ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2015

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிரிலே மோதச் செய்தால் விஷ்ணு தனுசு - ஒளியாக மாற்றும்

விஷ்ணு தனுசு என்றால் ஒரு மின் கதிரின் உணர்வுகள் ஒளியாக மாறும் தன்மை.

ஒரு கல்லைத் தட்டினால் ஒளிரும் தன்மை அடைந்து அது வெகுதூரம் வெளிச்சம் தெரிந்து இருளின் தன்மை அகற்றுகிறது. பொருளின் தன்மையைக் கூடக் காண முடிகிறது.

ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் தன்மையை நம் உயிரிலே மோதச் செய்யும்போது
இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே சென்று இது மோதலாகி
விஷத்தின் தன்மையை மாற்றி
உணர்வினை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.

இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நொடியிலும் சலிப்போ, சஞ்சலமோ, சங்கடமோ கோபமோ, குரோதமோ, வெறுப்போ, வேதனையோ பிறர் செய்யும் உணர்வுகளை நுகரப்படும்போதுதான் நமக்குள் இருள் சூழும் நிலைகள் வருகிறது.

அதே சமயத்தில் சிந்தனயற்ற நிலைகளும் பிறருக்கு நாம் தீங்கு செய்யும் உணர்வுகளும் அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகள் நம் உடலிலேயும் தீங்குகள் ஏற்படக் காரணமாகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மாற்றிடும் நிலை “கார்த்திகேயா” என்று பல கோடித் தீமைகளை நீக்கிய இந்த உணர்வுகள் வள்ளி, வலிமைமிக்க சக்தி தெய்வானை.

ஆகவே, இந்த வலிமைமிக்க சக்தி கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சினை வென்றிட்ட அந்தத் துருவ நட்சத்திரத்தினை நுகர்ந்து அதன் மேல் இச்சைப்பட்டு உங்கள் உடலுக்குள் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அது தெய்வ ஆணையாக இருளை நீக்கிடும் அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து அதன் கிரியையாக உங்கள் வாழ்க்கையும் செயலும் அமைந்து
எதனின் வலு பெறுகின்றோமோ
அதன் வழி நாம் விண் செல்கிறோம்,

குறுகிய காலம் நாம் வாழும் நிலைகளில் இந்த உடல் மேல் இச்சைப்பட்டோம் என்றால் பிறர் செய்யும் குறைகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்து, “எனக்கு இப்படிச் செய்கிறார்கள்.., இப்படிச் செய்கிறார்கள்..,” என்று எண்ணி அதை நாம் மேலும் வளர்த்துக் கொள்ளும் நிலை வருகிறது.

எத்தகையை நிலை வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஆக, உடலின் தன்மை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் நுகர்ந்து நம் உடலிலே பரப்பச் செய்யும்போது அதனின் இச்சை நம் உடலில் இருளை நீக்கிடும் உணர்வுகள் இது கிரியை ஆகி நம் எண்ணம் செய்யும்.

அதன் வழிப்படி தெய்வ ஆணையாக இந்த உடலில் நன்மை பயக்கும் உணர்வும், பிறருக்கு நன்மை செய்யும் உணர்வும் இரண்டுமே வருகின்றது.

ஆகவே, இதைப் போன்று நம் வாழ்க்கையில் பெருக வேண்டும். எமது அருளாசிகள்.