இன்றும் வெளிப்படுத்துகின்றான். ஆனால், இது மற்ற கருவினை எடுத்து உணர்வின் தன்மையை உருவாக்குகின்றான்.

ஆனால், அன்று மெய்ஞானியோ அவன் செய்த செயல் தனக்குள் அகண்ட அண்டத்தின் உணர்வின் உணர்வுகளை தன் உடலுக்குள் சேர்ப்பித்தான்.

விண்ணின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து
அவன் எதை எதையெல்லாம் உருவாக்க வேண்டும் என்று
அவன் நினைவாற்றலை மற்றொன்றின் மேல் பாய்ச்சப்படும்போது
அந்த உணர்வின் தன்மை கருவாகி
அதன் உணர்வுகளை உருவாக்குகின்றது.

அந்த மெய்ஞானி தன் உணர்வின் தன்மை கொண்டு ஒருவருக்குப் புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் தன் உணர்வின் தன்மையைப் பார்வையில் செலுத்தி அவன் வேண்டிய வரத்தை உனக்குக் குழந்தை இந்த வழியில் பிறக்கும் என்றான்.

உணர்வின் தன்மை செவிவழி கூறினால்
       அந்த உணர்வுகள் கண் வழி கவர்ந்து
              மூக்கு வழி நுகர்ந்து
                     உயிரிலே உராய்ந்து
                            உணர்ச்சிகள் உடலிலே கலந்து
                                   கருத்தன்மை அடைகின்றது.

ஆகவே, அவன் கூறிய உணர்வுகளுக்கும் இன்று விஞ்ஞானிகள் செயல்படும் நிலைகளுக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு.

இன்று டாக்டர்கள் மருந்தைக் கொடுத்து இந்தெந்த உணவுகளை உட்கொள்ளாது நீ இருந்தால் உன் உடல் பாதுகாப்பாக இருக்கும். சிறிது காலம் தான் வாழ முடியும், நீடித்த காலம் வாழ முடியாது.

எந்த உறுப்பின் தன்மையில் நாம் வேதனை என்ற உணர்வுகளை ஏற்கின்றோமோ அந்த உறுப்புகளில் வேதனை என்ற அணுக்கள் பெருக்க அந்த உறுப்பையே சிதைய வைக்கின்றது.

டாக்டர்கள் பழுதான அந்த உறுப்பை அகற்றிவிட்டு செயற்கை உறுப்புகளைச் செயல்படுத்தி மனிதனை வாழச் செய்கின்றனர்.

அப்படி வாழ்ந்தாலும் நோய்வாய்ப்பட்டவன் அவன் சுவாசிக்கும் உணர்வுகள் “நமக்கு இப்படி ஆகிவிட்டதே..,” என்ற வேதனை உணர்வுகளைத்தான் சுவாசிக்க முடியும்.

உறுப்புகளை மாற்றினாலும் சிறிது காலமே அவன் வாழும் காலத்தில் மீண்டும் அவன் வேதனையைச் சுவாசித்து மற்ற உறுப்புகளையும் சீர் கெடச் செய்து விடுகின்றான்.

இப்படி நாம் நுகரும் உணர்வுக்கொப்ப டாக்டரால் சீர்படுத்தப்பட்டாலும் சிறிது காலமே வாழ்கின்றோம். பின் இந்த உணர்வின் த்ன்மை எதனை நாம் அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதற்கொப்ப அடுத்த உடலை உருவாக்கிவிடுகின்றது நமது உயிர்.

இன்று உறுப்புகளை மாற்றி செயற்கை உறுப்புகளைப் பொருத்தி நாம் செயல்பட்டாலும் அடுத்த உடல் பெறும்போது இதைப் போல உறுப்புகள் இல்லாத உணர்வின் தன்மை அணுக்கள் சிறுத்து
அதற்குத்தக்க உறுப்புகளை மாற்றிவிடுகின்றது,
உடல்களை மாற்றிவிடுகின்றது நம் உயிர்.
இதுதான் இயற்கையின் நிலைகள்.

குறுகிய காலம் நாம் வாழ்வதற்கு இன்று டாக்டர்களிடம் எத்தனை நரக வேதனைப்படுகின்றோம் என்பதனைப் பார்க்கலாம்.

ஆனால், முந்தி கடும் நோயினால் அவதிப்பட்டால் கேன்சர் என்றாலும் ஞானிகள் தன் பார்வையைச் செலுத்தி அவன் பார்வையில் இந்த நஞ்சின் தன்மையை ஒடுக்கப்பட்டு அவனைப் பூரண குணப்படுத்தும் நிலையை உருவக்கினான்.

எல்லாம் கடந்த கால வாழ்க்கையில் இப்படிப் பூரண குணம் கிடைத்தாலும் அடுத்து அவன் மனிதனுக்கு பண்பும் பரிவும் அன்பும் அரவணைப்பும் அது பெறச் செய்தான்.

அருள் உணர்வுகளைத் தன்னுள் இணைத்து (நோய்வாய்ப்படவனுக்குள் இணைத்து)
அதன் வழி நீ வாழ்வாய் என்றால்
இதன் வழி கொண்டு உனக்குள் நல்ல உணர்வுகள் வளர்க்கப்பட்டு
இதிலிருந்து நீ பிறவியில்லா நிலை அடைகின்றாய்
என்று நற்காரணங்களை ஊட்டி
அதன் வழி அருள் வழியில் வாழச் செய்தான்.